திருப்புகழ் 431 தோதகப் பெரும்  (திருவருணை)
Thiruppugazh 431 thOdhagapperum  (thiruvaruNai)
Thiruppugazh - 431 thOdhagapperum - thiruvaruNaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தான தத்த தந்த தான தத்த தந்த
     தான தத்த தந்த ...... தனதான

......... பாடல் .........

தோத கப்பெ ரும்ப யோத ரத்தி யங்கு
     தோகை யர்க்கு நெஞ்ச ...... மழியாதே

சூலை வெப்ப டர்ந்த வாத பித்த மென்று
     சூழ்பி ணிக்க ணங்க ...... ளணுகாதே

பாத கச்ச மன்தன் மேதி யிற்பு குந்து
     பாசம் விட்டெ றிந்து ...... பிடியாதே

பாவ லற்கி ரங்கி நாவ லர்க்கி சைந்த
     பாடல் மிக்க செஞ்சொல் ...... தரவேணும்

வேத மிக்க விந்து நாத மெய்க்க டம்ப
     வீர பத்ர கந்த ...... முருகோனே

மேரு வைப்பி ளந்து சூர னைக்க டிந்து
     வேலை யிற்றொ ளைந்த ...... கதிர்வேலா

கோதை பொற்கு றிஞ்சி மாது கச்ச ணிந்த
     கோம ளக்கு ரும்பை ...... புணர்வோனே

கோல முற்றி லங்கு சோண வெற்பு யர்ந்த
     கோபு ரத்த மர்ந்த ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

தோதகப் பெரும் பயோதரத்து இயங்கும் தோகையர்க்கு
நெஞ்சம் அழியாதே
... மன நோயைத் தரும் பெரிய மார்பகங்களைக்
கொண்டு நடமாடும் விலைமாதர்கள் பொருட்டு என் மனம் அழிவுறாமல்,

சூலை வெப்பு அடர்ந்த வாதம் பித்தம் என்று சூழ் பிணி
கணங்கள் அணுகாதே
... சூலை என்னும் கொடிய வயிற்று நோய்,
சுரம், மிக்க வாத நோய், பித்த நோய் என்னும் பெயருடன் சூழ்கின்ற
நோய்க் கூட்டங்கள் என்னைப் பீடிக்காமல்,

பாதகச் சமன் தன் மேதியில் புகுந்து பாசம் விட்டு எறிந்து
பிடியாதே
... பாதகனாகிய யமன் தன் எருமைக் கடா வாகனத்தின்
மீது வந்து என்னைப் பாசக் கயிற்றை வீசி என்னுயிரைப் பிடியாமல்,

பாவலற்கு இரங்கி நாவலர்க்கு இசைந்த பாடல் மிக்க செம்
சொல் தர வேணும்
... நக்கீரருக்கு* இரக்கம் காட்டிய தேவனே,
புலவர்கள் பாராட்டும் நல்ல பாடல்களையும், செவ்விய சொற்களையும்
எனக்குத் தந்து அருள வேண்டும்.

வேதம் மிக்க விந்து நாதம் மெய்க் கடம்ப வீரபத்ர கந்த
முருகோனே
... வேதங்களால் பாராட்டப்பட்ட விந்து, நாதம் (லிங்கம்,
சிவசக்திப் பீடம்) எனப்படும் மூலப் பொருளே, கடம்ப மாலை
அணிந்தவனே, வீரனே, அழகனே, கந்தனே, முருகோனே,

மேருவைப் பிளந்து சூரனைக் கடிந்து வேலையில்
தொளைந்த கதிர் வேலா
... மேருவைப் போன்ற கிரெளஞ்சத்தைப்
பிளந்து, சூரனை அழித்து, கடலில் குளித்தெழுந்த ஒளி வீசும்
வேலாயுதனே,

கோதை பொன் குறிஞ்சி மாது கச்சு அணிந்த கோமளக்
குரும்பை புணர்வோனே
... அழகிய குறிஞ்சிநிலப் பெண்ணாகிய
வள்ளியின் கச்சணிந்த இளம் குரும்பை போன்ற மார்பகங்களை
அணைந்தவனே,

கோலம் உற்று இலங்கு சோண வெற்பு உயர்ந்த கோபுரத்து
அமர்ந்த பெருமாளே.
... அழகு நிறைந்து விளங்கும் சோணகிரி
என்னும் திரு அண்ணாமலையில் உயர்ந்த கோபுரத்தின் மீது
வீற்றிருக்கும் பெருமாளே.


* நக்கீரர் சிறையிடப்பட்டு, பூதத்தால் துன்புறுத்தப்பட்டபோது, அவரது
படைப்பாகிய திருமுருகாற்றுப்படையை (சங்க இலக்கியங்களுள் தலையானது)
கேட்டு மகிழ்ந்து அவரை முருகன் சிறை விடுவித்தான்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.315  pg 2.316 
 WIKI_urai Song number: 572 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 431 - thOdhagap perum (thiruvaNNAmalai)

thOtha kappe rumpa yOtha raththi yangu
     thOkai yArkku nenja ...... mazhiyAthE

cUlai veppa darntha vAtha piththa menRu
     sUzhpi Nikka Nanga ...... LaNukAthE

pAtha kaccha manthan mEthi yiRpu kunthu
     pAsam vitte Rinthu ...... pidiyAthE

pAva laRki rangi nAva larkki saintha
     pAdal mikka senchol ...... tharavENum

vEtha mikka vinthu nAtha meykka dampa
     veera pathra kantha ...... murukOnE

mEru vaippi Lanthu cUra naikka dinthu
     vElai yitRo Laintha ...... kathirvElA

kOthai poRku Rinji mAthu kaccha Nintha
     kOma Lakku rumpai ...... puNarvOnE

kOla mutRi langu sONa veRpu yarntha
     kOpu raththa marntha ...... perumALE.

......... Meaning .........

thOthakap perum payOtharaththu iyangum thOkaiyarkku nenjam azhiyAthE: In order that my mind does not decay languishing after whores who torment me with their big bosom,

cUlai veppu adarntha vAtham piththam enRu sUzh piNi kaNangaL aNukAthE: protecting me from the infliction of a host of diseases like ulcer, fever, acute rheumatism, biliousness and so on,

pAthakac chaman than mEthiyil pukunthu pAsam vittu eRinthu pidiyAthE: and saving my life from being snatched by the rope (of attachment) flung by the evil God of Death (Yaman) who mounts the buffalo,

pAvalaRku irangi nAvalarkku isaintha pAdal mikka senchol thara vENum: Oh Lord, who showed compassion to the poet Nakkeerar*, kindly grant me good songs with the choicest words lauded by poets!

vEtham mikka vinthu nAtham meyk kadampa veerapathra kantha murukOnE: You are the 'nAdha bhindu'**, the primordial principle, praised by the scriptures, Oh Lord who wears the garland of kadappa flowers! Oh valorous and Handsome One, KanthA, MurugA!

mEruvaip piLanthu cUranaik kadinthu vElaiyil thoLaintha kathir vElA: You hold the dazzling spear which pierced the mount Krouncha which is equal to Mount MEru, destroyed the demon SUran and later dipped into the ocean, Oh Lord!

kOthai pon kuRinji mAthu kacchu aNintha kOmaLak kurumpai puNarvOnE: You embraced the pretty baby-coconut-like bosom, wearing the blouse, belonging to VaLLi, the damsel of the lovely land (Kurinji) of KuRavAs!

kOlam utRu ilangku sONa veRpu uyarntha kOpuraththu amarntha perumALE.: In the beautiful and grand mountain of ChoNAchalam (thiruvaNNAmalai), You reside in the tall temple tower, Oh Great One!


* When Nakkeerar was imprisoned and attacked by an evil fiend, Lord Murugan saved him in appreciation of his composition, ThirumurugAtRuppadai, the foremost of the Sangam works.


** 'nAdha bhindu' ('vindhu') is explained here:

'nAdha' is the principle of sound. It is also known as 'nAma' or name. From this 'nAdha' or name, came out 'bhindu' or 'rUba' which is the form. These name and form are 'nAma' and 'rUba' or 'nAdha' and 'bhindu', what is known as 'OmkAra praNava', and these are the seed and seat of all matter and force. 'nAdha' is represented by a line or a pillar and the 'bhindu' by a disc or elliptic base. It is this 'nAdha' or vibration that is known as 'lingA', and 'bhindu' is what is known as its 'peetam'. This 'lingam' along with 'peetam' is the principle of name and form, that is beyond any comprehension, and the form that could be comprehended little better came out of the 'bhindu' in the order of evolution. This is what is known as 'Siva-Sakthi aikkiyam' which is 'rUbArUbam' ('rUba - arUbam'), that is with shape or without shape. (reference - Siva Agamam and Saiva SidhdhAndham).

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 431 thOdhagap perum - thiruvaruNai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]