பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/800

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - மயிலம்) திருப்புகழ் உரை 327 தோகை நிறைந்த மயில் மீது வீற்றிருந்து சூராதியரைச் செயித்த கீர்த்தி மிக்க வேலாயுதத்தைக் கொண்ட திருக்கையை உடைய முருகனே! அறியாமை உள்ள பெண் அன்னங்கள் ஒன்று கூடி விளையாடுகின்ற பேறை நகரில் வீற்றிருந்தருளும் பெருமாளே! (நான் உழன்று திரிவேனோ) மயிலம் 328 கொலைத் தொழிலைத் தன்னிடத்தே அடக்கி உள்ள, சண்டை செய வல்ல, கண்ணானது அம்போ, வாளோ, விடம் நிறைந்து பாவத் தொழில் செய்ய வல்ல வேலோ, சேல் மீனோ, (காதில் உள்ள) குழையைத் தொடும் அளவும் உலவிவரும் மீனோ, மானோ, எனச் சொல்லத்தக்க மாதர்களின் குயிலின் குரல் போல் அமைந்த சிறந்த (இனிய) மொழி களாலே, கண்ணெதிரே தோன்றும் (நூலின்) இழைபோல் நுண்மை கொண்ட நூல் போன்ற இடையாலே, மேலே பொருந்தியுள்ள குளிர்ந்த கொங்கை எனப்படும் மேருமலை யாலே பலவிதமாக (நெஞ்சம் கலங்கி) நெருப்பு உலையிற்பட்ட நல்ல மெழுகுபோல (உருகி), காம மோகம் என்னும் அலை வீசும் கடலினுள் முழுகி, உடல் (கொலை, பொய், களவு, கள்ளுண், குரு நிந்தை எனப்படும்) பஞ்சபாதகத்துக்கும் ஈடாகி, ஒழியாத (நீங்காத) நோயால் அழிவேனோ! (கையில்) உள்ள தண்டம், பாசக்கயிறு இவையுடன் ஆரவாரஞ்செய்து என்னை நெருங்கியே யமதூதர்கள் (என்) உயிரைக் கொண்டு போய்விடும் அந்த நாளில் நீ உன் மேன்மை பொருந்திய திருவடியைத் தந்தருளுக. அலை வீசும் கடல் கோ கோ என்று சப்தித்து வாய் விட்டு ஒலமிட(அதனுள்) பெரிய மாமரமாய் நின்ற சூரன் வைத்திருந்த அழகிய வில்லுகள் வேறுபட்டு விழ அற்று) தூளாகவே.