திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 493 எழுகடல் மணலை (சிதம்பரம்) Thiruppugazh 493 ezhukadalmaNalai (chidhambaram) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனதன தனன தனதன தனன தனதன தனன ...... தனதான ......... பாடல் ......... எழுகடல் மணலை அளவிடி னதிக மெனதிடர் பிறவி ...... அவதாரம் இனியுன தபய மெனதுயி ருடலு மினியுடல் விடுக ...... முடியாது கழுகொடு நரியு மெரிபுவி மறலி கமலனு மிகவு ...... மயர்வானார் கடனுன தபய மடிமையு னடிமை கடுகியு னடிகள் ...... தருவாயே விழுதிக ழழகி மரகத வடிவி விமலிமு னருளு ...... முருகோனே விரிதல மெரிய குலகிரி நெரிய விசைபெறு மயிலில் ...... வருவோனே எழுகடல் குமுற அவுணர்க ளுயிரை யிரைகொளும் அயிலை ...... யுடையோனே இமையவர் முநிவர் பரவிய புலியு ரினில்நட மருவு ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... எழுகடல் மணலை ... ஏழு கடல்களின் கரையிலுள்ள மணலையெல்லாம் அளவிடி னதிகம் ... எண்ணிப்பார்த்தால் வரும் அளவை விட அதிகம் எனதிடர் பிறவி அவதாரம் ... என் துன்பம் நிறை பிறவிகள் என்ற அவதாரங்கள். இனியுன தபய மெனதுயி ருடலும் ... இனி உனக்கே அடைக்கலமாம் என் உயிரும், உடலும். இனியுடல் விடுக முடியாது ... இனியும் பிறப்பெடுத்து உடலைவிட என்னால் முடியாது. கழுகொடு நரியு மெரிபுவி ... கழுகும், நரியும், நெருப்பும், மண்ணும், மறலி கமலனு மிகவும் அயர்வானார் ... யமனும், பிரம்மாவும், என்னுடலை பலமுறை பிரித்தும், பிறப்பித்தும் சோர்வடைந்து விட்டார்கள். கடனுன தபயம் ... என் கடமை இனி உன்னிடம் அடைக்கலம் புகுவதே ஆகும். அடிமையு னடிமை ... யான் அடிமைசெய்வது உன்னிடம் அடிமை பூணுதற்கே ஆகும். கடுகியு னடிகள் தருவாயே ... நீ விரைவில் உன் திருவடிகளைத் தர வேண்டும். விழுதிக ழழகி மரகத வடிவி ... சிறந்து திகழும் அழகியும், பச்சை வடிவானவளும், விமலிமு னருளும் ... பரிசுத்தமானவளுமான பார்வதி முன்பே ஈன்றருளிய முருகோனே ... முருகப் பெருமானே, விரிதல மெரிய குலகிரி நெரிய ... விரிந்த பூமியானது பற்றி எரிய, கிரெளஞ்சகிரி நெரிந்து பொடிபட, விசைபெறு மயிலில் வருவோனே ... வேகமாக வரவல்ல மயிலில் வருபவனே, எழுகடல் குமுற ... ஏழு கடல்களும் கொந்தளிக்க அவுணர்க ளுயிரை யிரைகொளும் ... அசுரர்களின் உயிரை உணவாகக் கொள்ளும் அயிலை யுடையோனே ... வேலினை ஆயுதமாகக் கொண்டவனே, இமையவர் முநிவர் பரவிய புலியுரினில் ... தேவர்களும், முனிவர்களும்* வணங்கித் துதித்த புலியூர் என்னும் சிதம்பரத்தில் நட மருவு பெருமாளே. ... நடனம் செய்கின்ற பெருமாளே. |
* இத்தலத்தில் இறைவனை வணங்கிய முனிவர்கள்: வியாக்கிரபாதர், பதஞ்சலி, உபமன்யு, வசிஷ்டர் ... ஆகியோர் ஆவர். |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 2.481 pg 2.482 pg 2.483 pg 2.484 WIKI_urai Song number: 634 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
'குருஜி' ராகவன் அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள் 'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
'கொடுமுடி' திரு தியாகராஜ தேசிகர் Kodumudi S. Thiyagaraja DhEsigar பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
'மயிலாடுதுறை' திரு சொ. சிவகுமார் Thiru S. Sivakumar பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
திருமதி காந்திமதி சந்தானம் Mrs Kanthimathy Santhanam பாடகர் பக்கத்திற்கு to singer's page |
Song 493 - ezhukadal maNalai (chidhambaram) ezhu kadal maNalai aLavidin adhikam enadh idar piRavi ...... avathAram ini unadh abayam enadh uyir udalum ini udal viduga ...... mudiyAdhu kazhugodu nariyum eri buvi maRali kamalanu migavum ...... ayarvAnAr kadan unadh abayam adimai un adimai kadugi un adigaL ...... tharuvAyE vizhu thigazh azhagi marakatha vadivi vimali mun aruLu ...... murugOnE virithalam eriya kulagiri neriya visai peRu mayilil ...... varuvOnE ezhu kadal kumuRa avuNargaL uyirai irai koLum ayilai ...... udaiyOnE imaiyavar munivar paraviya puliyu rinil nata maruvu ...... perumALE. ......... Meaning ......... ezhu kadal maNalai aLavidin: If one counts the sands on the shores of the seven seas, adhikam enadh idar piRavi avathAram: even that number is exceeded by the number of my miserable births! ini unadh abayam enadh uyir udalum: I surrender my life and body unto You. ini udal viduga mudiyAdhu: I am tired of leaving my body and taking new birth again and again. kazhugodu nariyum eri buvi: Eagles, foxes, fire, earth, maRali kamalanu migavum ayarvAnAr: Yaman (Death-God) and the Creator (BrahmA) are all exhausted in consuming and recreating my bodies. kadan unadh abayam: My duty is to surrender to You totally. adimai un adimai: To this servant, Your service is the only service. kadugi un adigaL tharuvAyE: You must grant me Your Holy feet immediately. vizhu thigazh azhagi marakatha vadivi: She, who is extremely beautiful, with an emerald green complexion, vimali mun aruLu murugOnE: and who is Purity personified, that PArvathi delivered You unto us, Oh MurugA! virithalam eriya kulagiri neriya: Burning the expansive earth and powdering the mighty Krouncha Mount, visai peRu mayilil varuvOnE: You came traveling on the swift Peacock! ezhu kadal kumuRa: While the seven seas burst out, avuNargaL uyirai irai koLum: the demons' (asuras) lives were devoured ayilai udaiyOnE: by Your mighty Spear! imaiyavar munivar paraviya puliyur: At Puliyur (Chidhambaram), DEvAs and Sages* worshipped You nata maruvu perumALE.: when You danced the Cosmic Dance, Oh Great One! |
* The sages who worshipped the Cosmic Dance were VyakrapAdha, Pathanjali, Upamanyu and Vasishta. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |