திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 455 கொந்தளம் புழு (சிதம்பரம்) Thiruppugazh 455 kondhaLampuzhu (chidhambaram) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தந்த தந்தன தந்த தந்தன தந்த தந்தன தந்த தந்தன தந்த தந்தன தந்த தந்தன ...... தனதான ......... பாடல் ......... கொந்த ளம்புழு கெந்த வண்பனி ரம்ப சம்ப்ரம ணிந்த மந்தர கொங்கை வெண்கரி கொம்பி ணங்கிய ...... மடமாதர் கொந்த ணங்குழ லின்ப மஞ்சள ணிந்து சண்பக வஞ்சி ளங்கொடி கொஞ்சு பைங்கிளி யன்பெ னுங்குயில் ...... மயில்போலே வந்து பஞ்சணை யின்ப முங்கொடு கொங்கை யும்புய முந்த ழும்புற மஞ்சு வொண்கலை யுங்கு லைந்தவ ...... மயல்மேலாய் வஞ்சி னங்கள்தி ரண்டு கண்செவி யுஞ்சு கங்கள்தி ரும்பி முன்செய்த வஞ்சி னங்களு டன்கி டந்துட ...... லழிவேனோ தந்த னந்தன தந்த னந்தன திந்தி மிந்திமி திந்தி மிந்திமி சங்கு வெண்கல கொம்பு துந்துமி ...... பலபேரி சஞ்ச லஞ்சல கொஞ்சு கிண்கிணி தங்கு டுண்டுடு டுண்டு டன்பல சந்தி ரம்பறை பொங்கு வஞ்சகர் ...... களமீதே சிந்த வெண்கழு கொங்கு பொங்கெழு செம்பு ளங்கரு டன்ப ருந்துகள் செங்க ளந்திகை யெங்கு மண்டிட ...... விடும்வேலா திங்க ளிந்திர னும்ப ரந்தர ரும்பு கழ்ந்துரு கும்ப ரன்சபை செம்பொ னம்பல மங்கொ ளன்பர்கள் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... கொந்தளம் புழுகு கெந்த வண் ப(ன்)னிர் ரம்ப சம்ப்ரம் அணிந்த மந்தர கொங்கை வெண் கரி கொம்பு இணங்கிய மட மாதர் ... தலை மயிரில் புனுகு சட்டமும் வாசனை உள்ள நல்ல பன்னீரும் நிரம்பச் சிறப்பாக அணிந்துள்ளவர்களும், மந்தர மலை போல் பருத்த மார்பகங்கள் என்னும் வெண்ணிறமான யானைத் தந்தங்கள் பொருந்தியுள்ள அழகிய விலைமாதர்கள். கொந்து அண் அம் குழல் இன்ப மஞ்சள் அணிந்து சண்பக வஞ்சி இளம் கொடி கொஞ்சு பைங்கிளி அன்பு எனும் குயில் மயில் போலே ... பூங்கொத்துக்கள் சேர்ந்துள்ள அழகிய கூந்தல் உடையவராய், சுகம் தரக் கூடிய மஞ்சளைப் பூசிக் கொண்டு, சண்பக மலர் சூடி, வஞ்சியின் இளமை வாய்ந்த கொடி போல் விளங்கி, கொஞ்சுகின்ற பச்சைக் கிளி போலவும் அன்பு வாய்ந்த குயில் போலவும், மயில் போலவும், வந்து பஞ்சணை இன்பமும் கொடு கொங்கையும் புயமும் தழும்பு உற மஞ்சு ஒண் கலையும் குலைந்து அவ(ம்) மயல் மேலாய் ... வந்து, பஞ்சு மெத்தையில் இன்பத்தையும் கொடுக்கும் மார்பகமும் தோள்களும் (நகக்குறிகளால்) வடுப்பட, அழகிய நல்ல ஆடையும் கலைந்து, கேடும் காம இச்சையும் மிகுவதாய், வஞ்சினங்கள் திரண்டு கண் செவியும் சுகங்கள் திரும்பி முன் செய்த வஞ்சினங்களுடன் கிடந்து உடல் அழிவேனோ ... சபத மொழிகள் நிரம்பச் சொல்லி, கண்கள், காதுகள் ஆகியவை (முன்பு கொடுத்திருந்த) சுகங்கள் மாறுபட்டு (குருடாய், செவிடாய்), முன்பு செய்திருந்த சூள்களுடன் சேர்ந்து படுக்கையிலே கிடந்து இறப்பேனோ? தந்தனந்தன தந்தனந்தன திந்திமிந்திமி திந்திமிந்திமி சங்கு வெண்கல கெம்பு துந்துமி பல பேரி சஞ்சலஞ் சல கொஞ்சு கிண்கிணி தங்கு டுண்டுடு டுண்டுடன் பல சந்திர அம்பறை பொங்கு வஞ்சகர் களம் மீதே சிந்த ... தந்தனந்தன தந்தனந்தன திந்திமிந்திமி திந்திமிந்திமி இவ்வாறு ஒலிக்கும் சங்கும், ஊது கொம்பும், துந்துமி பேரிகை முதலான பல முரசு வாத்தியங்களும், சஞ்சலஞ்சல என்று கொஞ்சும் கிண்கிணி, பொருந்தும் டுண்டுடு டுண்டுடன் என்னும் ஒலியுடன் பல சந்திரன் போல் வட்ட வடிவமான அழகிய பறைகள மிக்க எழ, வஞ்சகர்களாகிய அசுரர்கள் போர்க் களத்தில் மடிந்து போக, வெண் கழுகு ஒ(ஓ)ங்கு பொங்கு எழு செம் புள் அம் கருடன் பருந்துகள் செம் களம் திகை எங்கும் அண்டிட விடும் வேலா ... வெண்ணிறக் கழுகுகளும், ஓங்கி உயர்ந்து எழுகின்ற செம்மை நிறமான பறவையான அழகிய கருடனும், பருந்துகளும் (இரத்தத்தால்) செந்நிறம் கொண்ட போர்க் களத்தில் எல்லா திசைகளிலும் நெருங்கி அடையும்படியாகச் செலுத்திய வேலனே, திங்கள் இந்திரன் உம்பர் அந்தரரும் புகழ்ந்து உருகும் பரன் சபை செம் பொன் அம்பலம் அம்கொள் அன்பர்கள் பெருமாளே. ... சந்திரனும் இந்திரனும் தேவர்களும் வேறு விண்ணில் உறைபவர்களும் புகழ்ந்து உருகும் சிவனாரின் சபையாகிய செவ்விய பொன்னம்பலத்தை அழகாக உன் இருப்பிடமாகக் கொண்ட பெருமாளே, அன்பர்கள் பெருமாளே. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 2.371 pg 2.372 pg 2.373 pg 2.374 WIKI_urai Song number: 596 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை Sorry, no audio recordings for this song |
Song 455 - kondhaLam puzhu (chidhambaram) thantha thanthana thantha thanthana thantha thanthana thantha thanthana thantha thanthana thantha thanthana ...... thanathAna kontha Lampuzhu kentha vaNpani rampa samprama Nintha manthara kongai veNkari kompi Nangiya ...... madamAthar kontha Nanguzha linpa manjaLa Ninthu saNpaka vanji Langodi konju paingiLi yanpe nunguyil ...... mayilpOlE vanthu panjaNai yinpa mungodu kongai yumpuya muntha zhumpuRa manju voNkalai yungu lainthava ...... mayalmElAy vanji nangaLthi raNdu kaNsevi yunju kangaLthi rumpi munseytha vanji nangaLu danki danthuda ...... lazhivEnO thantha nanthana thantha nanthana thinthi minthimi thinthi minthimi sangu veNkala kompu thunthumi ...... palapEri sanja lanjala konju kiNkiNi thangu duNdudu duNdu danpala santhi rampaRai pongu vanjakar ...... kaLameethE sintha veNkazhu kongu pongezhu sempu Langaru danpa runthukaL senga Lanthikai yengu maNdida ...... vidumvElA thinga Linthira numpa ranthara rumpu kazhnthuru kumpa ransapai sempo nampala mango LanparkaL ...... perumALE. ......... Meaning ......... konthaLam puzhuku kentha vaN pa(n)nir rampa sampram aNintha manthara kongai veN kari kompu iNangiya mada mAthar: Daubing the perfume of civet and fragrant rose-water on their hair profusely, these pretty whores display their robust bosom looking like the Mount Manthara and like the white ivory tusks of the elephant; konthu aN am kuzhal inpa manjaL aNinthu saNpaka vanji iLam kodi konju paingiLi anpu enum kuyil mayil pOlE: they have bedecked bunches of flowers on their beautiful hair and smeared the soothing paste of turmeric on their face; also adorning with shaNpaka (champak) flowers, these women look like the young creeper vanji (rattan reed), resembling the green parrot, the endearing cuckoo and the peacock; vanthu panjaNai inpamum kodu kongaiyum puyamum thazhumpu uRa manju oN kalaiyum kulainthu ava(m) mayal mElAy: they come to their bed made of cotton mattress and gleefully suffer the scars (of nail-marks), dishevelling their nice garments and enhancing my harm and passion simultaneously; vanjinangaL thiraNdu kaN seviyum sukangaL thirumpi mun seytha vanjinangaLudan kidanthu udal azhivEnO: I blabber a lot of words of vows; my eyes and ears, that enjoyed the bliss of passion (earlier), are now in a reverse gear (leaving me blind and deaf), and I am now laid up on the bed along with all my vows; am I destined to die away like this? thanthananthana thanthananthana thinthiminthimi thinthiminthimi sangu veNkala kempu thunthumi pala pEri sanjalanj chala konju kiNkiNi thangu duNdudu duNdudan pala santhira ampaRai pongu vanjakar kaLam meethE sintha: To the beats sounding like "thanthananthana thanthananthana thinthiminthimi thinthiminthimi", conches, large drums along with similar percussion instruments, the beads in the anklets making the noise "sanjalanj chala" and many large and round tom-toms that look like the moon made a loud noise as the treacherous demons perished on the battlefield; veN kazhuku o(O)ngu pongu ezhu sem puL am karudan parunthukaL sem kaLam thikai engum aNdida vidum vElA: white eagles, the reddish garudans (bald-eagles) that soar high on the sky and the vultures closed in flocking from all directions over the top of the battlefield which turned red (due to the gushing blood) as You wielded Your spear, Oh Lord! thingaL inthiran umpar anthararum pukazhnthu urukum paran sapai sem pon ampalam amkoL anparkaL perumALE.: This golden stage in Chidhambaram that belongs to Lord SivA and that is praised and ardently worshipped by the moon, Indra, the celestials and other denizens of the sky is also Your lovely abode, Oh Lord! You are the Lord of Your devotees, Oh Great One! |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |