திருப்புகழ் 513 மனமே உனக்குறுதி  (சிதம்பரம்)
Thiruppugazh 513 manamEunakkuRudhi  (chidhambaram)
Thiruppugazh - 513 manamEunakkuRudhi - chidhambaramSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனனா தனத்ததன தனனா தனத்ததன
     தனனா தனத்ததன ...... தனதானா

......... பாடல் .........

மனமே உனக்குறுதி புகல்வே னெனக்கருகில்
     வருவா யுரைத்தமொழி ...... தவறாதே

மயில்வாக னக்கடவுள் அடியார் தமக்கரசு
     மனமாயை யற்றசுக ...... மதிபாலன்

நினைவே துனக்கமரர் சிவலோக மிட்டுமல
     நிலைவே ரறுக்கவல ...... பிரகாசன்

நிதிகா நமக்குறுதி அவரே பரப்பிரம
     நிழலாளி யைத்தொழுது ...... வருவாயே

இனமோ தொருத்திருபி நலமேர் மறைக்கரிய
     இளையோ ளொரொப்புமிலி ...... நிருவாணி

எனையீ ணெடுத்தபுகழ் கலியாணி பக்கமுறை
     யிதழ்வேணி யப்பனுடை ...... குருநாதா

முனவோர் துதித்து மலர் மழைபோ லிறைத்துவர
     முதுசூ ரரைத்தலை கொள் ...... முருகோனே

மொழிபாகு முத்துநகை மயிலாள் தனக்குருகு
     முருகா தமிழ்ப்புலியுர் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

மனமே உனக்கு உறுதி புகல்வேன் ... மனமே, உனக்கு உறுதி
தரக்கூடிய நன்மொழிகளைக் கூறுவேன்,

எனக்கு அருகில் வருவாய் உரைத்தமொழி தவறாதே ... என்
சமீபத்தில் வா, நான் சொல்லும் சொற்படி தவறாமல் நடப்பாயாக.

மயில் வாகனக்கடவுள் அடியார் தமக்கரசு ... மயிலை வாகனமாகக்
கொண்ட தெய்வம், அடியவர்களுக்கெல்லாம் அரசர்,

மனமாயை யற்ற சுக மதிபாலன் ... மனம், மாயை என்பதெல்லாம்
இல்லாத சுகத்தைத் தரும் இளம் குழந்தை.

நினைவேது உனக்கு அமரர் சிவலோகம் இட்டு ... உனக்கு
வேறு நினைவு எதற்கு? தேவலோகத்தையும், சிவலோகத்தையும்
உனக்குத் தந்தருளி,

மல நிலை வேர் அறுக்கவல பிரகாசன் ... மும்மலங்களில்
(ஆணவம், கன்மம், மாயை) நிலைத்துள்ள வேர்களை அறுக்கவல்ல
ஒளியுருவானவர்,

நிதி கா நமக்கு உறுதி அவரே பரப்பிரம ... சங்க நிதி, பதுமநிதி,
கற்பக மரம்* போன்று அளிக்கவல்லவர், அவரே நமக்கு உறுதி, அவரே
முழு முதற் கடவுள்.

நிழல் ஆளியைத் தொழுது வருவாயே ... நீதிமான், அத்தகைய
பெருமானைத் தொழுது வழிபட்டு வருவாயாக.

இனம் ஓது ஒருத்தி ருபி ... நமது உண்மையான சுற்றம் என்று
சொல்லக் கூடிய ஒரே ஒருத்தியும், பேரழகுள்ளவளும்,

நலம் ஏர் மறைக்கு அரிய இளையோள் ... நலமும், சிறப்பும்
உடைய வேதங்களுக்கு எட்டாதவளும், என்றும் இளையவளும்,

ஒர் ஒப்புமிலி நிருவாணி ... ஒருவிதத்திலும் தனக்குச் சமானம்
இல்லாதவளும், உடையற்ற திகம்பரியும்,

எனை ஈணெடுத்த புகழ் கலியாணி பக்கம் உறை ... என்னைப்
பெற்றெடுத்தவளும், புகழ் பெற்ற கல்யாணியுமாகிய உமாதேவியை ஒரு
பக்கத்தில் கொண்ட

இதழ்வேணியப்பனுடை குருநாதா ... கொன்றை அணிந்த
ஜடையுடைய எம் தந்தை சிவபெருமானின் குருநாதனே,

முனவோர் துதித்து மலர் மழைபோல் இறைத்துவர ...
முன்னவர்களாகிய அரி, அரன், அயன் ஆகிய மூவரும் துதி செய்து,
மலர்களை மழைபோலத் தூவி வர,

முது சூரரைத் தலை கொள் முருகோனே ... பழமை வாய்ந்த
சூரன் முதலியவர்களின் சிரங்களைக் கொய்தறுத்த முருகனே,

மொழிபாகு முத்துநகை மயிலாள் தனக்கு ... சர்க்கரைப் பாகு
போன்ற மொழியும், முத்துப் போன்ற பற்களையும் உடைய, மயிலை
ஒத்த சாயல் கொண்ட வள்ளிக்காக

உருகு முருகா தமிழ்ப்புலியுர் பெருமாளே. ... உள்ளம் உருகும்
முருகனே, தமிழ் மணம் கமழும் புலியூர் என்ற சிதம்பரத்தில் உறையும்
பெருமாளே.


* தேவலோகத்தில் சங்கநிதி, பதுமநிதி ஆகியவை மிகுந்த செல்வங்களை நல்குபவை.
    கற்பக விருட்சம் கேட்டதெல்லாம் கொடுக்கும் தேவதாரு.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.547  pg 2.548  pg 2.549  pg 2.550 
 WIKI_urai Song number: 653-1 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Kumaravayaloor Thiru T. Balachandhar
'குமார வயலூர்' திரு T. பாலசந்தர்

Thiru T. Balachandhar
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Mrs. Malathi Velayudhan, Chennai
திருமதி வே. மாலதி, சென்னை

Mrs. Malathi Velayudhan, Chennai
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 513 - manamE unakkuRudhi (chidhambaram)

manamE unakkuRuthi pukalvE nenakkarukil
     varuvA yuraiththamozhi ...... thavaRAthE

mayilvAka nakkadavuL adiyAr thamakkarasu
     manamAyai yatRasuka ...... mathipAlan

ninaivE thunakkamarar sivalOka mittumala
     nilaivE raRukkavala ...... pirakAsan

nithikA namakkuRuthi avarE parappirama
     nizhalALi yaiththozhuthu ...... varuvAyE

inamO thoruththirupi nalamEr maRaikkariya
     iLaiyO Loroppumili ...... niruvANi

enaiyee Neduththapukazh kaliyANi pakkamuRai
     yithazhvENi yappanudai ...... gurunAthA

munavOr thuthiththu malar mazhaipO liRaiththuvara
     muthucU raraiththalai koL ...... murukOnE

mozhipAku muththunakai mayilAL thanakkuruku
     murukA thamizhppuliyUr...... perumALE.

......... Meaning .........

manamE unakku uRuthi pukalvEn: Hark, Oh my mind, I shall tell you something which will bolster your confidence.

enakku arukil varuvAy uraiththamozhi thavaRAthE: Come closer to me and follow my advice implicitly.

mayil vAkanakkadavuL adiyAr thamakkarasu: The Deity mounting the peacock as His vehicle is the king for all His devotees.

manamAyai yatRa suka mathipAlan: He is the child-God who can give you bliss, free from mind and delusion.

ninaivEthu unakku amarar sivalOkam ittu: What else do you need to think of? He will give You the celestial world and eternal bliss

mala nilai vEr aRukkavala pirakAsan: and He is the great effulgence that can uproot your three slags, namely, arrogance, karma and delusion.

nithi kA namakku: He is to us like the celebrated Treasures called the conch-shell treasure, lotus treasure and the celestial tree, KaRpagam*;

uRuthi avarE parappirama: He is our firm refuge; He is the primordial God;

nizhal ALiyaith thozhuthu varuvAyE: He dispenses justice; You must continue to worship Him.

inam Othu oruththi rupi: She is the only one whom we can claim as our true relative; She is exquisitely beautiful;

nalam Er maRaikku ariya iLaiyOL: She is beyond the comprehension of the great and valuable vEdAs; She is ever youthful;

or oppumili niruvANi: She is absolutely matchless; She is in an unclothed nirvana state;

enai eeNeduththa pukazh kaliyANi pakkam uRai: She is the Divine Mother who gave birth to me; She is the famous KalyaNi, known as UmAdEvi; She is held on one side of

ithazhvENiyappanudai gurunAthA: Lord SivA, our Father, who dons His tresses with kondRai (Indian laburnum) flower; You are the Master of that SivA!

munavOr thuthiththu malar mazhaipOl iRaiththuvara: The Trinity (consisting of BrahmA, Vishnu and SivA) came along by Your side, praising You and showering flowers like rain all the way;

muthu cUraraith thalai koL murukOnE: You beheaded the entire clan of the old demon SUran, Oh MurugA!

mozhipAku muththunakai mayilAL thanakku: Her words are sweet like the molten jaggery and her teeth are like pearls; She looks like the peacock; for that VaLLi,

uruku murukA: Your heart melts out of love! Oh MurugA!

thamizhppuliyUr perumALE.: You have Your abode at PuliyUr (Chidhambaram), where the air is thick with the fragrance of Tamil, Oh Great One!


* The conch-shell treasure, sanganidhi, and the lotus treasure, padmanidhi, are supposed to be the celestial sources famous for giving wealth. KaRpagam is the wish-yielding celestial tree.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 513 manamE unakkuRudhi - chidhambaram

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]