திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 496 இருளும் ஓர்கதிரணு (சிதம்பரம்) Thiruppugazh 496 iruLumOrkadhiraNu (chidhambaram) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனன தானன தனன தானன தனன தானன ...... தனதான ......... பாடல் ......... இருளு மோர்கதி ரணுகொ ணாதபொ னிடம தேறியெ ...... னிருநோயும் எரிய வேமல மொழிய வேசுட ரிலகு மூலக ...... வொளிமேவி அருவி பாயஇ னமுத மூறவுன் அருளெ லாமென ...... தளவாக அருளி யேசிவ மகிழ வேபெற அருளி யேயிணை ...... யடிதாராய் பரம தேசிகர் குருவி லாதவர் பரவை வான்மதி ...... தவழ்வேணிப் பவள மேனியர் எனது தாதையர் பரம ராசியர் ...... அருள்பாலா மருவி நாயெனை யடிமை யாமென மகிழ்மெய் ஞானமு ...... மருள்வோனே மறைகு லாவிய புலியுர் வாழ்குற மகள்மெ லாசைகொள் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... இருளும் ஓர்கதிரணுகொணாத ... இருட்டும் சூரிய ஒளியின் ஒரு கதிரும் புகமுடியாத பொனிடம தேறி ... தேவலோகத்தை யான் அடைந்து, என் இருநோயும் எரியவே ... என் நல்வினை, தீவினை என்ற இரு நோய்களும் எரிந்து போகவும், மல மொழியவே ... ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களும் ஒழிந்திடவும், சுடரிலகு மூலகவொளிமேவி ... ஒளி பொருந்திய மூலாதார அக்கினி பொருந்தி, அருவி பாயஇ னமுத மூற ... அருவி பாய்வது போல இனிய தேவாமிர்தம் ஊற, உன் அருளெலாம் எனது அளவாக ... உன் திருவருள் யாவும் என் வசமாகும்படியாக அருளியே சிவ மகிழவேபெற ... உதவியருளி, சிவஞானத்தை யான் மகிழ்ந்து பெறுமாறு அருளி யேயிணை யடிதாராய் ... அருள் செய்து உன் இரு திருவடிகளையும் தருவாயாக. பரம தேசிகர் குருவிலாதவர் ... மேலான தக்ஷிணாமூர்த்தி தேசிகரும், தமக்கு ஒரு குரு இல்லாதவரும், பரவை வான்மதி தவழ்வேணி ... பரந்த கடல் போன்ற கங்கையும் வானத்துச் சந்திரனும் தவழ்கின்ற சடையரும், பவள மேனியர் எனது தாதையர் ... பவள நிற மேனியருமான எனது தந்தையாரும், பரம ராசியர் அருள்பாலா ... பரம ரகசியமாகும் சிதம்பர ரகசியருமான சிவபிரான் அருளிய பாலனே, மருவி நாயெனை யடிமை யாமென ... அடியேனிடம் வந்து கூடி, என்னை ஓர் அடிமையாக ஏற்றுக் கொண்டு, மகிழ்மெய் ஞானமும் அருள்வோனே ... மகிழ்ந்து மெய்ஞ்ஞானத்தை அருள்வோனே, மறைகுலாவிய புலியுர் வாழ் ... வேதங்கள் விளங்கும் புலியூர் சிதம்பரத்தில் வாழ்பவனே, குற மகள்மெ லாசைகொள் பெருமாளே. ... குறப்பெண் வள்ளிமீது ஆசை கொண்ட பெருமாளே. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 2.491 pg 2.492 pg 2.493 pg 2.494 WIKI_urai Song number: 637 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
'குருஜி' ராகவன் அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள் 'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
Song 496 - iruLum OrkadhiraNu (chidhambaram) iruLum Orkadhir aNugoNAdha po nidam adhERi ...... enirunOyum eriyavE malam ozhiyavE sudar ilagu mUlaka ...... oLimEvi aruvi pAya inamudham URavun aruLelAm enadh ...... aLavAga aruLiyE siva magizhavE peRa aruLiyE iNai ...... adithArAy parama dhEsikar guru ilAdhavar paravai vAn madhi ...... thavazhvENi pavaLa mEniyar enadhu thAthaiyar parama rAsiyar ...... aruL bAlA maruvi nAyenai adimai Amena magizh mey nyAnamum ...... aruLvOnE maRai kulAviya puliyur vAzh kuRa magaLmel Asai koL ...... perumALE. ......... Meaning ......... iruLum Orkadhir aNugoNAdha: Neither darkness nor a ray of sun can penetrate this land; ponidam adhERi: may I reach that land of Celestials? enirunOyum eriyavE: where my two diseases, namely good and bad deeds, will be burnt down; malam ozhiyavE: my three slags, namely, arrogance, karma and delusion, will be destroyed; sudar ilagu mUlaka oLimEvi: the luminous and fundamental flame of SivA spreading; aruvi pAya inamudham URa: the heavenly and sweet nectar flowing like a waterfall; un aruLelAm enadh aLavAga: as Your entire grace comes within my reach; aruLiyE siva magizhavE peRa: Grant me the bliss of SivA and elate me; aruLiyE iNai adithArAy: and bless me with Your two hallowed feet! parama dhEsikar guru ilAdhavar: The Supreme master, DakshinamUrthi; with no master for Himself; paravai vAn madhi thavazhvENi: who adorns His tresses with the wide river GangA and the crescent moon; pavaLa mEniyar enadhu thAthaiyar: who has a body of coral hue, He is my Father; parama rAsiyar aruL bAlA: Himself a mystery who is immersed in the supreme secret (of Chidhambaram); and You are His Son! maruvi nAyenai adimai Amena: You came graciously to accept me as Your slave magizh mey nyAnamum aruLvOnE: and blessed me with True Knowledge that affords great pleasure. maRai kulAviya puliyur vAzh: You reside in PuliyUr (Chidhambaram) where all the sacred VEdAs also pervade. kuRa magaLmel Asai koL perumALE.: and You have passionate love for VaLLi, the damsel of the KuRavAs, Oh Great One! |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |