பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/418

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பரம் திருப்புகழ் உரை 413 வேதம், கிதம், போதம்) அறிவு, (மோனம்) மெளனம், மெய்ஞ்ஞானம் (நந்த) தழைத்து வளர்ச்சி யுறவும், (முற்றிடு) பெருகிப்பூரணமான இன்ப் முத்தி என்னும் ஒப்பற்ற ஒன்றைத் தந்தருள மாட்டாயோ! மாயத்தில் வல்ல விர, திர சூரர்களான (சூரன், சிங்கமுகன், தாரகன்) என்போர் சிதறி அழிய (வெற்றிகொண்டு), (நின்ற) செங்கை வேலனே! நிலைத்த (மாயை) பராக்ரமம் கொண்ட கிரெளஞ்ச மலையைப் பிளவு செய்த செங்கை வேலனே! வெற்றியாளராம் வேடர் மகள் (வள்ளியின்) காதலனே! யானை (ஐராவதம்) வளர்த்த மங்கை தேவசேனையைக் கலந்த மலை கிழவனே! கந்தனே! திருச்செந்துாரில் வாழும் வேளே! ஆய்ந்து வேத கிதங்களையும் ஏழிசைகளையும் பாட, அஞ்செழுத்தை ஒதி முழங்க அவ்வொலி முழுமையும் நின்று நெருங்கி விளங்கும் ஜோதியே! ஆதிநாதராகிய சிவபிரான் ஆடுகின்ற நாடக சாலையாகிய பொன்னம்பலத்தைக் கொண்ட சிதம்பரத்தில் அமர்ந்துவிளங்கும் தம்பிரானே! (முத்தியொன்று தந்திடாயோ) 611. துர்க்குணம் கொண்ட தந்திரசாலியை (அல்லது காம தாபம் கொண்டவனை), வேதாளமே உருவமெடுத்தது போன்றவனை, முட்டாளை, குணம் கெட்டவனை, ஆசாரம் குறைவு பட்டவனை, கதியற்றவனை, மலைவேடன் போன்றவனை, வீம்பு பேசும் வாயனை - (மண், நீர், தீ, காற்று, ஆகாயம்) என்னும் ஐந்து பூதங்களாற் - சேரப்பட்டதான பயனற்றவனை, மூடருள் மூடனை, அழிந்துபோகும் கருவின் வழியே வந்த வீணருள் வீணனை, அழுகிப்போன பண்டம் போல்பவனை, அவிந்து போன பதனழிந்த பண்டம் போன்றவனை, விதம்விதமான உண்டியை உண்பவனை, (அறுசுவை உண்டியை விரும்புபவனை) அன்பு, இல்லாத