பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/410

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பரம்) திருப்புகழ் உரை 405 608. முகம் - திங்கள், புருவம் - வில், கண் - கயல்மீன், கரிய மேகம் அழகிய கூந்தல், அந்தக் கூந்தலில் உள்ள ஒளி வீசும் மாலையில் இருந்து இசைகளை வண்டுகள் பாட, மொழி - கிளிமொழி, வாயிதழ் - தாமரையிதழ், பல் - சங்கின் ஒளி கொண்டன, காதில் குழைகள் அசைவன, முழவங்கர சமுகம் (அங்கர சமுகம் முழவ) அழகிய கையினைகள் (வளையணிந்தமையால்) ஒலி செய்ய, வாசனை உள்ள செஞ் சாந்தின் நறுமணம் கொண்ட கொங்கைகள் என்னும் இன்பமான சாறு பொதிந்த குடத்துக்கும் மலைக்கும் நிகராகி விளங்கும் இரண்டையும் கொண்டுள்ள மார்பிடத்தில் - (நிறத்தில்) மாறுபடும் சிறிய பவள (வடமும்) மாலையும் முத்து (வடமும்) மாலையும் ஆடி அசைய, கொடிபோல (கொடி அசைவதுபோல அசைந்தாட) பவளக்கொடி ஒடிவதுபோல நடனம் (செய்து) வாழை போன்ற தொடை மறையும்படி (ஆடை) அசைந்து ஆடுகின்ற அழகிய சுகம் தருகின்ற பெண்களோடு நெருங்கிய பஞ்சு மெத்தையில் (அங்கசன்) மன்மதனும் ரதியும் போல இன்பந்தரும் லீலைகளைச் செய்து மாலை சிதறவும், மொழி கொஞ்சவும், கூந்தல் சுழன்று அசையவும், கண்கள் சோர்வு அடையவும், இடை தளரவும் காம மயக்கம் கொண்டு அணைந்தபோதிலும், அழகிய உனது திங்கள் போன்ற குளிர் முக தரிசனத்தையும், கந்தலோகத்தில் வசிக்கும் பதவி அழகையும் (அல்லது) உனது திருவாயால் (உபதேசத்தையும்) அல்லது உனது திருவடியால் (திருவடி திகூைடியையும்) அடியேனுக்கு அருள்வாயே!