திருப்புகழ் 550 அழுது அழுது ஆசார  (திருசிராப்பள்ளி)
Thiruppugazh 550 azhudhuazhudhuAsAra  (thiruchirAppaLLi)
Thiruppugazh - 550 azhudhuazhudhuAsAra - thiruchirAppaLLiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதன தானான தானன தனதன தானான தானன
     தனதன தானான தானன ...... தந்ததான

......... பாடல் .........

அழுதழு தாசார நேசமு முடையவர் போலேபொய் சூழ்வுறும்
     அசடிகள் மாலான காமுகர் ...... பொன்கொடாநாள்

அவருடன் வாய்பேசி டாமையு முனிதலு மாறாத தோஷிகள்
     அறுதியில் காசாசை வேசைகள் ...... நஞ்சுதோயும்

விழிகளி னால்மாட வீதியில் முலைகளை யோராம லாரொடும்
     விலையிடு மாமாய ரூபிகள் ...... பண்பிலாத

விரகிகள் வேதாள மோவென முறையிடு கோமாள மூளிகள்
     வினைசெய லாலேயெ னாவியு ...... யங்கலாமோ

வழியினில் வாழ்ஞான போதக பரமசு வாமீவ ரோதய
     வயலியில் வேலாயு தாவரை ...... யெங்குமானாய்

மதுரையின் மீதால வாயினில் எதிரம ணாரோரெ ணாயிரர்
     மறிகழு மீதேற நீறுப ...... ரந்துலாவச்

செழியனு மாளாக வாதுசெய் கவிமத சீகாழி மாமுனி
     சிவசிவ மாதேவ காவென ...... வந்துபாடும்

திருவுடை யாய்தீதி லாதவர் உமையொரு பாலான மேனியர்
     சிரகிரி வாழ்வான தேவர்கள் ...... தம்பிரானே.

......... சொல் விளக்கம் .........

அழுது அழுது ஆசார நேசமும் உடையவர் போலே பொய்
சூழ்வுறும் அசடிகள்
... மேலும் மேலும் அழுது ஒழுக்கம் வாய்ந்த நட்பு
உள்ளவர்கள் போல் பொய் வழியிலேயே சூழ்ச்சி செய்யும் மூடப் பெண்கள்,

மால் ஆன காமுகர் பொன் கொடா நாள் அவருடன் வாய்
பேசிடாமையும் முனிதலும் மாறாத தோஷிகள்
... தம் மீது
ஆசைப்படும் காமாந்தகர்கள் தமக்குப் பொருள் கொடுக்காத நாளில்
அவர்களோடு வாய் பேசாதிருத்தலும் கோபித்தலும் நீங்காத குற்றம்
உடையவர்கள்,

அறுதி இல் காசு ஆசை வேசைகள் ... எல்லை இல்லாத பொருள்
ஆசை கொண்ட பொது மகளிர்,

நஞ்சு தோயும் விழிகளினால் மாட வீதியில் முலைகளை
ஓராமல் ஆரோடும் விலை இடு மா மாய ரூபிகள்
... விஷம்
தோய்ந்துள்ள கண்களால் மாட வீதிகளில் தம் மார்பகங்களை ஆராயாமல்
எவர்க்கும் விலைக்கு விற்கும் மகாமாய உருவினர்,

பண்பிலாத விரகிகள் வேதாளமோ என முறையிடு கோமாள
மூளிகள்
... நற் குணம் இல்லாத காமிகள், பேய் பிசாசு என்று
சொல்லும்படி கூச்சலிட்டுக் கூத்தடிப்பவர், விகாரத்தினர்,

வினை செயலாலே என் ஆவியும் உயங்கலாமோ ...
(இத்தகையோரின்) சூழ்ச்சிச் செயல்களால் என் உயிர் வருந்தலாமோ?

வழியினில் வாழ் ஞான போதக பரம சுவாமீ வரோதய ...
நன்வழியில் வாழ்வதற்கான ஞானோபதேசம் செய்யவல்ல பரம
சுவாமியே, தேவர்கள் பெற்ற வரத்தால் தோன்றியவனே,

வயலியில் வேலாயுத வரை எங்கும் ஆனாய் ... வயலூரில் அமர்ந்த
வேலாயுதனே, மலைத்தலம் எங்கும் மகிழ்வுடன் வீற்றிருப்பவனே,

மதுரையின் மீது ஆலவாயினில் எதிர் அமணர் ஓரோர்
எ(ண்)ணாயிரர் மறி கழு மீது ஏற நீறு பரந்து உலாவ
...
மதுரையாகிய திருவாலவாய்த் தலத்திலே எதிர்த்து வந்த சமணர் சுமார்
எண்ணாயிரம் பேர் அழிபட்டு கழுவின் மீது ஏற, திருநீறு பரந்து விளங்க,

செழியனும் ஆளாக வாது செய் கவி மத சீகாழி மாமுனி ...
பாண்டிய அரசனும் அடிமைப்பட, வாது செய்து கவி மதத்தைப் பொழிந்த
சீகாழிப் பெரிய முனிவரும்,

சிவசிவ மா தேவ கா என வந்து பாடும் திரு உடையாய் ...
சிவசிவ மகாதேவா, காத்தருள் என்று (சிவபெருமானிடம்) சென்று பாடின
பெருஞ் செல்வம் பெற்றவருமான ஞானசம்பந்தரே,

தீது இலாதவர் உமை ஒரு பாலான மேனியர் சிர கிரி
வாழ்வான தேவர்கள் தம்பிரானே.
... தீது இல்லாதவரும், உமையை
ஒரு பாகத்தில் வைத்த திருமேனியரும் ஆன சிவபெருமானது திரிசிர
மலையில் வாழ்வு கொண்டிருப்பவனே, தேவர்களின் தம்பிரானே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.813  pg 1.814  pg 1.815  pg 1.816 
 WIKI_urai Song number: 332 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 550 - azhudhu azhudhu AsAra (thiruchirAppaLLi)

azhuthazhu thAsAra nEsamu mudaiyavar pOlEpoy sUzhvuRum
     asadikaL mAlAna kAmukar ...... ponkodAnAL

avarudan vAypEsi dAmaiyu munithalu mARAtha thOshikaL
     aRuthiyil kAsAsai vEsaikaL ...... nanjuthOyum

vizhikaLi nAlmAda veethiyil mulaikaLai yOrAma lArodum
     vilaiyidu mAmAya rUpikaL ...... paNpilAtha

virakikaL vEthALa mOvena muRaiyidu kOmALa mULikaL
     vinaiseya lAlEye nAviyu ...... yangalAmO

vazhiyinil vAzhnjAna pOthaka paramasu vAmeeva rOthaya
     vayaliyil vElAyu thAvarai ...... yengumAnAy

mathuraiyin meethAla vAyinil ethirama NArOre NAyirar
     maRikazhu meethERa neeRupa ...... ranthulAva

sezhiyanu mALAka vAthusey kavimatha seekAzhi mAmuni
     sivasiva mAthEva kAvena ...... vanthupAdum

thiruvudai yAytheethi lAthavar umaiyoru pAlAna mEniyar
     sirakiri vAzhvAna thEvarkaL ...... thambirAnE.

......... Meaning .........

azhuthu azhuthu AsAra nEsamum udaiyavar pOlE poy sUzhvuRum asadikaL: These foolish women whine repeatedly, feigning ethical friendship while scheming with ulterior motive;

mAl Ana kAmukar pon kodA nAL avarudan vAy pEsidAmaiyum munithalum mARAtha thOshikaL: on the days when their suitors fail to pay them, these girls, full of blemish, throw a fit of rage and refuse to converse with them;

aRuthi il kAsu Asai vEsaikaL: these whores have an unlimited hankering for money;

nanju thOyum vizhikaLinAl mAda veethiyil mulaikaLai OrAmal ArOdum vilai idu mA mAya rUpikaL: they are so highly illusive that with their poison-filled eyes they conclude an indiscriminate sale of their bosom to anyone in the big street;

paNpilAtha virakikaL vEthALamO ena muRaiyidu kOmALa mULikaL: they are fanatically passionate, bereft of any virtue; they are such uncouth dancers, shrieking aloud, looking like devils and fiends;

vinai seyalAlE en Aviyum uyangalAmO: is it fair that my life should suffer the cunning schemes of such whores?

vazhiyinil vAzh njAna pOthaka parama suvAmee varOthaya: You are capable of imparting true knowledge that leads to the righteous way, Oh Supreme Lord! Your manifestation was through the boons secured by the celestials!

vayaliyil vElAyutha varai engum AnAy: You have Your abode in VayalUr, Oh Lord with the spear! You reside with relish in all hilly places!

mathuraiyin meethu AlavAyinil ethir amaNar OrOr e(N)NAyirar maRi kazhu meethu ERa neeRu paranthu ulAva: In the sacred place ThiruvAlavAy of Mathurai, the confrontational ChamaNas, numbering eight thousand, were destroyed and sent to the gallows; the power of the holy ash prevailed;

sezhiyanum ALAka vAthu sey kavi matha seekAzhi mAmuni: PANdiya King Chezhiyan surrendered as Your slave; when You showered poems in the debate, Oh Great sage of SikAzhi!

sivasiva mA thEva kA ena vanthu pAdum thiru udaiyAy: Coming as the Poet ThirugnAna Sambandhar, You sang before Lord SivA "Oh Great Lord SivA, kindly protect" and obtained the tremendous wealth of His grace!

theethu ilAthavar umai oru pAlAna mEniyar sira kiri vAzhvAna thEvarkaL thambirAnE.: You reside in the mountain of Thirisira which belongs to Lord SivA, who is unblemished and has Mother UmA concorporate on one side of His body. You are the Great Lord of the celestials!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 550 azhudhu azhudhu AsAra - thiruchirAppaLLi

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]