பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருணை! திருப்புகழ் உரை 315 தோலாலும், காற்றினாலும், மாமிசத்தாலும், சூழப்பட்டுள்ளதும், பற்றுக்களுக்கு இடமானதுமான குடில் குடிசை, குற்றங்கள் D தோய்ந்தும், ஒளிமழுங்கியும், ஒய்விலாத (எப்போதும் உள்ள) நோயினால் தளர்ச்சி உற்றும் இறந்துபடக் கடவேனோ! o பூமியில் மேம்பட்டு நிற்பவனே! (அல்லது "உயர்ந்தோர்க் குயர்ந்தோனே) பிரமனுக்கும் (உண்மை) போதித்தவனே! நாதனே! சோதிமலையாம் அருணகிரிப் பிரானே! - ஞான ஆசார முதல்வனே! வானுலகை ஆள்கின்ற தலைவனே! பலவகைய வேதங்களுக்கும் உட்பொருளானவனே! வேலனே! குழந்தையே! பரிசுத்த வடிவனே! (செவ்) வேளே! வேடப்பென் (வள்ளியின்) நாயகனே! வீரத்துக்கு ஆதாரம் ஆனவனே! (மூலாதாரம் ஆதிய) ஆறு ஆதாரங்களுக்கும் உரியவனே வீரனே! வீரமுள்ள பெருமாளே! (நோயால் மாளக் கடவேனோ) 575. நெருங்கிச் சேர்தலுற்ற கொங்கைகளை உடைய மாதர்களின் வலையில் அலைபட்டு, அனேக விதிவசப்பட்ட (அல்லது - மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகளைக் கொண்ட) உடல்கள் மாய்ந்து போனவைகளுக்கு (அளவு ஏது) கணக்கு உண்டோ! (கணக்கில்லை என்றபடி); உனது புகழைச் சொல்லும் வேதாகம நூல்களைக் கற்றறிந்து சொல்லும் இனிமேல் எனது உள்ளம்; பொன் உயிர் பொருள் என இம் மூன்றையும் நினைந்து (இம் மூன்றின் மேல் ஆசைகொண்டு - (திரியும்) அடியேனுடைய வருத்தங்கள் ஒழிய

  • பெரியார்கட் கெல்லாம் பெரியாய் நீயே - அப்பர் VI-38-5.