திருப்புகழ் 556 சத்தி பாணீ  (திருசிராப்பள்ளி)
Thiruppugazh 556 saththipANee  (thiruchirAppaLLi)
Thiruppugazh - 556 saththipANee - thiruchirAppaLLiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தத்த தானா தனாதன தத்த தானா தனாதன
     தத்த தானா தனாதன ...... தந்ததான

......... பாடல் .........

சத்தி பாணீ நமோநம முத்தி ஞானீ நமோநம
     தத்வ வாதீ நமோநம ...... விந்துநாத

சத்து ரூபா நமோநம ரத்ந தீபா நமோநம
     தற்ப்ர தாபா நமோநம ...... என்றுபாடும்

பத்தி பூணா மலேயுல கத்தின் மானார் சவாதகில்
     பச்சை பாடீர பூஷித ...... கொங்கைமேல்வீழ்

பட்டி மாடான நானுனை விட்டிரா மேயு லோகித
     பத்ம சீர்பாத நீயினி ...... வந்துதாராய்

அத்ர தேவா யுதாசுர ருக்ர சேனா பதீசுசி
     யர்க்ய சோமாசி யாகுரு ...... சம்ப்ரதாயா

அர்ச்ச னாவாக னாவய லிக்குள் வாழ்நாய காபுய
     அக்ஷ மாலா தராகுற ...... மங்கைகோவே

சித்ர கோலா கலாவிர லக்ஷ்மி சாதா ரதாபல
     திக்கு பாலா சிவாகம ...... தந்த்ரபோதா

சிட்ட நாதா சிராமலை யப்பர் ஸ்வாமீ மகாவ்ருத
     தெர்ப்பை யாசார வேதியர் ...... தம்பிரானே.

......... சொல் விளக்கம் .........

சத்தி பாணீ நமோநம ... ஞான சக்தி வேலைக் கரத்தில் ஏந்தியவனே,
போற்றி போற்றி,

முத்தி ஞானீ நமோநம ... முக்தியைத் தரவல்ல ஞான பண்டிதா,
போற்றி போற்றி,

தத்வ ஆதீ நமோநம ... தத்துவங்களுக்கு முதல்வனாய் நிற்பவனே,
போற்றி போற்றி,

விந்துநாத சத்து ரூபா நமோநம ... சிவதத்துவமாகிய விந்து, சக்தி
தத்துவமாகிய நாதம் இரண்டிற்கும் சத்தான உண்மை உருவம்
வாய்த்தவனே, போற்றி போற்றி,

ரத்ந தீபா நமோநம ... மணிவிளக்கைப் போல் ஒளிர்பவனே,
போற்றி போற்றி,

தற்ப்ரதாபா நமோநம ... தனக்குத் தானே நிகரான கீர்த்தியை
உடையவனே, போற்றி போற்றி,

என்றுபாடும் பத்தி பூணாமலே ... என்று பாடித் துதிக்கும் பக்தியை
மேற்கொள்ளாமல்,

உலகத்தின் மானார் ... இவ்வுலகிலே மான் போன்ற பெண்களது

சவாது அகில் பச்சை பாடீர பூஷித ... ஜவ்வாது, அகிற்சாந்து,
பச்சைக்கற்பூரம், சந்தனம் ஆகிய நறுமணக் கலவையைப் பூசிய

கொங்கைமேல்வீழ் ... மார்பிலே வீழ்ந்து கிடக்கின்ற

பட்டி மாடான நான் ... திருட்டு மாடாகிய நான்

உனை விட்டிராமே ... உந்தனை விட்டுப் பிரியாமல் இருக்க,

உலோக இத பத்ம சீர்பாத ... உலகிற்கெல்லாம் நலம்தரும் தாமரை
போன்ற உன்சிறந்த பாதங்களை

நீயினி வந்துதாராய் ... இனியாகிலும் நீ என்முன் எழுந்தருளி வந்து
தந்தருள்வாயாக.

அத்ர தேவ ஆயுதா ... அஸ்திர (ஆயுத) தேவதையாகிய வேலாயுதத்தை
ஏந்தியவனே,

சுரர் உக்ர சேனாபதீ ... தேவர்களுக்கு மிக உக்கிரமான சேனாதிபதியே,

சுசி அர்க்ய சோமாசியா ... தூய்மையாக மந்திர நீரோடு
சோமரசத்தைப் பிழிந்து செய்யப்படும் யாகத்தில்

குரு சம்ப்ரதாயா ... குரு மூர்த்தியாக தொன்றுதொட்டு நின்று
வருபவனே,

அர்ச்சன ஆவாகனா ... அர்ச்சனைகளிலும், மந்திரத்தால்
வரவழைக்கப்படுவதிலும் வந்தருள்வோனே,

வயலிக்குள் வாழ்நாயகா ... வயலூரில் வாழ்கின்ற எங்கள் நாயகனே,

புய அக்ஷ மாலா தரா ... திருப்புயங்களில் ருத்திராட்ச மாலைகளை
அணிந்துள்ளவனே,

குற மங்கை கோவே ... குறப் பெண் வள்ளியின் கணவனே,

சித்ர கோலாகலா ... அழகும் ஆடம்பரமும் உடையவனே,

விர லக்ஷ்மி சாதா ... வீர லக்ஷ்மியாகிய பார்வதிக்குப் பிறந்தவனே
(ஜாதா),

ரதா ... இனிமை வாய்ந்தவனே (ர ா),

பல திக்கு பாலா ... திசைகள் பலவற்றையும் காப்பவனே,

சிவாகம தந்த்ரபோதா ... சிவ தத்துவத்தை விளக்கும் ஆகம
நூல்களை உபதேசிக்கும் குருவே,

சிட்ட நாதா ... ஞானிகளுக்கெல்லாம் தலைவனே,

சிராமலை யப்பர் ஸ்வாமீ ... திரிசிராமலையின் அப்பனாகிய
தாயுமானவருக்கும் குரு ஸ்வாமியே,

மகாவ்ருத தெர்ப்பை யாசார வேதியர் தம்பிரானே. ... சிறந்த
விரதங்களோடும், தர்ப்பைப் புல்லுடனும், ஆசாரத்துடனும் உள்ள
அந்தணர் அனைவருக்கும் தலைவனே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.827  pg 1.828  pg 1.829  pg 1.830 
 WIKI_urai Song number: 338 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 556 - sakthi pANee (thiruchirAppaLLi)

sakthi pANee namOnama mukthi nyAnee namOnama
     thathva vAdhee namOnama ...... vindhunAdha

saththu rUpA namOnama rathna dheepA namOnama
     thathprathApA namOnama ...... endrupAdum

bakthi pUNA malE ulagaththin mAnAr savAdhagil
     pacchai pAteera bUshitha ...... kongaimElveezh

patti mAdAna nAnunai vittirA mEyu lOgitha
     padhma seerpAdha neeyini ...... vandhuthArAy

athra dhEvA yudhAsurar ugra sEnA patheesuchi
     argya sOmAji yAguru ...... sampradhAyA

archanA vAganA vayalikkuL vAzh nAyakA buya
     aksha mAlA dharA kuRa ...... mangaikOvE

chithra kOlA kalAvira lakshmi jAthA rathApala
     dhikku pAlA sivakAma ...... thanthrabOdhA

chitta nAthA sirAmalai appar svAmee mahAvrutha
     dherbai AchAra vEdhiyar ...... thambirAnE.

......... Meaning .........

sakthi pANee namOnama: You hold the Spear of Sakthi representing Wisdom in Your hand, I bow to You, I bow to You;

mukthi nyAnee namOnama: You are the embodiment of Knowledge that can liberate me, I bow to You, I bow to You;

thathva Adhee namOnama: You are the foremost Thathva (tenet), I bow to You, I bow to You;

vindhunAdha saththu rUpA namOnama: You are the truest form of Shiva and Shakthi Thatvas, I bow to You, I bow to You;

rathna dheepA namOnama: You are the light emanating from the lamp made of precious gems, I bow to You, I bow to You;

thathprathApA namOnama: and You are the One whose fame is equal only to Yourself, I bow to You, I bow to You.

endrupAdum bakthi pUNAmalE: I never sang any of the above lines with devotion;

ulagaththin mAnAr: but desired all the deer-like women in this world

savAdhagil pacchai pAteera bUshitha kongaimElveezh: and lusted for their breasts full of fragrance from javvadhu, incence, camphor, sandal paste and other aromatic mixtures.

patti mAdAna nAn: I was straying away like a stealthy bull!

unai vittirAmEy: Just so that I never separate from You,

ulOgitha padhma seerpAdha neeyini vandhuthArAy: You must come to me at least now and grant Your great lotus-feet that bestow benefit on the entire world.

athra dhEvA yudhA: You have in Your hand the Spear that is the Leader of all weapons!

surar ugra sEnA pathee: You are the fierce commander-in-chief of the army of DEvAs!

suchi argya sOmAji yAguru sampradhAyA: Where pure offerings are made with holy water and SOmarasam (fermented honey) into sacrificial pyres, You preside traditionally as the Master!

archana AvAganA: You arrive at all floral offerings and all invocations with VEdic ManthrAs!

vayalikkuL vAzh nAyakA: You reside at VayalUr as the Leader!

buya aksha mAlA dharA: You wear the garlands made of rudhrAksha (seeds of a holy tree) on Your hallowed shoulders!

kuRa mangaikOvE: You are the King of VaLLi, the damsel of the KuRavAs!

chithra kOlA kalA: You are handsome and pompous!

vira lakshmi jAthA: You are born to PArvathi who is Lakshmi of Valour!

rathA: You are so sweet!

pala dhikku pAlA: You are the Protector of all directions!

sivakAma thanthrabOdhA: You are the best interpreter and teacher of Saivite scriptures!

chitta nAthA: You are the Leader of all wise saints!

sirAmalai appar svAmee: You are the Master of ThAyumAnavar (SivA) who is the Lord of ThirisirAmalai!

mahAvrutha dherbai AchAra vEdhiyar thambirAnE.: You are worshipped by the great brahmins who are strict disciplinarians, performing their rites religiously with dherbai - dry aRugam (cynodon) grass, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 556 saththi pANee - thiruchirAppaLLi

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]