திருப்புகழ் 536 ககனமும் அநிலமும்  (வள்ளிமலை)
Thiruppugazh 536 gaganamumanilamum  (vaLLimalai)
Thiruppugazh - 536 gaganamumanilamum - vaLLimalaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதன தனதன தனதன தனதன
     தய்யத்த தாத்த ...... தனதான

......... பாடல் .........

ககனமு மநிலமு மனல்புனல் நிலமமை
     கள்ளப் புலாற்கி ...... ருமிவீடு

கனலெழ மொழிதரு சினமென மதமிகு
     கள்வைத்த தோற்பை ...... சுமவாதே

யுகஇறு திகளிலு மிறுதியி லொருபொருள்
     உள்ளக்க ணோக்கு ...... மறிவூறி

ஒளிதிக ழருவுரு வெனுமறை யிறுதியி
     லுள்ளத்தை நோக்க ...... அருள்வாயே

ம்ருகமத பரிமள விகசித நளினநள்
     வெள்ளைப்பி ராட்டி ...... இறைகாணா

விடதர குடிலச டிலமிசை வெகுமுக
     வெள்ளத்தை யேற்ற ...... பதிவாழ்வே

வகுளமு முகுளித வழைகளு மலிபுன
     வள்ளிக்கு லாத்தி ...... கிரிவாழும்

வனசரர் மரபினில் வருமொரு மரகத
     வள்ளிக்கு வாய்த்த ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

ககனமும் அநிலமும் அனல்புனல் நிலம் அமை ... ஆகாயம்,
காற்று, தீ, நீர், மண் என்ற பஞ்சபூதங்களால் ஆனதும்,

கள்ளப் புலாற்கிருமிவீடு ... கெட்டுப்போன மாமிச நாற்றமும்,
கிருமிகள் உள்ளதுமான வீடு,

கனலெழ மொழிதரு சினமென மதமிகு ... நெருப்புப் பொறி
பறப்பதுபோல பேச்சுக்கள் பிறந்து, கோபம் என்ற ஆணவம் மிகுந்த

கள்வைத்த தோற்பை சுமவாதே ... மயக்கம் என்ற கள்ளை
வைத்துள்ள தோலால் ஆன பையாகிய இந்த உடலை இனியும் யான்
சுமந்து அயராதபடி,

யுகஇறுதிகளிலும் இறுதியில் ஒருபொருள் ... யுகங்கள்
முடிந்தாலும் தான் முடிவடையாத ஒப்பற்ற அந்தப் பேரின்பப் பொருளை

உள்ளக்கண் நோக்கும் அறிவூறி ... எனது உள்ளத்தினிடத்தே
ஞானக் கண்ணால் அறியும் சிவஞான அறிவு என்ற ஊற்று ஊறிப் பெருக,

ஒளிதிகழ் அருவுருவெனு ... ஒளிமயமானதும், அருவமானது என்றும்,
உருவமானது என்றும் கூறுகின்ற

மறை யிறுதியில் உள்ளத்தை நோக்க அருள்வாயே ...
வேதங்களின் முடிவினில் நிற்பதாய் உள்ள அந்தப் பொருளாகிய
உன்னை யான் காண நீ அருள் புரிவாயாக.

ம்ருகமத பரிமள விகசித நளினநள் ... கஸ்தூரியின் வாசம் வீசும்,
நறுமணமுள்ள மலர்ந்த தாமரையின் மீது வீற்றிருக்கும்

வெள்ளைப்பிராட்டி இறைகாணா ... வெள்ளை நிறத்தளான
சரஸ்வதியின் கணவனான பிரமனால் (அடியையோ, முடியையோ)
காணமுடியாதவரும்,

விடதர குடில சடிலமிசை ... ஆலகால விஷத்தைக் கண்டத்தில்
தரித்தவரும், வளைந்த ஜடாமுடியின் மீது

வெகுமுக வெள்ளத்தை யேற்ற பதிவாழ்வே ... ஆயிரம்
முகங்களைக் கொண்ட கங்கை நதியை ஏற்றவருமான சிவபிரானின்
செல்வமே,

வகுளமு முகுளித வழைகளு மலி ... மகிழ மரமும், அரும்புகள்
விடும் சுரபுன்னையும் நிறைந்துள்ள

புன வள்ளிக் குலாத்திகிரிவாழும் ... தினைப்புனம் உடைய
வள்ளிமலையாம்* சிரேஷ்டமான மலையில் வாழும்

வனசரர் மரபினில் வருமொரு மரகத ... வேடர் மரபில் தோன்றி
வளர்ந்த, ஒப்பற்ற பச்சை நிறமுள்ள

வள்ளிக்கு வாய்த்த பெருமாளே. ... வள்ளி நாயகிக்கு மிகப்
பொருத்தமாக வாய்த்த பெருமாளே.


* வள்ளிமலை வட ஆற்காடு மாவட்டத்தில் ராயவேலூருக்கு 12 மைல் தென்கிழக்கில்,
திருவல்லத்துக்கு வடக்கே உள்ளது. வள்ளி தேவியர் அவதரித்த தலம்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.771  pg 1.772  pg 1.773  pg 1.774  pg 1.775  pg 1.776 
 WIKI_urai Song number: 319 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Thiru P. Shanmugam
திரு பொ. சண்முகம்

Thiru P. Shanmugam
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Mrs. Malathi Velayudhan, Chennai
திருமதி வே. மாலதி, சென்னை

Mrs. Malathi Velayudhan, Chennai
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 536 - gaganamum anilamum (vaLLimalai)

gaganamu manilamu manalpunal nilamamai
     kaLLap pulARki ...... rumiveedu

kanalezha mozhitharu sinamena madhamigu
     kaLvaiththa thORpai ...... sumavAdhE

yuga iRu dhigaLilum iRudhiyi loruporuL
     uLLakka NOkkum ...... aRivURi

oLithiga zharuvuru venumaRai yiRudhiyil
     uLLaththai nOkka ...... aruLvAyE

mrugamadha parimaLa vigasitha naLinanaL
     vellaippirAtti ...... iRaikANA

vidathara kudilasa dilamisai vegumuka
     veLLaththai yEtra ...... padhivAzhvE

vaguLamu muguLitha vazhaigaLu malipuna
     vaLLikku lAththi ...... girivAzhum

vanasarar marabinil varumoru marakatha
     vaLLikku vAyththa ...... perumALE.

......... Meaning .........

gaganamu manilamu manalpunal nilamamai: The five elements, namely the cosmos, air, fire, water and earth, constitute this body.

kaLLap pulARki rumiveedu: It smells like rotten meat and is nothing but a house, full of germs.

kanalezha mozhitharu sinamena: Anger flares up during speech as if fiery sparks are set off;

madhamigu kaLvaiththa thORpai sumavAdhE: that leads to maddening rage, and the body becomes a leather bag filled up with the toxic liquor of delusion. Lest I carry this burden of my body,

yuga iRudhigaLilum iRudhiyil oruporuL: (I need) the unique substance that is immortal even at the end of the universe;

uLLakka NOkkum aRivURi: in order that the knowledge of SivagnAnam, gushing within myself like a fountain is perceived by mind's eye

oLithigazharuvuru venumaRai: that luminous substance, which has neither shape nor form, according to the scriptures,

yiRudhiyiluLLaththai nOkka aruLvAyE: and that which is seated at the pinnacle of those very scriptures; I want to behold that, namely You, with Your blessing!

mrugamadha parimaLa vigasitha naLinanaL: With the pleasant aroma of musk, on a fully-blossomed white lotus

vellaippirAtti iRaikANA: is seated Goddess Saraswathi, wearing white dress. Her Consort, BrahmA, was unable to see (the head or feet of) Lord SivA.

vidathara kudilasa dilamisai vegumuka veLLaththai yEtra padhivAzhvE: He contained the fierce poison in His throat; on His bent tresses, He carried the thousand-faced river Ganga; and You are the treasure of that SivA!

vaguLamu muguLitha vazhaigaLu malipuna: There are plenty of magizha trees and budding surapunnai trees in this millet-field at

vaLLik kulAththi girivAzhum: the famous mountain, VaLLimalai* where she lives;

vanasarar marabinil varumoru marakatha: She hails from the hunter tribe and is of emerald complexion;

vaLLikku vAyththa perumALE.: for that VaLLi, You are the most befitting consort, Oh Great One!


* VaLLimalai is in North Arcot District 12 miles southeast of Roya VelUr, slightly north of Thiruvallam.
This is the hill where VaLLi was found as a baby by the tribe of hunters.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 536 gaganamum anilamum - vaLLimalai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]