![]() | ![]() திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's | ![]() |
---|
(இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு எனது முக்கியக் குறிப்பைப் படியுங்கள் - நன்றி). (Please read my important note before using this website - Thank You). |
திருப்புகழ் 454 கங்குலின் குழல் (சிதம்பரம்) Thiruppugazh 454 kangkulinkuzhal (chidhambaram) |
![]() | ![]() | தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தந்த தந்தனத் தான தந்தன தந்த தந்தனத் தான தந்தன தந்த தந்தனத் தான தந்தன ...... தந்ததான ......... பாடல் ......... கங்கு லின்குழற் கார்மு கஞ்சசி மஞ்ச ளின்புயத் தார்ச ரம்பெறு கண்கள் கொந்தளக் காது கொஞ்சுக ...... செம்பொனாரம் கந்த ரந்தரித் தாடு கொங்கைக ளும்ப லின்குவட் டாமெ னுங்கிரி கந்த முஞ்சிறுத் தேம லும்பட ...... சம்பைபோல அங்க மைந்திடைப் பாளி தங்கொடு குந்தி யின்குறைக் கால்ம றைந்திட அண்சி லம்பொலிப் பாட கஞ்சரி ...... கொஞ்சமேவும் அஞ்சு கங்குயிற் பூவை யின்குரல் அங்கை பொன்பறிக் கார பெண்களொ டண்டி மண்டையர்க் கூழி யஞ்செய்வ ...... தென்றுபோமோ சங்கு பொன்தவிற் காள முந்துரி யங்கள் துந்துமிக் காட திர்ந்திட சந்த செந்தமிழ்ப் பாணர் கொஞ்சிட ...... அண்டகோசம் சந்தி ரன்பதத் தோர்வ ணங்கிட இந்தி ரன்குலத் தார்பொ ழிந்திட தந்தி ரம்புயத் தார்பு கழ்ந்திட ...... வந்தசூரைச் செங்கை யுஞ்சிரத் தோடு பங்கெழ அந்த கன்புரத் தேற வஞ்சகர் செஞ்ச ரந்தொடுத் தேந டம்புரி ...... கந்தவேளே திங்க ளொண்முகக் காமர் கொண்டவன் கொங்கை மென்குறப் பாவை யுங்கொடு செம்பொ னம்பலத் தேசி றந்தருள் ...... தம்பிரானே. ......... சொல் விளக்கம் ......... கங்குலின் கார் குழல் முகம் சசி மஞ்சளின் புயத்தார் சரம் பெறு கண்கள் கொந்தளக் காதுகொஞ்சுக ... இருண்ட மேகம் போன்று கறு நிறமான கூந்தலை உடையவர்கள். சந்திரன் போன்ற முகம் உடையவர்கள். மஞ்சள் விளங்கும் கை உடையவர்கள். அம்பு போன்ற கண்களை உடையவர்கள். தலை மயிற் சுருள் காதைக் கொஞ்சும்படி அமைந்தவர்கள். செம் பொன் ஆரம் கந்தரம் தரித்து ஆடு கொங்கைகள் உம்பலின் குவட்டு ஆம் எனும் கிரிகந்தமும் சிறு தேமலும் பட சம்பை போல அங்கு அமைந்து இடை ... செம் பொன் மாலை கழுத்தில் அணிந்து, அசைந்தாடும் மார்பகங்கள் யானை போலும் திரட்சி கொண்டதைப் போன்ற மலையாய், அகில் நறு மணமும் சிறிய தேமலும் தோன்ற, மின்னல் போல இடையானது அங்கு அமையப் பெற்று, பாளிதம் கொடு குந்தியின் குறைக் கால் மறைந்திட அண் சிலம்பு ஒலிப் பாடகம் சரி கொஞ்ச மேவும் ... பட்டு ஆடை கொண்டு குதிக்கால் மறையும்படி உடுத்து, அடுத்துள்ள சிலம்பும், பாடகம் என்ற காலணியும், கை வளையுடன் (ஒத்து) ஒலிக்க உள்ளவர்களாய், அஞ்சுகம் குயில் பூவையின் குரல் அம் கை பொன் பறிக்கார பெண்கள் ஓடு அண்டி மண்டையர்க்கு ஊழியம் செய்வது என்று போமோ ... கிளி, குயில், நாகணவாய்ப்புள் ஆகியவற்றின் குரலை உடையவர்களாய், அழகிய கையில் பொன்னை அபகரிக்கின்ற விலைமாதருடன் நெருங்கி, அத்தகைய வேசிகளுக்கு சேவக வேலை செய்வது என்றைக்குத் தொலையுமோ? சங்கு பொன் தவில் காளமும் துரியங்கள் துந்துமிக் காடு அதிர்ந்திட சந்த செம் தமிழ்ப் பாணர் கொஞ்சிட ... சங்குகளும், அழகிய மேளங்களும், ஊது கொம்பும், முரசப் பறைகளும், பேரிகைகளும் கூட்டமாக அதிர்ச்சி செய்து ஒலிக்க, அழகிய செந்தமிழ்ப் பாடல்களைப் பாடவல்ல பாணர்கள் அருமையாக வாசிக்க, அண்ட கோசம் சந்திரன் பதத்தோர் வணங்கிட இந்திரன் குலத்தார் பொழிந்திட தந்திரம் புயத்தார் புகழ்ந்திட வந்த சூரை ... அண்டங்கள் எல்லாவற்றிலும் உள்ள அனைவரும் சந்திர மண்டலத்தில் உள்ளவர்களும் வணங்கவும், தேவர்கள் பூமாரி பொழியவும், யாழ் ஏந்தும் கையினரான கந்தருவர் போற்றவும், எதிர்த்து வந்த சூரனின் செம் கையும் சிரத்தோடு பங்கு எழ அந்தகன் புரத்து ஏற வஞ்சகர் செம் சரம் தொடுத்தே நடம் புரி கந்தவேளே ... செவ்விய கைகளையும் தலையுடன் துண்டாகும்படி யமனுலகுக்கு வஞ்சகராகிய அசுரரர்கள் போய்ச் சேரும்படியாக சிறந்த அம்புகளைச் செலுத்தி நடனமாடிய கந்தப் பெருமானே, திங்கள் ஒண் முகக் காமர் கொண்ட வன் கொங்கை மென் குறப் பாவையும் கொடு செம் பொன் அம்பலத்தே சிறந்து அருள் தம்பிரானே. ... சந்திரனை ஒத்த ஒளி வீசும் அழகும் முகமும் உடையவளும், வலிய மார்பகங்களை உடைய மென்மை வாய்ந்தவளுமாகிய குறப் பெண் வள்ளியுடன் சிறந்த சிதம்பரத்தில் மேம்பட்டு அருளும் தம்பிரானே. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 2.369 pg 2.370 pg 2.371 pg 2.372 WIKI_urai Song number: 595 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை Sorry, no audio recordings for this song |
(Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
Song 454 - kangkulin kuzhal (chidhambaram) thantha thanthanath thAna thanthana thantha thanthanath thAna thanthana thantha thanthanath thAna thanthana ...... thanthathAna ......... Song ......... kangu linkuzhaR kArmu kanjasi manja Linpuyath thArsa rampeRu kaNkaL konthaLak kAthu konjuka ...... semponAram kantha rantharith thAdu kongaika Lumpa linkuvat tAme nungiri kantha munjiRuth thEma lumpada ...... sampaipOla anga mainthidaip pALi thangodu kunthi yinkuRaik kAlma Rainthida aNsi lampolip pAda kanjari ...... konjamEvum anju kanguyiR pUvai yinkural angai ponpaRik kAra peNkaLo daNdi maNdaiyark kUzhi yanjeyva ...... thenRupOmO sangu ponthaviR kALa munthuri yangaL thunthumik kAda thirnthida santha senthamizhp pANar konjida ...... aNdakOsam santhi ranpathath thOrva Nangida inthi rankulath thArpo zhinthida thanthi rampuyath thArpu kazhnthida ...... vanthacUraic chengai yunjirath thOdu pangezha antha kanpurath thERa vanjakar senja ranthoduth thEna dampuri ...... kanthavELE thinga LoNmukak kAmar koNdavan kongai menkuRap pAvai yungodu sempo nampalath thEsi RantharuL ...... thampirAnE. ......... Meaning ......... kangulin kAr kuzhal mukam sasi manjaLin puyaththAr saram peRu kaNkaL konthaLak kAthukonjuka: Their hair is black like the dark cloud. Their face is like the moon. Their hands are soaked in yellowish turmeric. Their eyes are like the arrows. The curls on their hair playfully tease their ears. sem pon Aram kantharam thariththu Adu kongaikaL umpalin kuvattu Am enum kirikanthamum siRu thEmalum pada sampai pOla angu amainthu idai: They wear a reddish golden chain around their neck. Their heaving mountain-like breasts are robust like the elephant and display light decoloration, while they exude the aroma of incence. Their waist is thin like the lightning. pALitham kodu kunthiyin kuRaik kAl maRainthida aN silampu olip pAdakam sari konja mEvum: The silk saree that they wrap around covers their heels where the anklets called pAdakam jingle along with the bangles on their arms. anjukam kuyil pUvaiyin kural am kai pon paRikkAra peNkaL Odu aNdi maNdaiyarkku Uzhiyam seyvathu enRu pOmO: Their voice is like that of the parrot, cuckoo and mynah. With their beautiful hands they resort to stealing the gold (of their suitors). Why I am hankering after such whores and when will my running errands for these prostitutes end? sangu pon thavil kALamum thuriyangaL thunthumik kAdu athirnthida santha sem thamizhp pANar konjida: Conches, elegant percussion instruments, trumpets, hemispherical drums that accompany royal processions and large drums were all beaten together making a thundering noise to the accompaniment of music nicely played on string instruments by musicians capable of singing songs in chaste Tamil language; aNda kOsam santhiran pathaththOr vaNangida inthiran kulaththAr pozhinthida thanthiram puyaththAr pukazhnthida: people from all the worlds including those from the lunar zones assembled to prostrate (at Your feet); the celestials showered a rain of flowers; the GandharvAs (Divine Musicians) praised You musically holding the string instrument YAzh in their hand; vantha cUrai sem kaiyum siraththOdu pangu ezha anthakan puraththu ERa vanjakar sem saram thoduththE nadam puri kanthavELE: the reddish hands and the head of the confronting demon SUran were severed, and he was sent to the world of Yaman (God of Death) by the arrows wielded by You; after accomplishing this deed, You danced on the battlefield, Oh Lord KandhA! thingaL oN mukak kAmar koNda van kongai men kuRap pAvaiyum kodu sem pon ampalaththE siRanthu aruL thampirAnE.: She has a moon-like face that radiates beauty and a soft chest with robust bosom; She is VaLLi, the damsel of the KuRavAs; along with her, You are seated gracefully in this famous shrine, Chidhambaram, Oh Great One! |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. PLEASE do not ask me for songs about other deities or for BOOKS - This is NOT a bookshop - sorry. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. © Copyright Kaumaram dot com - 2001-2040 COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED. Please contact me (the webmaster), if you wish to place a link in your website. email: kaumaram@gmail.com Disclaimer: Although necessary efforts have been taken by me (the webmaster), to keep the items in www.kaumaram.com safe from viruses etc., I am NOT responsible for any damage caused by use of and/or downloading of any item from this website or from linked external sites. Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items from the internet for maximum safety and security. மேலே top |