திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 516 வஞ்சமே கோடி (சோலை மேவிய குன்று) Thiruppugazh 516 vanjamEkOdi (sOlai mEviya kundRu) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தந்தனா தான தானன தந்தனா தான தானன தந்தனா தான தானன ...... தனதான ......... பாடல் ......... வஞ்சமே கோடி கோடிகள் நெஞ்சமே சேர மேவிய வன்கணா ரார வாரமு ...... மருள்வோராய் வம்பிலே வாது கூறிகள் கொஞ்சியே காம லீலைகள் வந்தியா ஆசை யேதரு ...... விலைமாதர் பஞ்சமா பாவ மேதரு கொங்கைமேல் நேச மாய்வெகு பஞ்சியே பேசி நாடொறு ...... மெலியாதே பந்தியாய் வானு ளோர்தொழ நின்றசீ ரேகு லாவிய பண்புசேர் பாத தாமரை ...... யருள்வாயே அஞ்சவே சூர னானவ னுய்ஞ்சுபோ காம லேயயில் அன்றுதா னேவி வானவர் ...... சிறைமீள அன்பினோ டேம னோரத மிஞ்சமே லான வாழ்வருள் அண்டர்கோ வேப ராபர ...... முதல்வோனே கொஞ்சவே காலின் மேவுச தங்கைதா னாட ஆடிய கொன்றையா னாளு மேமகிழ் ...... புதல்வோனே கொந்துசேர் சோலை மேவிய குன்றுசூழ் வாக வேவரு குன்றுதோ றாடல் மேவிய ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... வஞ்சமே கோடி கோடிகள் நெஞ்சமே சேர மேவிய வண் க(ண்)ணார் ... வஞ்சகத்தையே கோடிக் கணக்காய் உள்ளத்தில் சேர்த்து வைத்துள்ள கொடியவர்கள், ஆரவாரமும் அருள்வோராய் வம்பிலே வாது கூறிகள் ... ஆரவாரத்துடன் அருள் புரிபவர்கள் போல காண்பித்து வீணில் வாது பேசுபவர்கள், கொஞ்சியே காம லீலைகள் வந்தியா ஆசையே தரு விலைமாதர் ... கொஞ்சிப் பேசி காம விளையாட்டுகளைப் பற்றிப் புகழ்ந்து, ஆசையை வளர்க்கின்ற பொது மகளிரின் பஞ்ச மா பாவமே தரு கொங்கை மேல் நேசமாய் வெகு பஞ்சியே பேசி நாள் தொறும் மெலியாதே ... ஐந்து பெரிய பாவங்களுக்கும்* இடமாகும் மார்பகங்களின் மேல் அன்பு வைத்து மிக வருத்தம் காட்டிப் பேசி, நான் நாள் தோறும் மெலிந்து போகாமல், பந்தியாய் வான் உளோர் தொழ நின்ற சீரே குலாவிய பண்பு சேர் பாத தாமரை அருள்வாயே ... வரிசையாக தேவர்கள் தொழ நின்ற பெருமை விளங்கும் பண்புகள் பொருந்திய திருவடித் தாமரைகளை எனக்கு அருள் செய்வாயாக. அஞ்சவே சூரன் ஆனவன் உய்ஞ்சு போகாமலே அயில் அன்று தான் ஏவி வானவர் சிறை மீள ... சூரன் பயப்படும்படியும், பிழைத்திராதபடியும் வேலை அன்றைக்கே செலுத்தி, தேவர்கள் சிறையினின்றும் மீள அன்பினோடே மனோரதம் மிஞ்ச மேலான வாழ்வு அருள் அண்டர் கோவே பராபர முதல்வோனே ... அன்புடன் அவர்களுடைய விருப்பம் நிறைவேற மேலான வாழ்வை அளித்த தேவர்கள் தலைவனே, பராபர முதல்வனே, கொஞ்சவே காலின் மேவு சதங்கைதான் ஆட ஆடிய கொன்றையான் நாளுமே மகிழ் புதல்வோனே ... கொஞ்சுதல் போல, காலில் கட்டியுள்ள சதங்கை ஒலிக்க நடனம் செய்த, கொன்றையை அணிந்த சிவபெருமான் நாள்தோறும் மகிழ்கின்ற பிள்ளையே, கொந்து சேர் சோலை மேவிய குன்று** சூழ்வாகவே வரு ... பூங்கொத்துக்கள் சேர்ந்த சோலைகள் பொருந்திய குன்றுகளின் சூழல் உள்ள குன்று தோறாடல் மேவிய பெருமாளே. ... பழமுதிர் சோலை ஆகிய குன்றுகளில் எல்லாம் வீற்றிருக்கும் பெருமாளே. |
* சோலை மேவிய குன்று என்று ஒரு தனித்தலம் இருப்பதாகத் தெரியவில்லை. இதனை குன்று தோறாடல் அல்லது பழமுதிர்ச்சோலையின் கீழ் வைத்துள்ளதாகக் கருதப்படுகிறது. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 1.567 pg 1.568 pg 1.569 pg 1.570 WIKI_urai Song number: 237 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை Sorry, no audio recordings for this song |
Song 516 - vanjamE kOdi (sOlai MEviya KunRu - kunRuthORAdal) vanjamE kOdi kOdikaL nenjamE sEra mEviya vankaNA rAra vAramu ...... maruLvOrAy vampilE vAthu kURikaL konjiyE kAma leelaikaL vanthiyA Asai yEtharu ...... vilaimAthar panjamA pAva mEtharu kongaimEl nEsa mAyveku panjiyE pEsi nAdoRu ...... meliyAthE panthiyAy vAnu LOrthozha ninRasee rEku lAviya paNpusEr pAtha thAmarai ...... yaruLvAyE anjavE cUra nAnava nuynjupO kAma lEyayil anRuthA nEvi vAnavar ...... siRaimeeLa anpinO dEma nOratha minjamE lAna vAzhvaruL aNdarkO vEpa rApara ...... muthalvOnE konjavE kAlin mEvusa thangaithA nAda Adiya konRaiyA nALu mEmakizh ...... puthalvOnE konthusEr sOlai mEviya kunRusUzh vAka vEvaru kunRuthO RAdal mEviya ...... perumALE. ......... Meaning ......... vanjamE kOdi kOdikaL nenjamE sEra mEviya vaN ka(N)NAr: They are the evil ones who have piled up treachery in their heart amounting to millions; AravAramum aruLvOrAy vampilE vAthu kURikaL: They show off as if they are very compassionate but argue unnecessarily; konjiyE kAma leelaikaL vanthiyA AsaiyE tharu vilai mAthar: these whores speak in a tantalising manner, praising the erotic games they play and provoking passion; panja mA pAvamE tharu kongai mEl nEsamAy veku panjiyE pEsi nAL thoRum meliyAthE: having been fascinated by their bosom, a cause for five heinous sins*, I do not want to suffer from agonising speech and weakening of the body day after day; panthiyAy vAn uLOr thozha ninRa seerE kulAviya paNpu sEr pAtha thAmarai aruLvAyE: instead, kindly grant me Your hallowed feet of many distinctions and which are worshipped by rows and rows of celestialls! anjavE cUran Anavan uynju pOkAmalE ayil anRu thAn Evi vAnavar siRai meeLa: Scaring away the demon SUran and without sparing his life, You wielded the spear the other day to liberate the celestials from their prison; anpinOdE manOratham minja mElAna vAzhvu aruL aNdar kOvE parApara muthalvOnE: in order to fulfil their desire, You kindly restored their honorable life in the celestial land, Oh Leader of the DEvAs! You are the primordial One in this Universe! konjavE kAlin mEvu sathangaithAn Ada Adiya konRaiyAn nALumE makizh puthalvOnE: He dances with the lilting sound of His anklet; He is Lord SivA wearing the kondRai (Indian laburnum) flower; and You are His son elating Him everyday, Oh Lord! konthu sEr sOlai mEviya kunRu** sUzhvAkavE varu: There are several hills surrounded by groves full of bunches of flowers kunRu thORAdal mEviya perumALE.: the hill PazhamuthircOlai, and in all those hills You have an abode, Oh Great One! |
* There does not appear to be an individual place called "sOlai mEviya kunRu"; this song is listed under either "kunRu thORAdal" or "pazhamuthircOlai". |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |