திருப்புகழ் 433 பாலாய் நூலாய்  (திருவருணை)
Thiruppugazh 433 pAlAinUlAi  (thiruvaruNai)
Thiruppugazh - 433 pAlAinUlAi - thiruvaruNaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தானா தானா தானா தானா
     தானா தானத் ...... தனதான

......... பாடல் .........

பாலாய் நூலாய் தேனாய் நீளாய்
     பாகாய் வாய்சொற் ...... கொடியார்தாம்

பாடா வாடா வேடா வாலே
     பாடா யீடற் ...... றிடைபீறுந்

தோலா லேகா லாலே யூனா
     லேசூழ் பாசக் ...... குடில்மாசு

தோயா மாயா வோயா நோயால்
     சோர்வாய் மாளக் ...... கடவேனோ

ஞாலா மேலா வேதா போதா
     நாதா சோதிக் ...... கிரியோனே

ஞானா சாரா வானாள் கோனே
     நானா வேதப் ...... பொருளோனே

வேலா பாலா சீலா காரா
     வேளே வேடக் ...... கொடிகோவே

வீரா தாரா ஆறா தாரா
     வீரா வீரப் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

பாலாய் நூலாய் தேனாய் நீளாய் பாகாய் ... பால் போன்றதும்,
(இனிய தமிழ்) நூல் போன்றதும், தேன் போன்றதும், நீண்டு கம்பிப்
பதமாய் வருகின்ற காய்ச்சின வெல்லம் போன்றதுமாய் இனிக்கும்

வாய்ச் சொல் கொடியார் தாம் ... வாய்ச் சொல்லை உடைய கொடி
போன்ற விலைமாதர்கள்

பாடா வாடா வேள் தாவாலே பாடாய் ஈடு அற்று ... பாடியும்,
ஆடியும் விருப்பத்தைத் தெரிவிக்கும் வலிமையினாலே காமநோய்
உற்றவனாய் என் தகுதி தொலைந்துபோய் நின்று,

இடை பீறும் தோலாலே காலாலே ஊனாலே சூழ் பாசக்
குடில்
... வாழ்க்கையின் இடையிலேயே கிழிபட்டுப் போகும்
தோலாலும், காற்றினாலும், மாமிசத்தாலும் சூழப்பட்டுள்ளதும்,
பற்றுகளுக்கு இடமானதுமான குடிசையாகிய இந்த உடல்

மாசு தோயா மாயா ஓயா நோயால் சோர்வாய் மாளக்
கடவேனோ
... குற்றங்கள் தோய்ந்தும், ஒளி மழுங்கியும், முடிவில்லாத
நோயினால் தளர்ச்சி உற்றும் இறந்துபடக் கடவேனோ?

ஞாலா மேலா வேதா போதா ... பூமியில் மேம்பட்டு நிற்பவனே,
பிரமனுக்கு போதித்தவனே,

நாதா சோதிக் கிரியோனே ... நாதனே, ஜோதி மலையாகிய
அருணாசலப் பிரானே,

ஞான ஆசார வான் ஆள் கோனே ... ஞான மார்க்கத்தில்
முதல்வனே, வானுலகை ஆள்கின்ற தலைவனே,

நானா வேதப் பொருளோனே ... பல வகையான வேதங்களுக்கும்
உட் பொருளானவனே,

வேலா பாலா சீல ஆகாரா ... வேலனே, பரமசிவ பாலனே,
பரிசுத்த வடிவனே,

வேளே வேடக் கொடி கோவே ... செவ்வேளே, கொடி போன்ற
வேடப் பெண் வள்ளியின் மணவாளனே,

வீர ஆதாரா ஆறு ஆதாரா ... வீரத்துக்கு ஆதாரமானவனே,
மூலாதாரம் முதலிய ஆறு ஆதாரங்களுக்கும் உரியவனே,

வீரா வீரப் பெருமாளே. ... வீரனே, வீரமுள்ள பெருமாளே.


ஆதாரங்களின் பெயர்களும், உடலில் இருக்கும் இடம், உரிய ஐம்பூதங்கள், அனுட்டிக்கும்போது மலர் வடிவங்களின் அமைப்பு, அக்ஷரக் குறிப்பு ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆதாரங்களுக்கு உரிய தலங்கள், கடவுளர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
ஆதாரம்

மூலாதாரம்


சுவாதிஷ்டானம்மணிபூரகம்அநாகதம்விசுத்திஆக்ஞா


பிந்து சக்கரம்
(துவாதசாந்தம்,
ஸஹஸ்ராரம்,
பிரமரந்திரம்)
இடம்

குதம்


கொப்பூழ்மேல்வயிறுஇருதயம்கண்டம்புருவத்தின் நடு


கபாலத்தின்
மேலே


பூதம்

மண்


அக்கினிநீர்காற்றுஆகாயம்மனம்


வடிவம்

4 இதழ் கமலம்
முக்கோணம்

6 இதழ் கமலம்
லிங்கபீடம்
நாற் சதுரம்

10 இதழ் கமலம்
பெட்டிப்பாம்பு
நடு வட்டம்

12 இதழ் கமலம்
முக்கோணம்
கமல வட்டம்

16 இதழ் கமலம்
ஆறு கோணம்
நடு வட்டம்

3 இதழ் கமலம்


1008
இதழ் கமலம்


அக்ஷரம்

ஓம்


ந(கரம்)ம(கரம்)சி(கரம்)வ(கரம்)ய(கரம்)


தலம்

திருவாரூர்


திருவானைக்காதிரு(வ)
அண்ணாமலை


சிதம்பரம்திருக்காளத்திகாசி
(வாரணாசி)

திருக்கயிலை
கடவுள்

விநாயகர்


பிரமன்திருமால்ருத்திரன்மகேசுரன்சதாசிவன்


சிவ . சக்தி
ஐக்கியம்  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.317  pg 2.318  pg 2.319  pg 2.320 
 WIKI_urai Song number: 574 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
M.S. Balashravanlakshmi - Puducherry
M.S. பாலஷ்ரவண்லக்ஷ்மி
புதுச்சேரி

M.S. Balashravanlakshmi
Puducherry
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 433 - pAlAy nUlAy (thiruvaNNAmalai)

pAlAy nUlAy thEnAy neeLAy
     pAkAy vAycoR ...... kodiyArthAm

pAdA vAdA vEdA vAlE
     pAdA yeedat ...... RidaipeeRum

thOlA lEkA lAlE yUnA
     lEsUzh pAsak ...... kudilmAsu

thOyA mAyA vOyA nOyAl
     sOrvAy mALak ...... kadavEnO

njAlA mElA vEthA pOthA
     nAthA sOthik ...... kiriyOnE

njAnA sArA vAnAL kOnE
     nAnA vEthap ...... poruLOnE

vElA bAlA seelA kArA
     vELE vEdak ...... kodikOvE

veerA thArA ARA thArA
     veerA veerap ...... perumALE.

......... Meaning .........

pAlAy nUlAy thEnAy neeLAy pAkAy: It is like milk; it is like the sweet literature in Tamil; it is like honey; It is like the molten jaggery drawn in the shape of a wire; so sweet is the

vAyc col kodiyAr thAm: speech of the whores, who are slender like creepers;

pAdA vAdA vEL thAvAlE pAdAy eedu atRu: they sing and dance to express their desire so forcefully that I am stung by passion and have lost my prestige.

idai peeRum thOlAlE kAlAlE UnAlE sUzh pAsak kudil: This cottage of my body, a receptacle for all attachments, consists of skin that tears in the middle of my life, and is filled up with air and flesh;

mAsu thOyA mAyA OyA nOyAl sOrvAy mALak kadavEnO: am I destined to suffer blemishes, lose my lustre, deteriorate in health due to perennial ailment and eventually die miserably?

njAlA mElA vEthA pOthA: You are the most exceptional one on the earth! You are the Master of BrahmA!

nAthA sOthik kiriyOnE: Oh Leader, You are the Lord of the glowing mountain, ThiruvaNNAmalai!

njAna AsAra vAn AL kOnE: You are the foremost one, pursued by spiritual seekers! You rule the entire celestial world!

nAnA vEthap poruLOnE: You are the core principle of all the diverse VEdAs!

vElA bAlA seela AkArA: Oh Lord with the spear! You are the child of Lord SivA! You are of the purest form!

vELE vEdak kodi kOvE: You are the reddish God of Love! You are the Consort of VaLLi, the creeper-like damsel of the hunters!

veera AthArA ARu AthArA: You are the source of valour! You are the deity pervading all the six chakrAs* (beginning with 'mUlAthAram').

veerA veerap perumALE.: Oh brave one! You are the most courageous, Oh Great One!


The names of the chakrA centres, the deities, the elements, the zones of the body where they are located, the shape of the chakrAs, the description of the flowers in the chakrAs, the letters of the ManthrA governing them and the temple-towns representing them are given in the following chart:

ChakrA

mUlAthAram


swAthishtAnammaNipUragamanAgathamvisudhdhiAgnyA


Bindu chakkaram
(DhwAdhasAntham,
SahasrAram,
Brahma-ranthiram)

Body Zone

Genitals


Belly-buttonUpper bellyHeartThroatBetween the
eyebrows

Over
the skullElement

Earth


FireWaterAirSkyMind


Shape

4-petal lotus
Triangle

6-petal lotus
Lingam
Square

10-petal lotus
cobra in box
central circle

12-petal lotus
Triangle
lotus circle

16-petal lotus
Hexagon
central circle

3-petal lotus


1008-petal
lotus


Letter

Om


namasivaya


Temple

ThiruvArUr


ThiruvAnaikkAThiru
aNNAmalai


ChidhambaramThirukkALaththiVaranAsi
(kAsi)

Mt. KailAshDeity

VinAyagar


BrahmAVishnuRUdhranMahEswaranSathAsivan


Siva-Sakthi
Union


தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 433 pAlAi nUlAi - thiruvaruNai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]