(இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு எனது முக்கியக் குறிப்பைப் படியுங்கள் - நன்றி).
(Please read my important note before using this website - Thank You).
திருப்புகழ் 469 காய மாய வீடு  (சிதம்பரம்)
Thiruppugazh 469 kAyamAyaveedu  (chidhambaram)
Thiruppugazh - 469 kAyamAyaveedu - chidhambaramSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

mp3
 
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தான தான தான தானன தான தந்த
     தத்த தந்த தத்த தந்த ...... தந்ததான

......... பாடல் .........

காய மாய வீடு மீறிய கூடு நந்து
     புற்பு தந்த னிற்கு ரம்பை ...... கொண்டுநாளுங்

காசி லாசை தேடி வாழ்வினை நாடி யிந்த்ரி
     யப்ர மந்த டித்த லைந்து ...... சிந்தைவேறாய்

வேயி லாய தோள மாமட வார்கள் பங்க
     யத்து கொங்கை யுற்றி ணங்கி ...... நொந்திடாதே

வேத கீத போத மோனமெய் ஞான நந்த
     முற்றி டின்ப முத்தி யொன்று ...... தந்திடாயோ

மாய வீர தீர சூரர்கள் பாற நின்ற
     விக்ர மங்கொள் வெற்பி டந்த ...... செங்கைவேலா

வாகை வேடர் பேதை காதல வேழ மங்கை
     யைப்பு ணர்ந்த வெற்ப கந்த ...... செந்தில்வேளே

ஆயும் வேத கீத மேழிசை பாட வஞ்செ
     ழுத்த ழங்க முட்ட நின்று ...... துன்றுசோதீ

ஆதி நாத ராடு நாடக சாலை யம்ப
     லச்சி தம்ப ரத்த மர்ந்த ...... தம்பிரானே.

......... சொல் விளக்கம் .........

காய மாய வீடு ... இந்த உடல் ஒரு மாய வீடு.

மீறிய கூடு ... அது மிகுத்து எழுந்த ஒரு கூடு போன்றது.

நந்து புற்புதந்தனில் குரம்பை கொண்டு ... அழியும்
நீர்க்குமிழியான இந்தச் சிறு குடிலை வைத்து,

நாளுங் காசி லாசை தேடி ... தினந்தோறும் காசில் ஆசை கொண்டு
அதற்காகப் பல இடங்களிலும் தேடி,

வாழ்வினை நாடி இந்த்ரியப்ர மந்த டித்த லைந்து ... சுக
வாழ்க்கையை விரும்பி, ஐம்பொறிகளாலான மோக மயக்கம் வலுத்து,
அதனால் அலைச்சல் உற்று,

சிந்தைவேறாய் ... மனம் சிதறிக் கலங்கி,

வேயிலாய தோள மா மடவார்கள் ... மூங்கிலைப் போன்ற
தோள்களை உடைய அழகிய மாதரின்

பங்கயத்து கொங்கை யுற்றிணங்கி நொந்திடாதே ... தாமரை
ஒத்த மார்பினை விரும்பி அவர்கள் வசமாகி மனம் நோகாமல்,

வேத கீத போத மோனமெய்ஞான நந்த ... வேதம், கீதம், அறிவு,
மெளனம், மெய்ஞ்ஞானம் தழைத்து வளர,

முற்றிடு இன்ப முத்தி யொன்று தந்திடாயோ ... பரிபூரண
பேரின்ப முக்தி என்னும் ஒப்பற்ற ஒன்றை தந்தருள மாட்டாயோ?

மாய வீர தீர சூரர்கள் பாற நின்ற ... மாயத்தில் வல்ல வீர தீர
சூரர்கள் (சூரன், சிங்கமுகன், தாரகன்) சிதறி அழிய,

விக்ரமங்கொள் வெற்பு இடந்த செங்கைவேலா ... அவர்களை
வெற்றி கொண்டு, கிரெளஞ்சமலையைப் பிளந்த சிவந்த கையில்
வேலை உடையோனே,

வாகை வேடர் பேதை காதல ... வெற்றியாளராம் வேடர்களின் மகள்
வள்ளியைக் காதலித்தவனே,

வேழமங்கையைப் புணர்ந்த வெற்ப ... ஐராவதம் என்ற யானை
வளர்த்த மங்கை தேவயானையை மணந்த மலைக் கிழவோனே,

கந்த செந்தில்வேளே ... கந்தனே, திருச்செந்தூரில் வாழும் கடவுளே,

ஆயும் வேத கீதம் ஏழிசை பாட ... ஆய்ந்து வேத கீதங்களையும்
ஏழிசைகளையும் பாட,

அஞ்செழுத்தழங்க ... பஞ்சாட்சரமாகிய நமசிவாய மந்திரத்தை
ஓதி முழங்க,

முட்ட நின்று துன்றுசோதீ ... அவ்வொலி முழுமையும் நின்று
நெருங்கி விளங்கும் ஜோதியே,

ஆதி நாதராடு நாடக சாலை ... ஆதிநாதராகிய சிவபிரான்
ஆடுகின்ற நாடக சாலையாகிய

அம்பலச்சிதம்ப ரத்தமர்ந்த தம்பிரானே. ... பொன்னம்பலமாகிய
சிதம்பரத்தில் அமர்ந்து விளங்கும் தம்பிரானே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.415  pg 2.416  pg 2.417  pg 2.418 
 WIKI_urai Song number: 610 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

YouTube  'YouTube' Links for this song  
  இப்பாடலுக்கான யூ ட்யூப் பதிவுகள்  

to come வரவிருக்கின்றது

 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 


Song 469 - kAya mAya veedu (chidhambaram)

kAya mAya veedu meeRiya kUdu nandhu
     puRpudhan thaniR kurambai ...... koNdu nALum

kAsil Asai thEdi vAzh vinai nAdi indhriya
     braman thadith alaindhu ...... chinthai vERAy

vEyil Aya thOLa mAmada vArgaL panga
     yaththu kongai utriNangi ...... nondhidAdhE

vEdha geetha bOdha mOna mey nyAna nandham
     utrid inba muththi ondru ...... thandhidAyO

mAya veera dheera sUrargaL pARa nindra
     vikramam koL veRp idandha ...... sengkaivElA

vAgai vEdar pEdhai kAdhala vEzha mangai
     yaippu NarnDa veRpa kanDa ...... chenDilvELE

Ayum vEdha geetham Ezh isai pAda anje
     zhuth thazhanga mutta nindru ...... thundru jOthee

Adhi nAthar Adu nAtaka sAlai amba
     lach chidhambarath amarndha ...... thambirAnE.

......... Meaning .........

kAya mAya veedu meeRiya kUdu: This body is an illusory house, merely an oversized shell.

nandhu puRpudhan thaniR kurambai koNdu: It is just like a bursting bubble in the water on which this little hut is built.

nALum kAsil Asai thEdi vAzh vinai nAdi: Every day I am in pursuit of money desirous of comfort and pleasure in life.

indhriya braman thadith alaindhu chinthai vERAy: I succumb to my sensory organs, and roam around with a shattered mind.

vEyil Aya thOLa mAmada vArgaL: I seek pretty women with soft shoulders like the bamboo

pangayaththu kongai utriNangi nondhidAdhE: and crave for their lotus-like bosoms, losing my heart to them;

vEdha geetha bOdha mOna mey nyAna nandha: (to save me from this misery), for the flourishing of scriptures, music, wisdom, mental peace and true knowledge within myself,

mutrid inba muththi ondru thandhidAyO: will You not kindly bless me with complete liberation?

mAya veera dheera sUrargaL pARa nindra: You conquered the mystical and mighty sUras (SUran, Singamukan and ThArakan) by destroying them;

vikramam koL veRp idandha sengkaivElA: and You split the famous mount Krouncha with the Spear held in Your fair hand!

vAgai vEdar pEdhai kAdhala: You are the lover of VaLLi, the damsel of the victorious hunters!

vEzha mangai yaippu NarnDa veRpa: You married DEvayAnai, the daughter of AirAvatham, the white elephant, and You revel in all mountains!

kanDa chenDilvELE: Oh KandhA! You are the Lord in ThiruchchendhUr!

Ayum vEdha geetham Ezh isai pAda: In the background, there is a lot of vedic music of seven varieties;

anjezhuth thazhanga mutta nindru thundru jOthee: there is a continuous chanting of the PanchAtchara (five lettered) ManthrA of Namasivaya, and this sound is mixed with the closely woven bright light emanating from You!

Adhi nAthar Adu nAtaka sAlai: The dancing stage where the foremost father of all, Lord NadarAja, dances

ambalach chidhambarath amarndha thambirAnE.: is at the shrine of Chidhambaram which is Your abode, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

mp3
 

Thiru Arunagirinathar's Thiruppugazh - 469 kAya mAya veedu - chidhambaram


   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  



  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  


... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 


Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

PLEASE do not ask me for songs about other deities or for BOOKS - This is NOT a bookshop - sorry.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

 மேலே   top