திருப்புகழ் 445 வீறு புழுகான பனி  (திருவருணை)
Thiruppugazh 445 veeRupuzhugAnapani  (thiruvaruNai)
Thiruppugazh - 445 veeRupuzhugAnapani - thiruvaruNaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தானதன தானதன தானதன தானதன
     தானதன தானதன ...... தனதான

......... பாடல் .........

வீறுபுழு கானபனி நீர்கள்மல தோயல்விடு
     மேருகிரி யானகொடு ...... தனபார

மீதுபுர ளாபரண சோதிவித மானநகை
     மேகமனு காடுகட ...... லிருள்மேவி

நாறுமலர் வாசமயிர் நூலிடைய தேதுவள
     நாணமழி வார்களுட ...... னுறவாடி

நாடியது வேகதியெ னாசுழலு மோடனைநின்
     ஞானசிவ மானபத ...... மருள்வாயே

கூறுமடி யார்கள்வினை நீறுபட வேஅரிய
     கோலமயி லானபத ...... மருள்வோனே

கூடஅர னோடுநட மாடரிய காளியருள்
     கூருசிவ காமியுமை ...... யருள்பாலா

ஆறுமுக மானநதி பாலகுற மாதுதன
     மாரவிளை யாடிமண ...... மருள்வோனே

ஆதிரகு ராமஜய மாலின்மரு காபெரிய
     ஆதியரு ணாபுரியில் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

வீறு புழுகான பனிநீர்கள் மல(ம்) தோயல் விடு ... (மணம்
வீசும்) புனுகு, பன்னீர் ஆகியவைகளை மலம் தோய்ந்துள்ள உடலின்
மீது விட்டுப் பூசி,

மேரு கிரியான கொடு தன பார மீது புரள ஆபரண சோதி
விதமான நகை
... மேரு மலை போன்ற, தீமைக்கு இடமான, மார்பகப்
பாரங்களின் மேல் புரள்கின்ற ஆபரணங்களின் ஒளியும், பல விதமான
சிரிப்பும் கொண்டு,

மேகம் அனு காடு கடல் இருள் மேவி நாறு மலர் வாச மயிர்
நூல் இடையதே துவள
... மேகம், பின்னும் காடு, கடல்
ஆகியவைகளின் கறுப்பு நிறத்துடன் மணம் வீசும் மலர்களின்
வாசனையைக் கொண்ட கூந்தலை விரித்து, நூல் போல் நுண்ணிய
இடையை துவளச் செய்து,

நாணம் அழிவார்கள் உடன் உறவாடி நாடி அதுவே கதி எனா
சுழலு(ம்) மோடனை
... நாணம் என்பதே இல்லாது அழியும்
விலைமாதர்களுடன் நட்பு பூண்டு, விரும்பி அந்த வேசையருடன்
ஆடுவதே கதி என்று சுழல்கின்ற மூடனாகிய எனக்கு

நின் ஞான சிவமான பதம் அருள்வாயே ... உனது சிவஞான
மயமான திருவடியைத் தந்து அருள்வாயாக.

கூறும் அடியார்கள் வினை நீறுபடவே அரிய கோல மயிலான
பதம் அருள்வாயே
... உன்னைப் போற்றும் அடியார்களின் வினை
தூளாகிப் போக, அருமையான அழகிய மயிலான பதவியை அருள்பவனே,

கூட அரனோடே நடமாடு அரிய காளி அருள் கூரும்
சிவகாமி உமை அருள் பாலா
... சிவபெருமானோடு சேர்ந்து நடனம்
ஆடும் அரிய காளியும் திருவருள் மிக்க சிவகாமியும் ஆன உமாதேவி
அருளிய குழந்தையே,

ஆறு முகமான நதி பால குற மாது தனம் ஆர விளையாடி
மணம் அருள்வோனே
... ஆறு முகங்கள் கொண்ட கங்கா நதியின்
குழந்தையே, குறப் பெண் வள்ளியின் நெஞ்சம் குளிர விளையாடி
அவளை மணம் புரிந்தவனே,

ஆதி ரகுராம ஜய மாலின் மருகா பெரிய ஆதி அருணா
புரியில் பெருமாளே.
... ஆதி ரகுராமனும் வெற்றி பொருந்தியவனுமான
திருமாலின் மருகனே, பெரிய திருவண்ணாமலையில் வீற்றிருக்கும்
பெருமாளே.


'கூறுமடியார்கள் வினை', 'ஆறுமுகமான', 'ஆதியருணாபுரியில்', என்ற
சொற்றொடர்கள் 'ஏறுமயில் ஏறி' என்னும் பாடலை ஒத்திருப்பதைக் காணலாம்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.349  pg 2.350 
 WIKI_urai Song number: 586 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 445 - veeRu puzhugAna pani (thiruvaNNAmalai)

veeRupuzhu kAnapani neerkaLmala thOyalvidu
     mErukiri yAnakodu ...... thanapAra

meethupura LAparaNa sOthivitha mAnanakai
     mEkamanu kAdukada ...... liruLmEvi

nARumalar vAsamayir nUlidaiya thEthuvaLa
     nANamazhi vArkaLuda ...... nuRavAdi

nAdiyathu vEkathiye nAsuzhalu mOdanainin
     njAnasiva mAnapatha ...... maruLvAyE

kURumadi yArkaLvinai neeRupada vEariya
     kOlamayi lAnapatha ...... maruLvOnE

kUdAra nOdunada mAdariya kALiyaruL
     kUrusiva kAmiyumai ...... yaruLbAlA

ARumuka mAnanathi pAlakuRa mAthuthana
     mAraviLai yAdimaNa ...... maruLvOnE

Athiraku rAmajaya mAlinmaru kAperiya
     Athiyaru NApuriyil ...... perumALE.

......... Meaning .........

veeRu puzhukAna panineerkaL mala(m) thOyal vidu: Lavishly smearing fragrant musk and rose water on their body that is filled with faeces,

mEru kiriyAna kodu thana pAra meethu puraLa AparaNa sOthi vithamAna nakai: wearing dazzling jewellery on their mountain-like bosom, the source of all evil, smiling in many a way,

mEkam anu kAdu kadal iruL mEvi nARu malar vAsa mayir nUl idaiyathE thuvaLa: letting loose their hair that is dark like the cloud, the forest and the sea, bedecked with fragrant flowers, and slackening off their slender thread-like waist,

nANam azhivArkaL udan uRavAdi nAdi athuvE kathi enA suzhalu(m) mOdanai: they behave shamelessly; I have maintained intimate relationship with these whores, roaming about hankering after them as if they are my only refuge; I have been an utter fool,

nin njAna sivamAna patham aruLvAyE: nevertheless, kindly grant me Your hallowed feet, representing the Knowledge of Lord SivA!

kURum adiyArkaL vinai neeRupadavE ariya kOla mayilAna patham aruLvAyE: Shattering the past deeds of the devotees who speak of Your glory, You grant them graciously the blissful status of Your unique and beautiful peacock!

kUda aranOdE nadamAdu ariya kALi aruL kUrum sivakAmi umai aruL pAlA: She is the unique Goddess KALi who dances along with Lord SivA; She is SivagAmi, full of graciousness; and You are the son of that UmAdEvi!

ARu mukamAna nathi pAla kuRa mAthu thanam Ara viLaiyAdi maNam aruLvOnE: You are the child of the six-faced river, Gangai! You played with VaLLi, the damsel of the KuRavAs, to her heart's content and took her as Your consort!

Athi rakurAma jaya mAlin marukA periya Athi aruNA puriyil perumALE.: You are the nephew of the primordial and victorious Lord VishNu, who came as RagurAman! You are seated in the great town, ThiruvaNNAmalai, Oh Great One!


The phrases 'kURumadiyArkaL vinai', 'ARumukamAna' and 'AthiyaruNApuriyil' remind one of the famous song 'ERumayil ERi'.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 445 veeRu puzhugAna pani - thiruvaruNai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]