திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 467 முகசந்திர புருவம் (சிதம்பரம்) Thiruppugazh 467 mugasandhirapuruvam (chidhambaram) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனதந்தன தனதந்தன தனதந்தன தான தனதந்தன தனதந்தன தனதந்தன தான தனதந்தன தனதந்தன தனதந்தன தானத் ...... தனதான ......... பாடல் ......... முகசந்திர புருவஞ்சிலை விழியுங்கயல் நீல முகிலங்குழ லொளிர்தொங்கலொ டிசைவண்டுகள் பாட மொழியுங்கிளி யிதழ்பங்கய நகைசங்கொளி காதிற் ...... குழையாட முழவங்கர சமுகம்பரி மளகுங்கும வாச முலையின்பர சகுடங்குவ டிணைகொண்டுநல் மார்பில் முரணுஞ்சிறு பவளந்தர ளவடந்தொடை யாடக் ...... கொடிபோலத் துகிரின்கொடி யொடியும்படி நடனந்தொடை வாழை மறையும்படி துயல்சுந்தர சுகமங்கைய ரோடு துதைபஞ்சணை மிசையங்கசன் ரதியின்பம தாகச் ...... செயல்மேவித் தொடைசிந்திட மொழிகொஞ்சிட அளகஞ்சுழ லாட விழிதுஞ்சிட இடைதொய்ஞ்சிட மயல்கொண்டணை கீனும் சுகசந்திர முகமும்பத அழகுந்தமி யேனுக் ...... கருள்வாயே அகரந்திரு உயிர்பண்புற அரியென்பது மாகி உறையுஞ்சுட ரொளியென்கணில் வளருஞ்சிவ காமி அமுதம்பொழி பரையந்தரி உமைபங்கர னாருக் ...... கொருசேயே அசுரன்சிர மிரதம்பரி சிலையுங்கெட கோடு சரமும்பல படையும்பொடி கடலுங்கிரி சாய அமர்கொண்டயில் விடுசெங்கர வொளிசெங்கதிர் போலத் ...... திகழ்வோனே மகரங்கொடி நிலவின்குடை மதனன்திரு தாதை மருகென்றணி விருதும்பல முரசங்கலை யோத மறையன்றலை யுடையும்படி நடனங்கொளு மாழைக் ...... கதிர்வேலா வடிவிந்திரன் மகள்சுந்தர மணமுங்கொடு மோக சரசங்குற மகள்பங்கொடு வளர்தென்புலி யூரில் மகிழும்புகழ் திருவம்பல மருவுங்கும ரேசப் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... முக(ம்) சந்திர புருவம் சிலை விழியும் கயல் நீல முகில் அம்குழல் ஒளிர் தொங்கலோடு இசை வண்டுகள் பாட மொழியும் கிளி இதழ் பங்கயம் நகை சங்கு ஒளி காதில் குழை ஆட ... முகம், சந்திரன். புருவம், வில். கண், கயல் மீன். கரிய மேகம் போன்றது அழகிய கூந்தல். ஒளி வீசும் மாலையில் இருந்து இசைகளை வண்டுகள் பாட, பேச்சும் கிளி போன்றது. வாயிதழ், தாமரை. பற்கள் சங்கின் ஒளி கொண்டன. காதில் குண்டலங்கள் அசைவன. அம் கர சமுகம் முழவ பரிமள குங்கும வாச முலை இன்ப ரச குடம் குவடு இணை கொண்டு நல் மார்பில் முரணும் சிறு பவளம் தரள வடம் தொடை ஆட ... அழகிய கையிணைகள் (வளையல்களால்) ஒலி செய்ய, வாசனை உள்ள செஞ்சாந்தின் நறு மணம் கொண்ட மார்பகங்கள் என்னும் இன்பச் சாறு பொருந்திய குடத்துக்கும், மலைக்கும் ஒப்பாகி, பரந்த மார்பில் நிறத்தில் மாறுபடும் சிறிய பவள வடமும், முத்து மாலையும் அசைந்தாட, கொடி போலத் துகிரின் கொடி ஒடியும்படி நடனம் தொடை வாழை மறையும்படி துயல் சுந்தர சுக மங்கையரோடு துதை பஞ்சு அணை மிசை அங்கசன் ரதி இன்பம் அதாகச் செயல் மேவி ... கொடி அசைவது போல, பவளக் கொடி ஒடிவது போன்ற இடை துவள, நடனம் செய்து, வாழை போன்ற தொடை மறையும்படி அசைந்தாடுகின்ற, அழகிய சுகம் தருகின்ற பெண்களோடு, நெருங்கிய பஞ்சு மெத்தையில் மன்மதன் ரதியும் போல இன்பம் தரும் லீலைகளைச் செய்து, தொடை சிந்திட மொழி கொஞ்சிட அளகம் சுழல் ஆட விழி துஞ்சிட இடை தொய்ஞ்சிட மயல் கொண்டு அணைகீனும் சுக சந்திர முகமும் பத அழகும் தமியேனுக்கு அருள்வாயே ... மாலை சிதறவும், பேச்சு கொஞ்சவும், கூந்தல் சுழன்று அசையவும், கண்கள் சோர்வு அடையவும், இடை தளரவும், காம மயக்கம் கொண்டு நான் விலைமாதர்களைத் தழுவிய போதிலும், அழகிய சந்திரன் போன்ற உனது முக தரிசனத்தையும், திருவாயால் கூறும் உபதேச மொழியையும் அடியேனுக்கு அருள் செய்வாயாக. அகர அம் திரு உயிர் பண்பு உற அரி என்பதும் ஆகி உறையும் சுடர் ஒளி என் க(ண்)ணில் வளரும் சிவகாமி அமுதம் பொழி பரை அந்தரி உமை பங்க அரனாருக்கு ஒரு சேயே ... அகர எழுத்தைப் போல் தனித்தும் வேறாக இருந்தும் ஆன்மாக்கள் உய்ய வழி காட்டும் திருமால்* ஆகி, என் கண்ணில் விளங்கும் சுடர் ஒளியாம் சிவகாமியாகிய, அமுதத்தைப் பொழியும் பராசக்தி உமா தேவியின் பாகத்தில் உறையும் சிவபெருமானுக்கு ஒப்பற்ற குழந்தையே, அசுரன் சிரம் இரதம் பரி சிலையும் கெட கோடு சரமும் பல படையும் பொடி கடலும் கிரி சாய அமர் கொண்டு அயில் விடு செம் கர ஒளி செம் கதிர் போலத் திகழ்வோனே ... அசுரனுடைய தலை, தேர், குதிரை, வில் இவை எல்லாம் கெட, (அவனுக்குக் காவலாயிருந்த) எழு கிரி, அம்பு முதலிய பல படைகளும் பொடிந்து தூளாக, கடலும், கிரவுஞ்ச மலையும் சாய்ந்து விழ, போரை மேற் கொண்டு வேலைச் செலுத்திய செவ்விய கரத்தினனே, ஒளி வீசும் செஞ்சுடர்ச் சூரியனைப் போல விளங்குபவனே, மகரம் கொடி நிலவின் குடை மதனன் திரு தாதை மருகன் என்று அணி விருதும் பல முரசம் கலை ஓத மறையன் தலை உடையும்படி நடனம் கொளு மாழைக் கதிர் வேலா ... மகர மீனைக் கொடியாகவும் நிலவைக் குடையாகவும் உடைய மன்மதனின் அழகிய தந்தையாகிய திருமாலின் மருமகன் என்று அழகிய வெற்றிச் சின்னமும், முரசம் என்னும் பறைகளும், சாஸ்திர நூல்களும் புகழ்ந்து நிற்க, பிரமனின் தலை உடையும்படி (அவனைக் குட்டி) திருவிளையாடல் கொண்டவனும், பொன்னின் நிறத்தை உடையவனும் ஆகிய ஒளி வீசும் வேலனே, வடிவு இந்திரன் மகள் சுந்தர மணமும் கொடு மோக சரசம் குற மகள் பங்கொடு வளர் தென் புலியூரில் மகிழும் புகழ் திரு அம்பலம் மருவும் குமரேசப் பெருமாளே. ... அழகு நிறைந்த இந்திரனுடைய மகளாகிய தேவயானையோடு அழகிய திருமணத்தைச் செய்து கொண்டு, (பின்பு) காம லீலைகளை குறப் பெண் வள்ளியோடு விளையாடி, திருவளரும் தென்புலியூரில் (சிதம்பரத்தில்) யாவரும் கண்டு களிக்கும் திருவம்பலத்தில் விளங்கும் குமரேசப் பெருமாளே. |
* திருமாலும் உமாதேவியும் ஒரே அம்சத்தினர். |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 2.409 pg 2.410 pg 2.411 pg 2.412 WIKI_urai Song number: 608 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை Sorry, no audio recordings for this song |
Song 467 - mugasandhira puruvam (chidhambaram) mukachanthira puruvanjchilai vizhiyungkayal neela mukilangkuzha loLirthongalo disaivaNdukaL pAda mozhiyungkiLi yithazhpangaya nakaisangoLi kAthiR ...... kuzhaiyAda muzhavangkara samukampari maLakunguma vAsa mulaiyinpara sakudangkuva diNaikoNdunal mArpil muraNunjchiRu pavaLanthara Lavadanthodai yAdak ...... kodipOlath thukirinkodi yodiyumpadi nadananthodai vAzhai maRaiyumpadi thuyalsunthara sukamangaiya rOdu thuthaipanjchaNai misaiyangasan rathiyinpama thAkac ...... cheyalmEvith thodaisinthida mozhikonjida aLakanjchuzha lAda vizhithunjhida idaithoynjida mayalkoNdaNai kInum sukachanthira mukamumpatha azhakunthami yEnuk ...... karuLvAyE akaranthiru uyirpaNpuRa ariyenpathu mAki uRaiyunjchuda roLiyenkaNil vaLarunjchiva kAmi amuthampozhi paraiyanthari umaipangara nAruk ...... korusEyE asuransira mirathampari silaiyungkeda kOdu saramumpala padaiyumpodi kadalungiri sAya amarkoNdayil vidusengkara voLisengkathir pOlath ...... thikazhvOnE makarangkodi nilavinkudai mathananthiru thAthai marukenRaNi viruthumpala murasangkalai yOtha maRaiyanRalai yudaiyumpadi nadanangkoLu mAzhaik ...... kathirvElA vadivinthiran makaLsunthara maNamungkodu mOka sarasangkuRa makaLpangodu vaLarthenpuli yUril makizhumpukazh thiruvampala maruvungkuma rEsap ...... perumALE. ......... Meaning ......... muka(m) chanthira puruvam silai vizhiyum kayal neela mukil amkuzhal oLir thongalOdu isai vaNdukaL pAda mozhiyum kiLi ithazh pangayam nakai sangu oLi kAthil kuzhai Ada: Their face is the moon; their eye-brows are the bows; their eyes are the kayal fish; their beautiful hair is the dark cloud; swarming around their dazzling garlands, the beetles hum; their speech is like that of the parrot; their lips are like the lotus; their teeth are bright-white like the conch; and the studs swing on their ears. am kara samukam muzhava parimaLa kunguma vAsa mulai inpa rasa kudam kuvadu iNai koNdu nal mArpil muraNum siRu pavaLam tharaLa vadam thodai Ada: The pair of their lovely arms rattle (with the sound of bangles); the breasts on their vermillion-smeared fragrant bosom look like a pot filled with nectar and a mountain; on their wide chest, two strings of contrasting colours, namely one of corals and the other of pearls, heave; kodi pOlath thukirin kodi odiyumpadi nadanam thodai vAzhai maRaiyumpadi thuyal sunthara suka mangaiyarOdu thuthai panju aNai misai angasan rathi inpam athAkach cheyal mEvi: they dance like a swinging creeper as their waist caves in like a liana of coral and with their thighs that look like plantain-stem hidden behind their attire; these girls offer sensual pleasure on the tightly-packed cotton mattress where we recline like Manmathan (God of Love) and his consort, Rathi, indulging in blissful and erotic acts; thodai sinthida mozhi konjida aLakam chuzhal Ada vizhi thunjida idai thoynjida mayal koNdu aNaikeenum suka santhira mukamum patha azhakum thamiyEnukku aruLvAyE: the garlands become loose scattering the flowers; the speech becomes lisp; their hair becomes untied, revolving like a spiral; their eyes roll sideways in fatigue; their waist caves in; although I keep hugging these whores in a passionate delusion, I wish to have the vision of Your beautiful moon-like face and listen to the words of wisdom emanating from Your hallowed mouth, Oh Lord; kindly grant me my wish! akara am thiru uyir paNpu uRa ari enpathum Aki uRaiyum sudar oLi en ka(N)Nil vaLarum sivakAmi amutham pozhi parai anthari umai panga aranArukku oru sEyE: Like the alphabet "a", He is unique and distinct while remaining a guiding force for the upliftment of all lives; He is Lord VishNu*, and She is of His form; She is the glowing light in my eyes, SivagAmi; She is the Supreme Power that exudes nectar; She is Goddess UmA on whose left Lord SivA is concorporate; and You are the matchless child of that SivA! asuran siram iratham pari silaiyum keda kOdu saramum pala padaiyum podi kadalum giri sAya amar koNdu ayil vidu sem kara oLi sem kathir pOlath thikazhvOnE: Destroying the head, the chariot, the horses and the bow of the demon SUran and shattering his seven (protective) mountains the arrows, the sea and the mount Krouncha to pieces, You advanced in the battlefield wielding the spear in Your reddish hand! You shine like the brilliant sun with golden rays, Oh Lord! makaram kodi nilavin kudai mathanan thiru thAthai marukan enRu aNi viruthum pala murasam kalai Otha maRaiyan thalai udaiyumpadi nadanam koLu mAzhaik kathir vElA: Hailing You as the nephew of Lord VishNu whose son, Manmathan (God of Love), holds the staff of makara fish and displays the moon as his umbrella, and with beautiful trumpets blowing triumphant tunes, many drums and texts of scriptures laud You, Oh Lord! You move around sportively after knocking and breaking the head of Brahma with Your knuckles, Oh Lord, with a golden complexion, holding the radiant spear! vadivu inthiran makaL sunthara maNamum kodu mOka sarasam kuRa makaL pangodu vaLar then puliyUril makizhum pukazh thiru ampalam maruvum kumarEsap perumALE.: After grandly marrying DEvayAnai, the beautiful daughter of Indra, You carried on with Your passionate pursuits wooing VaLLi, the damsel of the KuRavAs, Oh Lord KumarA! You then took Your seat on the golden stage in this prosperous southern town, PuliyUr (Chidhambaram) to be worshipped with relish by one and all, Oh Great One! |
* Goddess UmA and Lord VishNu have identical attributes. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |