திருப்புகழ் 537 அல் அசல் அடைந்த  (வள்ளிமலை)
Thiruppugazh 537 alasaladaindha  (vaLLimalai)
Thiruppugazh - 537 alasaladaindha - vaLLimalaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தய்யதன தந்த தய்யதன தந்த
     தய்யதன தந்த ...... தனதான

......... பாடல் .........

அல்லசல டைந்த வில்லடல நங்கன்
     அல்லிமல ரம்பு ...... தனையேவ

அள்ளியெரி சிந்த பிள்ளைமதி தென்ற
     லையமது கிண்ட ...... அணையூடே

சொல்லுமர விந்த வல்லிதனி நின்று
     தொல்லைவினை யென்று ...... முனியாதே

துய்யவரி வண்டு செய்யமது வுண்டு
     துள்ளியக டம்பு ...... தரவேணும்

கல்லசல மங்கை யெல்லையில்வி ரிந்த
     கல்விகரை கண்ட ...... புலவோனே

கள்ளொழுகு கொன்றை வள்ளல்தொழ அன்று
     கல்லலற வொன்றை ...... யருள்வோனே

வல்லசுர ரஞ்ச நல்லசுரர் விஞ்ச
     வல்லமைதெ ரிந்த ...... மயில்வீரா

வள்ளிபடர் கின்ற வள்ளிமலை சென்று
     வள்ளியைம ணந்த ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

அல் அசல் அடைந்த வில் அடல் அநங்கன் அல்லி மலர் அம்பு
தனை ஏவ
... மாலைப் பொழுதினில் வந்து சேர்ந்த, வில்லை ஏந்திய
வெற்றி பொருந்திய, மன்மதன் தனது அல்லி மலர்ப் பாணத்தைச் செலுத்த,

பிள்ளை மதி அள்ளி எரி சிந்த தென்றல் ஐயம் அது கிண்ட ...
பிறைச்சந்திரனும் நெருப்பை அள்ளி வீச, தென்றற் காற்றும் (அங்ஙனம்
நெருப்பு வீசுவதால்) தலைவன் அருள் புரிவானோ என்ற ஐயத்தைக்
கிளப்ப,

அணையூடே சொல்லும் அரவிந்த வல்லி தனி நின்று ...
படுக்கையில் (ஊராரின் அலர்ப் பேச்சுக்களால்) பேசப்படுபவளும்,
தாமரையில் வசிக்கும் லக்ஷ்மி போன்றவளுமான இப்பெண் தனிமையில்
இருந்து,

தொல்லை வினை என்று முனியாதே ... என் பழ வினையால்
இங்ஙனம் வாடுகிறேன் என்று தன்னைத் தானே வெறுக்காமல்,

துய்ய வரி வண்டு செய்ய மது உண்டு துள்ளிய கடம்பு
தரவேணும்
... பரிசுத்தமான ரேகைகளை உடைய வண்டு சிவந்த தேனை
உண்டு துள்ளுகின்ற (உனது) கடப்ப மாலையைத் தர வேண்டும்.

கல் அசல மங்கை எல்லையில் விரிந்த கல்வி கரை கண்ட
புலவோனே
... (இமய) மலை மகளான பார்வதி அளவு இல்லாத கல்விப்
போட்டியில் தலை இடம் பெற்ற சகல கலா வல்லவன் நீதான்* என்னும்படி
விளங்கிய புலவனே,

கள் ஒழுகு கொன்றை வள்ளல் தொழ அன்று கல்லல் அற
ஒன்றை அருள்வோனே
... தேன் ஒழுகும் கொன்றையைச் சடையில்
சூடிய வள்ளலாகிய சிவபெருமான் அன்று வணங்கி நிற்க, ஐயம்
இல்லாதபடி ஒப்பற்ற பிரணவப் பொருளை உபதேசித்து அருளியவனே,

வல் அசுரர் அஞ்ச நல்ல சுரர் விஞ்ச வல்லமை தெரிந்த மயில்
வீரா
... வன்மை வாய்ந்த அசுரர்கள் பயப்பட, நற்குணம் படைத்த
தேவர்கள் மகிழ்ச்சி அடைய, உனது சாமர்த்தியத்தைக் காட்டிய மயில்
வீரனே.

வள்ளி படர்கின்ற வள்ளி மலை சென்று வள்ளியை மணந்த
பெருமாளே.
... வள்ளிக் கொடிகள் படர்கின்ற வள்ளி மலைக்குப்**
போய், வள்ளி நாயகியை அங்கு மணம் புரிந்த பெருமாளே.


* வித்வத் தாம்பூலம் யாருக்குக் கொடுப்பது என்ற வாதத்தில் ஔவையார், இந்திரன்,
சரஸ்வதி, அகத்தியர், ஆகியோர் தமக்கு அப்பரிசு பெற தகுதி இல்லை என
மறுத்ததும், தேவர்களும் முனிவர்களும் பார்வதியை அணுகினர். தேவி புன்னகை
புரிந்து, நான் வாழைப் பழத்தின் தோல் போன்றவள். எனக்குள் இருக்கும் கனி,
முத்துக் குமரனே இப்பரிசுக்குத் தக்கவன் என்று கூறினாள் - கந்த புராணம்.


** வள்ளிமலை வட ஆற்காடு மாவட்டத்தில் ராயவேலூருக்கு 12 மைல் தென்கிழக்கில்,
திருவல்லத்துக்கு வடக்கே உள்ளது. வள்ளி தேவியர் அவதரித்த தலம்.


இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் நாயகியின் நற்றாய்
கூறுவதுபோல அமைந்தது. மன்மதன், மலர்ப் பாணங்கள், நிலவு, தென்றல்,
ஊராரின் வசை முதலியவை தலைவனின் பிரிவை மிகவும் அதிகமாக்கும் பொருட்கள்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.775  pg 1.776  pg 1.777  pg 1.778 
 WIKI_urai Song number: 320 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 537 - al asal adaindha (vaLLimalai)

allasala daintha villadala nangan
     allimala rampu ...... thanaiyEva

aLLiyeri sintha piLLaimathi thenRa
     laiyamathu kiNda ...... aNaiyUdE

sollumara vintha vallithani ninRu
     thollaivinai yenRu ...... muniyAthE

thuyyavari vaNdu seyyamathu vuNdu
     thuLLiyaka dampu ...... tharavENum

kallasala mangai yellaiyilvi rintha
     kalvikarai kaNda ...... pulavOnE

kaLLozhuku konRai vaLLalthozha anRu
     kallalaRa vonRai ...... yaruLvOnE

vallasura ranja nallasurar vinja
     vallamaithe rintha ...... mayilveerA

vaLLipadar kinRa vaLLimalai senRu
     vaLLiyaima Nantha ...... perumALE.

......... Meaning .........

al asal adaintha vil adal anangan alli malar ampu thanai Eva: Because of the arrow of lily flower shot by Manmathan (God of Love) who arrived at dusk with his triumphant bow,

piLLai mathi aLLi eri sintha thenRal aiyam athu kiNda: because of the fiery rays emitted by the crescent moon, because of the doubt raised by the southerly breeze whether the Lord would arrive (due to the fiery rays),

aNaiyUdE sollum aravintha valli thani ninRu: and because of the scandal (spread by the folks in the town), this girl, looking like Lakshmi on the lotus, feeling lonely on the bed,

thollai vinai enRu muniyAthE: should not hate herself attributing her misery to her past deeds;

thuyya vari vaNdu seyya mathu uNdu thuLLiya kadampu tharavENum: for that, You must give her Your garland of kadappa flowers around which beetles, with pure rays on their body, jump about after imbibing the reddish honey!

kal asala mangai ellaiyil virintha kalvi karai kaNda pulavOnE: You are the poet adjudged by PArvathi, Daughter of Mount HimavAn, to be the best* in a boundless competition among erudite poets, Oh Lord!

kaL ozhuku konRai vaLLal thozha anRu kallal aRa onRai aruLvOnE: He is the great charitable Lord SivA, with honey-dripping kondRai (Indian laburnum) flower in His matted hair; when He prostrated at Your feet the other day, You preached to Him most clearly the matchless PraNava ManthrA!

val asurar anja nalla surar vinja vallamai therintha mayil veerA: The powerful demons ran away scared and the virtuous celestials were elated when You showed Your prowess, Oh valorous Lord on the Peacock!

vaLLi padarkinRa vaLLi malai senRu vaLLiyai maNantha perumALE.: You went up to Mount VaLLimalai** where the vaLLi creepers abound and wedded the damsel VaLLi over there, Oh Great One!


* Once there was a competition among AvvaiyAr, IndrA, Saraswathi and Agasthya as to who should get the prime honour for outstanding knowledge. As all of them considered themselves unworthy of that honour, the celestials and the sages approached DEvi PArvathi for judgement. She smiled and declared that She Herself was no more than the peel of the fruit and that Lord Murugan, who is the fruit within Her, was the only one worthy of that honour - Kandha PurANam.


** VaLLimalai is in North Arcot District 12 miles southeast of Roya VelUr, slightly north of Thiruvallam. This is the hill where VaLLi was found as a baby by the tribe of hunters.


This song is based on the Nayaka-Nayaki Bhavam, where the poet, assuming the heroine's mother's role, expresses the pang of separation from the hero, Murugan.
The God of Love Manmathan, His flowery arrows, the moonlight, the southerly breeze and the scandal-mongering people are a few of the things that aggravate the agony of separation.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 537 al asal adaindha - vaLLimalai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]