திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 515 பரமகுரு நாத (சிதம்பரம்) Thiruppugazh 515 paramagurunAdha (chidhambaram) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனதனன தான தனதனன தான தனதனன தானத் ...... தனதானா ......... பாடல் ......... பரமகுரு நாத கருணையுப தேச பதவிதரு ஞானப் ...... பெருமாள்காண் பகலிரவி லாத ஒளிவெளியில் மேன்மை பகருமதி காரப் ...... பெருமாள்காண் திருவளரு நீதி தினமனொக ராதி செகபதியை யாளப் ...... பெருமாள்காண் செகதலமும் வானு மருவையவை பூத தெரிசனைசி வாயப் ...... பெருமாள்காண் ஒருபொருள தாகி அருவிடையை யூரு முமைதன்மண வாளப் ...... பெருமாள்காண் உகமுடிவு கால மிறுதிகளி லாத உறுதியநு பூதிப் ...... பெருமாள்காண் கருவுதனி லூறு மருவினைகள் மாய கலவிபுகு தாமெய்ப் ...... பெருமாள்காண் கனகசபை மேவி அனவரத மாடு கடவுள்செக சோதிப் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... பரமகுரு நாத கருணையுப தேச ... பரமசிவனுக்கும் குருநாதனே, கருணையுடன் உபதேசிப்பவனே, பதவிதரு ஞானப் பெருமாள்காண் ... அருட் பதவிகளைத் தருகின்ற பெருமாள் நீதான். பகலிரவிலாத ஒளிவெளியில் ... பகலும் இரவும் அற்றதான ஞான ஒளிவீசும் சிதாகாச வெளியில் மேன்மை பகரும் அதிகாரப் பெருமாள்காண் ... மேலான உண்மைப் பொருளை விளக்கும் அதிகாரம் கொண்டுள்ள பெருமாள் நீதான். திருவளரு நீதி தின மனொகர ஆதி ... முக்திச் செல்வத்தை வளர்க்கின்ற நீதியே, நித்ய மனோகரனே, ஆதிப் பரம்பொருளே, செகபதியை யாளப் பெருமாள்காண் ... உலகிலுள்ள மன்னர்களை எல்லாம் ஆள்கின்ற பெருமாள் நீதான். செகதலமும் வானு மருவு ஐ அவை பூத ... மண்ணும், விண்ணும், அவற்றில் பொருந்தியுள்ள ஐந்து பூதங்களிலும் கலந்து விளங்கி தெரிசனைசிவாயப் பெருமாள்காண் ... தரிசனம் தரும் சிவாயநம என்ற பஞ்சாட்சரப் பொருளான பெருமாள் நீதான்*. ஒருபொருள் அதாகி அருவிடையை யூரும் ... ஏக வஸ்துவாகி அருமையான ரிஷப வாகனத்தில் ஏறுகின்ற உமைதன்மண வாளப் பெருமாள்காண் ... பார்வதியின் மணவாளப் பெருமாளும் நீதான்*. உகமுடிவு காலம் இறுதிகளிலாத ... பிரபஞ்சங்களின் யுக முடிவு, காலம், இறுதிகள் என்பவை இல்லாத உறுதி அநுபூதிப் பெருமாள்காண் ... நிலைபெற்ற சிவாநுபூதியைத் தந்தருளும் பெருமாள் நீதான். கருவுதனில் ஊறும் அருவினைகள் மாய ... கருக்குழியிலிருந்தே ஊறி வருகின்ற கொடிய வினைகள் அழிய கலவிபுகு தாமெய்ப் பெருமாள்காண் ... மீண்டும் என்னை மாயப் பிரபஞ்ச சேர்க்கையில் புகுத்தாத பெருமாள் நீதான். கனகசபை மேவி அனவரதம் ஆடு ... பொன்னம்பலத்தில் (சிதம்பரம்) பொருந்தி எப்போதும் திருநடனம் புரிகின்ற* கடவுள்செக சோதிப் பெருமாளே. ... தெய்வமாகின்ற ஜெகஜ்ஜோதியான பெருமாளே. |
* சிதம்பரத்து நடராஜனை முருகனாகவே அருணகிரிநாதர் காண்கிறார். |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 2.553 pg 2.554 pg 2.555 WIKI_urai Song number: 654-1 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
'குருஜி' ராகவன் அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள் 'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
'குமார வயலூர்' திரு T. பாலசந்தர் Thiru T. Balachandhar பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 515 - paramaguru nAdha (chidhambaram) paramaguru nAtha karuNaiyupa thEsa pathavitharu nyAnap ...... perumALkAN pakaliravi lAtha oLiveLiyil mEnmai pakarumathi kArap ...... perumALkAN thiruvaLaru neethi thinamanoka rAthi sekapathiyai yALap ...... perumALkAN sekathalamum vAnu maruvaiyavai pUtha therisanaisi vAyap ...... perumALkAN oruporuLa thAki aruvidaiyai yUru mumaithanmaNa vALap ...... perumALkAN ukamudivu kAla miRuthikaLi lAtha uRuthiyanu pUthip ...... perumALkAN karuvuthani lURu maruvinaikaL mAya kalavipuku thAmeyp ...... perumALkAN kanakasabai mEvi anavaratha mAdu kadavuLseka jOthip ...... perumALE. ......... Meaning ......... paramakuru nAtha karuNaiyupa thEsa: You are the Master of Lord SivA; and You preach very graciously. pathavitharu nyAnap perumALkAN: You are the Lord who grants blissful positions in the heaven. pakaliravilAtha oLiveLiyil: In the bright cosmic space, where there is no day or night, mEnmai pakarum athikArap perumALkAN: You are the Lord with the authority to explain the supreme truth. thiruvaLaru neethi: You are the Justice that brings up the concept of liberation. thina manokara Athi: You elate me everyday; and You are the first and foremost in this world! sekapathiyai yALap perumALkAN: You are the Lord ruling over all kings of this world. sekathalamum vAnu maruvu ai avai pUtha: This world, the Ether, and the five elements that engulf both therisanaisivAyap perumALkAN: are all Your manifestation as the ManthrA, SIVAYANAMA*, Oh my Lord! oruporuL athAki aruvidaiyai yUrum: Being one and only substance, and mounting the Sacred Bull, Nandi, umaithanmaNa vALap perumALkAN: You are the Consort of Mother PArvathi, my Lord*! ukamudivu kAlam iRuthikaLilAtha: You are not governed by the end of the Universe, Time and Destruction; uRuthi anupUthip perumALkAN: and You provide the permanent experience in SivA, my Lord! karuvuthanil URum aruvinaikaL mAya: You destroy karmas, which stem right from my mother's womb; and kalavipuku thAmeyp perumALkAN: You are the true Lord to ensure that I am not born again! kanakasapai mEvi anavaratham Adu: You enter the golden shrine of Chidhambaram and dance eternally*! kadavuLseka sOthip perumALE.: You are God Almighty in the form of the Universal Light, Oh Great One! |
* AruNagirinAthar does not distinguish between NadarAjA, Lord SivA at Chidhambaram, and Murugan. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |