திருப்புகழ் 446 சரக்கு ஏறி இத்த  (திருக்காளத்தி)
Thiruppugazh 446 sarakkuERiiththa  (thirukkALaththi)
Thiruppugazh - 446 sarakkuERiiththa - thirukkALaththiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனத்தா தத்தத் தனனா தந்தத்
     தனத்தா தத்தத் தனனா தந்தத்
          தனத்தா தத்தத் தனனா தந்தத் ...... தனதான

......... பாடல் .........

சரக்கே றித்தப் பதிவாழ் தொந்தப்
     பரிக்கா யத்திற் பரிவோ டைந்துச்
          சதிக்கா ரர்ப்புக் குலைமே விந்தச் ...... செயல்மேவிச்

சலித்தே மெத்தச் சமுசா ரம்பொற்
     சுகித்தே சுற்றத் தவரோ டின்பத்
          தழைத்தே மெச்சத் தயவோ டிந்தக் ...... குடிபேணிக்

குரக்கோ ணத்திற் கழுநா யுண்பக்
     குழிக்கே வைத்துச் சவமாய் நந்திக்
          குடிற்கே நத்திப் பழுதாய் மங்கப் ...... படுவேனைக்

குறித்தே முத்திக் குமறா வின்பத்
     தடத்தே பற்றிச் சகமா யம்பொய்க்
          குலக்கால் வற்றச் சிவஞா னம்பொற் ...... கழல்தாராய்

புரக்கா டற்றுப் பொடியாய் மங்கக்
     கழைச்சா பத்தைச் சடலா னுங்கப்
          புகைத்தீ பற்றப் புகலோ ரன்புற் ...... றருள்வோனே

புடைத்தே யெட்டுத் திசையோ ரஞ்சத்
     தனிக்கோ லத்துப் புகுசூர் மங்கப்
          புகழ்ப்போர் சத்திக் கிரையா நந்தத் ...... தருள்வோனே

திருக்கா னத்திற் பரிவோ டந்தக்
     குறக்கோ லத்துச் செயலா ளஞ்சத்
          திகழ்ச்சீ ரத்திக் கழல்வா வென்பப் ...... புணர்வோனே

சிவப்பே றுக்குக் கடையேன் வந்துட்
     புகச்சீர் வைத்துக் கொளுஞா னம்பொற்
          றிருக்கா ளத்திப் பதிவாழ் கந்தப் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

சரக்கு ஏறி இத்தப் பதி வாழ் தொந்தப் பரிக் காயத்தில் ...
பொருள் மிகுந்த இந்தப் பூமியில் வாழ்கின்ற சம்பந்தத்தை வகிக்கின்ற
இவ்வுடலில்

பரிவோடு ஐந்து சதி காரர் புக்கு ... அன்பு பூண்டவர் போன்று
உள்ள ஐந்து (பொறிகளாகிய) மோசக்காரர்கள் புகுந்து,

உலை மேவு இந்தச் செயல் மேவி ... அழிவுக்குக் காரணமான
இத்தகைய தொழில்களை விரும்பி மேற்கொண்டு,

சலித்தே மெத்தச் சமுசாரம் பொன் சுகித்தே ... சஞ்சலப்பட்டு,
மிகவும் குடும்பம், செல்வம் ஆகியவற்றைச் சுகத்துடன் அனுபவித்து,

சுற்றத்தவரோடு இன்ப(ம்) தழைத்தே மெச்ச ... சுற்றத்தாருடன்
மகிழ்ச்சி மிகுந்து புகழும்படி

தயவோடு இந்தக் குடி பேணி ... அன்புடனே இந்த வாழ்விடத்தை
விரும்பி, (இறுதியில்)

குரக்கோணத்தில் கழு நாய் உண்ப ... பிளவுபட்ட கூர்மையான
மூக்கை உடைய கழுகும், நாயும் உண்ணும்படி

குழிக்கே வைத்துச் சவமாய் நந்து ... குழியில் வைத்துப் பிணமாய்க்
கெடுகின்ற

இக் குடிற்கே நத்திப் பழுதாய் மங்கப் படுவேனை ... இந்தக்
குடிசையாகிய உடலையே விரும்பி, பயனற்று அழிதல் உறுகின்ற என்னை,

குறித்தே முத்திக்கு ம(மா)றா இன்பத் தடத்தே பற்றி ... குறிக்
கொண்டு, முக்திக்கு மாறுதல் இல்லாத இன்ப வழியைக் கைப்பற்றி,

சக மாயம் பொய்க் குலம் கால் வற்ற ... உலக மாயை, பொய், குலம்,
குடி என்கின்ற பற்றுக் கோடுகள் வற்றிப்போக,

சிவ ஞானம் பொன் கழல் தாராய் ... சிவ ஞானமாகிய உனது
அழகிய திருவடியைத் தந்து அருளுக.

புரக் காடு அற்றுப் பொடியாய் மங்க ... திரி புரம் என்னும் காடு
அழிந்து பொடியாய் மறையவும்,

கழைச் சாபத்து ஐச் சடலான் உங்க ... கரும்பு வில்லை ஏந்தியவனும்
அழகிய உடலை உடையவனுமான மன்மதன் அழியவும்,

புகைத் தீ பற்ற அப்புகலோர் அன்புற்று அருள்வோனே ...
புகை கொண்ட தீயை (நெற்றிக் கண்ணால்) பற்றச் செய்த அந்த
வெற்றியாளராகிய சிவபிரானால் அன்பு கொண்டு அருளப்பட்டவனே,

புடைத்தே எட்டுத் திசையோர் அஞ்ச ... அடித்து வீழ்த்தியே
எட்டுத் திக்குகளிலும் உள்ளோர்களும் பயப்படும்படி,

தனிக்கோலத்துப் புகு சூர் மங்க ... தனிப்பட்ட உருவத்துடன்
புகுந்த சூரன் அழியும்படி அவனை

புகழ்ப் போர் சத்திக்கு இரையா ஆநந்தத்து அருள்வோனே ...
போரில் புகழ் கொண்ட சக்தி வேலாயுதத்துக்கு உணவாக மகிழ்ச்சியுடன்
அருளியவனே,

திருக் கானத்தில் பரிவோடு ... அழகிய வள்ளி மலைக் காட்டில்
நீஅன்பு பூண்டு செல்ல,

அந்தக் குறக் கோலத்துச் செயலாள் அஞ்ச ... அந்தக்
குறக்கோலம் பூண்டிருந்த இலக்குமி போன்ற வள்ளி
(யானையைக் கண்டு) பயப்பட்டதும்

திகழ்ச்சீர் அத்திக்கு அழல் வா என்பப் புணர்வோனே ...
விளங்கும் சீர் பெற்ற (இந்த) யானைக்கு பயந்து அழ வேண்டாம்,
வா என்று சொல்லி, அவளை அணைந்தவனே,

சிவப் பேறுக்குக் கடையேன் வந்து உள் புக ... சிவகதி அடையும்
பேற்றுக்கு, கடையவனாகிய நான் வந்து உட்சேருவதற்கு

சீர் வைத்துக் கொ(ள்)ளு ... வேண்டிய சிறப்பினைத் தந்து என்னை
ஏற்றுக் கொள்வாயாக.

ஞானம் பொன் திருக் காளத்திப் பதி வாழ் கந்தப்
பெருமாளே.
... ஞானமும் பொலிவும் அழகும் நிறைந்த திருக் காளத்தி*
என்னும் தலத்தில் வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே.


* திருக்காளத்தி என்னும் 'காளஹஸ்தி' ஆந்திர மாநிலத்தில் சித்தூர் மாவட்டத்தில்
ரேணுகுண்டாவுக்கு வடகிழக்கில் 15 மைலில் உள்ளது. பஞ்சபூதத் தலங்களுள் ஒன்று.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.351  pg 2.352  pg 2.353  pg 2.354 
 WIKI_urai Song number: 587 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 446 - sarakku ERi iththa (thirukkALaththi)

sarak kERiththap padhivAzh thondhap
     parik kAyththiR parivOd aindhu
          sadhikkArarp pukkulai mEvindha ...... seyal mEvi

saliththE meththa samusAram poR
     sukiththE sutrath thavarOd inbath
          thazhaiththE mechchath thayavOd indhak ...... kudipENik

kurak kONaththiR kazhu nAy uNbak
     kuzhikkE vaiththuch savamAy nandhik
          kudiRkE naththip pazhudhAy mangap ...... paduvEnaik

kuRiththE muththik kumaRA inbath
     thadaththE patrich jagamAyam poyk
          kulakkAl vatra sivanyAnam poR ...... kazhal thArAy

pura kAdatrup podiyAy mangak
     kazhai chApaththai sadalA nungap
          pugai thee patrap pugalOr anbutr ...... aruLvOnE

pudaiththE ettuth dhisaiyOr anjath
     thani kOlaththup pugusUr mangap
          pugazhp pOr saththik irai Anadhath ...... tharuLvOnE

thiru kAnaththiR parivOd andhak
     kuRa kOlaththuch seyalAL anjath
          thigazh seeraththik kazhalvA enbap ...... puNarvOnE

sivap pERukkuk kadaiyEn vandhut
     pugachcheer vaiththuk koLu nyAnam po
          trirukkaLaththip padhi vAzh kandhap ...... perumALE.

......... Meaning .........

sarak kERiththap padhivAzh thondhap parik kAyththil: This body enjoys its association with rich life in this resourceful world.

parivOd aindhu sadhikkArarp pukku: Feigning great friendship, five treacherous people (namely five senses) have entered this body.

ulai mEvindha seyal mEvi: They have resorted to this destructive path

saliththE meththa samusAram poR sukiththE: of making me miserable; making me enjoy the worldly life with family, wealth

sutrath thavarOd inbath thazhaiththE mechcha: and relatives who please me by heaping their praises.

thayavOd indhak kudipENik: With tender love I cherish this little cottage of my body; (ultimately),

kurak kONaththiR kazhu nAy uNbak kuzhikkE vaiththu: this body is laid in a ditch to be preyed upon by eagles with sharp and split beaks and dogs.

savamAy nandhik kudiRkE naththip pazhudhAy mangap paduvEnai: This body decays into a corpse; this cottage of a body, always doted on by me, is destroyed without any use.

kuRiththE muththik kumaRA inbath thadaththE patri: Will You make me Your target and direct me towards an undeviating path of bliss,

jagamAyam poyk kulakkAl vatra: making the worldly delusions, deceptions, caste and creed disappear,

sivanyAnam poR kazhal thArAy: and granting me Your hallowed feet, namely, the True Knowledge of SivA?

pura kAdatrup podiyAy manga: The forests of Thiripuram were shattered to pieces;

kazhai chApaththai sadalAn unga: Manmathan who held the bow of sugarcane and had a handsome body was reduced to ashes;

pugai thee patrap pugalOr anbutr aruLvOnE: when the powerful Lord SivA burnt them (with His third eye) creating fire and smoke; that SivA delivered You to us graciously!

pudaiththE ettuth dhisaiyOr anja: He terrified and thrashed everyone in all the eight directions

thanik kOlaththup pugusUr manga: and took many unique disguises; that demon SUran was destroyed

pugazhp pOr saththik irai Anadhath tharuLvOnE: and fell prey to Your famous spear in the battle making You happy, Oh Lord!

thiruk kAnaththiR parivOdu: When You entered the millet field, full of love,

andhak kuRa kOlaththuch seyalAL anja: and the damsel of the KuRavAs, VaLLi, pretty as Lakshmi, was scared (at the sight of the elephant),

thigazh seeraththik kazhalvA enbap puNarvOnE: You reassured her saying "Do not be scared by this famous elephant; do not cry, and come to me" and then, You embraced her.

sivap pERukkuk kadaiyEn vandhut puga: In order that I, the basest person, be eligible to enter the domain of SivA

cheer vaiththuk koLu: kindly accept me granting the requisite greatness!

nyAnam po trirukkaLaththip padhi vAzh kandhap perumALE.: You have Your abode at ThirukkALathi*, famous for its wisdom and beauty, Oh Lord KanthA, Oh Great One!


* ThirukkALaththi is known as KaLahasthi situated 15 miles northeast of Renigunta in Chittoor District of Andhra Pradesh. It is one of the Pancha BhUtha centres.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 446 sarakku ERi iththa - thirukkALaththi

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]