திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 545 நீல மயில் சேரும் (பேறைநகர்) Thiruppugazh 545 neelamayilsErum (pERainagar) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தானதன தான தந்த தானதன தான தந்த தானதன தான தந்த ...... தனதான ......... பாடல் ......... நீலமயில் சேரு மந்தி மாலை நிக ராகி யந்த காரமிக வேநி றைந்த ...... குழலாலும் நீடுமதி ரேக இன்ப மாகியச லாப சந்த்ர னேர்தருமு கார விந்த ...... மதனாலும் ஆலினிக ரான வுந்தி யாலுமட வார்கள் தங்கள் ஆசைவலை வீசு கெண்டை ...... விழியாலும் ஆடியக டாமி சைந்த வார்முலைக ளாலு மந்த னாகிமயல் நானு ழன்று ...... திரிவேனோ கோலவுரு வாயெ ழுந்து பாரதனை யேயி டந்து கூவிடு முராரி விண்டு ...... திருமார்பன் கூடமுறை நீடு செம்பொன் மாமதலை யூடெ ழுந்த கோபவரி நார சிங்கன் ...... மருகோனே பீலிமயில் மீது றைந்து சூரர்தமை யேசெ யங்கொள் பேர்பெரிய வேல்கொள் செங்கை ...... முருகோனே பேடைமட ஓதி மங்கள் கூடிவிளை யாடு கின்ற பேறைநகர் வாழ வந்த ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... நீல மயில் சேரும் அந்தி மாலை நிகராகி அந்தகார மிகவே நிறைந்த குழலாலும் ... நீல நிறமான மயில்கள் சேர்ந்து விளையாடும் மாலைப் பொழுதுக்கு ஒப்பதாகி, பேரிருள் மிக்கு நிறைந்துள்ள கூந்தலாலும், நீடும் அதிரேக(ம்) இன்பமாகிய ச(ல்)லாப சந்த்ரன் நேர் தரு(ம்) முக அரவிந்தம் அதனாலும் ... நீடித்துள்ள மிக்க இன்பம் தருவதாகி இன்பமாய்ப் பேசத் தக்க, சந்திரனுக்கு ஒப்பான முகத் தாமரையாலும், ஆலின் நிகரான உந்தியாலும் மடவார்கள் தங்கள் ஆசை வலை வீசு கெண்டை விழியாலும் ... ஆலிலைக்கு ஒப்பான வயிற்றாலும், பெண்களின் மோக வலையை வீசுகின்ற கெண்டை மீன் போன்ற கண்களாலும், ஆடிய கடாம் இசைந்த வார் முலைகளாலும் அந்தனாகி ... கடைந்து எடுத்த குடம் போன்ற, கச்சு அணிந்த மார்பகங்களினாலும் கண்கள் மங்கி அறிவும் மயங்கியவனாகி, மயல் நானும் உழன்று திரிவேனோ ... காம மயக்கத்தில் நானும் கலங்கித் திரிவேனோ? கோல உருவாய் எழுந்து பார் அதனையே இடந்து கூவிடும் முராரி விண்டு திரு மார்பன் ... பன்றியின்* உருவோடு அவதரித்து, மண்ணைத் தோண்டிச் சென்று பூமியை மீட்டு வந்தவனும், முரன் என்னும் அசுரனுக்குப் பகைவனுமான முராரியாகிய திருமால், லக்ஷ்மியை மார்பில் வைத்தவன், கூடம் உறை நீடு செம்பொன் மா மதலை ஊடு எழுந்த கோப அரி நார சிங்கன் மருகோனே ... கூடத்தில் இருந்த பெரிய செம் பொன்னாலாகிய உயர்ந்த தூணில் தோன்றி எழுந்த, கோபம் நிறைந்த, நரசிங்க மூர்த்தியின் மருகனே, பீலி மயில் மீது உறைந்து சூரர் தமையே செயம் கொள் பேர் பெரிய வேல் கொள் செம் கை முருகோனே ... தோகை நிறைந்த மயில் மீது வீற்றிருந்து, சூரர்களை வென்ற, புகழ் மிக்க வேலாயுதத்தை ஏந்திய திருக்கையை உடைய முருகனே, பேடை மட ஓதிமங்கள் கூடி விளையாடுகின்ற ... இளம் பெண் அன்னங்கள் ஒன்று சேர்ந்து விளையாடும் பேறை நகர் வாழ வந்த பெருமாளே. ... பேறை நகர்** என்னும் ஊரில் வீற்றிருக்கும் பெருமாளே. |
* இரணியாக்ஷன் என்னும் அசுரன் பூமியைப் பாய் போலச் சுருட்டி எடுத்துக் கொண்டு பாதளத்தில் ஒளிந்து கொண்டான். திருமால் வராக அவதாரம் கொண்டு அவனை அழித்துப் பூமியை மேலே கொணர்ந்தார். |
** பேறைநகர் செங்கல்பட்டு மாவட்டத்தில் தொழுப்பேடு என்ற தலத்தின் அருகே உள்ளது. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 1.797 pg 1.798 pg 1.799 pg 1.800 WIKI_urai Song number: 327-1 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை Sorry, no audio recordings for this song |
Song 545 - neelamayil sErum (pERainagar) neelamayil sEru manthi mAlai nika rAki yantha kAramika vEni Raintha ...... kuzhalAlum needumathi rEka inpa mAkiyasa lApa chanthra nErtharumu kAra vintha ...... mathanAlum Alinika rAna vunthi yAlumada vArkaL thangaL Asaivalai veesu keNdai ...... vizhiyAlum Adiyaka dAmi saintha vArmulaika LAlu mandha nAkimayal nAnu zhanRu ...... thirivEnO kOlavuru vAye zhunthu pArathanai yEyi danthu kUvidu murAri viNdu ...... thirumArpan kUdamuRai needu sempon mAmathalai yUde zhuntha kOpavari nAra singan ...... marukOnE peelimayil meethu Rainthu cUrarthamai yEse yangoL pErperiya vElkoL sengai ...... murukOnE pEdaimada Othi mangaL kUdiviLai yAdu kinRa pERainakr vAzha vantha ...... perumALE. ......... Meaning ......... neela mayil sErum anthi mAlai nikarAki anthakAra mikavE niRaintha kuzhalAlum: By the pitch dark hair whose darkness is comparable to the evening when blue peacocks gather together to play around, needum athirEka(m) inpamAkiya sa(l)lApa chanthran nEr tharu(m) muka aravintham athanAlum: by the moon-like lotus face which induces exchange of sweet talk, the pleasure of which is long lasting, Alin nikarAna unthiyAlum madavArkaL thangaL Asai valai veesu keNdai vizhiyAlum: by the slim belly that resembles the banyan leaf, by the kendai-fish-like eyes of the women spreading the net of passion, Adiya kadAm isaintha vAr mulaikaLAlum andhanAki: and by the tight-fitting blouses that cover their bosom resembling the freshly moulded pots, I was blinded, losing my balance; mayal nAnum uzhanRu thirivEnO: am I to roam about aimlessly, struck by such delusory lust? kOla uruvAy ezhunthu pAr athanaiyE idanthu kUvidum murAri viNdu thiru mArpan: He took the incarnation in the form of a boar*, dug deep into the mud and rescued the earth; He is the enemy of the demon Muran and assumed the name MurAri; He is Lord VishNu holding the Goddess Lakshmi on His chest; kUdam uRai needu sempon mA mathalai Udu ezhuntha kOpa ari nAra singan marukOnE: He emerged from the tall pillar of reddish gold in the middle of the hall in the ferocious form of half-man and half-lion (Narasimham); You are the nephew of that VishNu! peeli mayil meethu uRainthu cUrar thamaiyE seyam koL pEr periya vEl koL sem kai murukOnE: Mounted elegantly on the peacock with a beautiful plume, You conquered the demon SUran and his clan with the famous spear held in Your hallowed hand, Oh MurugA! pEdai mada OthimangaL kUdi viLaiyAdukinRa pERai nakar vAzha vantha perumALE.: All the young female swans gather and play together in this place, PERainagar**, which is Your abode, Oh Great One! |
* The demon, HiraNyAkshan, rolled the earth as a mat and hid it under the nether world, PAthALam; Lord VishNu assumed the form of a great boar (VarAha avathAram), dug right down to the PAthALam, killed HiraNyAkshan and rescued the earth. |
** PERainakar is located near ThozhuppEdu in Chengalpattu District. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |