பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சிதம்பரம்) திருப்புகழ் உரை 369 பூங்கொத்துக்கள் (அண் அம் :)ழல்) சேர்ந்துள்ள அழகிய கூந்தலை உடையவராய், சுகந்தரக்கூடிய மஞ்சளைப் பூசிக்கொண்டு, சண்பக மலர்சூடி, வஞ்சியின் இளமை வாய்ந்த கொடிபோல விளங்கிக் கொஞ்சுகின்ற பச்சைக்கிளி போலவும், அன்பு வாய்ந்த குயில்போலவும் மயில்போலவும். வந்து, பஞ்சு மெத்தையில் இன்பத்தையும் கொடுக்கும் கொங்கைகளும், புயங்களும் வடுப்பட, அழகிய நல்ல ஆடையும் கலைந்து, (அவம்) கேடும், காம இச்சையும் மேற்படுவதாய் W சபதமொழிகளை நிரம்பச்சொல்லி, | கண்கள், காதுகள் இவைகள் கொடுத்திருந்த சுகங்கள் மாறுபட்டு குருடாய், செவிடாய்) முன்பு செய்திருந்த சூள்களுடன் (சபத் மொழிகள் நிறைவேறாமல்) (பாயிற்) படுக்கையாய்க் கிடந்து உடலம் அழிவேனோ! (இறந்து படுவேனோ) معتمدا தந்த னந்தன தந்த னந்தன.திந்தி மிந்திமி என்று சங்கும், வெண்கல (ஊது) கொம்பும், (துந்துமி) பேரிகை முதலான பல முரசவாத்தியங்கள், —" சஞ்சலஞ் சல என்று கொஞ்சும் கிண்கிணியுடன் பொருந்தும் டுண்டுடு டுண்டு என்னும் ஒலியுடன் பல (சந்திர அம்பறை) (சந்திரன் போல) வட்ட வடிவுள்ள அழகிய பறைகளின் (ஒலி) (பொங்கு) பொங்க - மிக்கு எழ (வஞ்சகர்) அசுரர்கள் போர்க்களத்திலே. மடிய வெண்ணிறக் கழுகுகளும் ஓங்கி உயர்ந்து எழுகின்ற செம்மைநிறப் பகூதியாகிய கருடனும் பருந்துகளும் (ரத்தத்தால்) செந்நிறம் கொண்ட போர்க்களத்தில் பக்கங்கள் எங்கிலும் நெருங்கி அடையச் செலுத்தின வேலனே! சந்திரனும் இந்திரனும் (உம்பர்) தேவர்களும் (அந்தரர்) மற்றும் விண்ணில் உறைவோர்களும் புகழ்ந்து உருகும் இறைவனது சபையாகிய செவ்விய பொன்னம்பலத்தை அழகாகக் கொண்ட பெருமாளே! அன்பர்கள் பெருமாளே! (உடல் அழிவேனோ)