திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 430 தேதென வாச முற்ற (திருவருணை) Thiruppugazh 430 thEdhenavAsamutRa (thiruvaruNai) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தானன தான தத்த தானன தான தத்த தானன தான தத்த ...... தனதான ......... பாடல் ......... தேதென வாச முற்ற கீதவி நோத மெச்சு தேனளி சூழ மொய்த்த ...... மலராலே சீறும ராவெ யிற்றி லூறிய காளம் விட்ட சீதநி லாவெ றிக்கு ...... மனலாலே போதனை நீதி யற்ற வேதனை வாளி தொட்ட போர்மத ராஜ னுக்கு ...... மழியாதே போகமெ லாநி றைத்து மோகவி டாய்மி குத்த பூவையை நீய ணைக்க ...... வரவேணும் மாதினை வேணி வைத்த நாதனு மோது பச்சை மாயனு மாத ரிக்கு ...... மயில்வீரா வானவர் சேனை முற்றும் வாழம ராப திக்குள் வாரண மான தத்தை ...... மணவாளா மேதினி யோர்த ழைக்க வேயரு ணாச லத்து வீதியின் மேவி நிற்கு ...... முருகோனே மேருவை நீறெ ழுப்பி நான்முக னார்ப தத்தில் வேலடை யாள மிட்ட ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... தேது என வாசம் உற்ற கீத விநோத(ம்) மெச்சு தேன் அளி சூழ மொய்த்த மலராலே ... ஒளி உடையதாய், நறுமணம் கொண்டதாய், விநோதமான இசையை விரும்பும் தேனீக்கள் சூழ்ந்து மொய்ப்பதான பூக்களாலும், சீறும் அரா எயிற்றில் ஊறிய காளம் விட்ட சீத நிலா எறிக்கும் அனலாலே ... கோபித்து எழும் பாம்பின் பற்களில் ஊறிய விஷத்தைக் கக்குகின்ற குளிர்ந்த நிலா வீசும் கதிர்களின் நெருப்பாலும், போதனை நீதி அற்ற வேதனை வாளி தொட்ட போர் மத ராஜனுக்கும் அழியாதே ... தாமரைப்பூவில் வீற்றிருக்கும் நீதி* இல்லாத வேத நாயகனான பிரமனின் மீது தனது மலர் அம்புகளை ஏவிய, போரில் வல்ல மன்மத ராஜனாலும் அழிவுறாமல், போகம் எ(ல்)லா நிறைத்து மோக விடாய் மிகுத்த பூவையை நீ அணைக்க வர வேணும் ... பலவித இன்பங்களையும் நிறையத் தந்து, (உன் மீது) காதல் ஆசை மிக்குள்ள இந்தப் பெண்ணை நீ அணைக்க வர வேண்டும். மாதினை வேணி வைத்த நாதனும் ஓது பச்சை மாயனும் ஆதரிக்கும் அயில் வீரா ... கங்காதேவியை சடையில் தரித்த தலைவனான சிவபெருமானும், போற்றப்படுகின்ற மரகதப் பச்சை நிறம் கொண்ட திருமாலும் விரும்புகின்ற வேலாயுத வீரனே, வானவர் சேனை முற்றும் வாழ் அமராபதிக்குள் வாரணமான தத்தை மணவாளா ... தேவர்களுடைய சேனை எல்லாம் சூழ்கின்ற இந்திரனுடைய தலைநகர் அமராவதியில் (ஐராவதம் என்னும்) யானையால் வளர்க்கப்பட்ட கிளி போன்ற தேவயானைக்கு கணவனே, மேதினியோர் தழைக்கவே அருணாசலத்து வீதியின் மேவி நிற்கு(ம்) முருகோனே ... உலகத்தில் உள்ளவர்கள் செழிப்புற வாழ திருவண்ணாமலையின் தெருக்களில் விரும்பி வீற்றிருக்கும் முருகனே, மேருவை நீறு எழுப்பி நான் முகனார் பதத்தில் வேல் அடையாளம் இட்ட பெருமாளே. ... மேரு மலையை பொடியாக்கி, பிரமனுடைய காலில் வேல் கொண்டு விலங்கிட்ட பெருமாளே. |
* நீதியற்ற வேதன் - தான் படைத்த திலோத்தமை மீது காதல் கொண்டு, அவளைப் பார்க்க அந்தத் திசையின் பக்கம் தனக்கு ஒரு முகத்தைப் படைத்துக் கொண்டான். ஆதலால் பிரமன் நீதி அற்றவன் ஆனான். |
இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் முருகனைப் பிரிந்த தலைவிக்காக பாடியது. மலர்கள், மன்மதன், மலர்க் கணைகள், சந்திரன் - இவை தலைவியின் பிரிவுத் துயரைக் கூட்டுவன. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 2.313 pg 2.314 pg 2.315 pg 2.316 WIKI_urai Song number: 571 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
Song 430 - thEdhena vAsa mutRa (thiruvaNNAmalai) thEthena vAsa mutRa keethavi nOtha mecchu thEnaLi cUzha moyththa ...... malarAlE seeRuma rAve yitRi lURiya kALam vitta seethani lAve Rikku ...... manalAlE pOthanai neethi yatRa vEthanai vALi thotta pOrmatha rAja nukku ...... mazhiyAthE pOkame lAni Raiththu mOkavi dAymi kuththa pUvaiyai neeya Naikka ...... varavENum mAthinai vENi vaiththa nAthanu mOthu pacchai mAyanu mAtha rikku ...... mayilveerA vAnavar sEnai mutRum vAzhama rApa thikkuL vAraNa mAna thaththai ...... maNavALA mEthini yOrtha zhaikka vEyaru NAsa laththu veethiyin mEvi niRku ...... murukOnE mEruvai neeRe zhuppi nAnmuka nArpa thaththil vEladai yALa mitta ...... perumALE. ......... Meaning ......... thEthu ena vAsam utRa keetha vinOtha(m) mecchu thEn aLi cUzha moyththa malarAlE: Because of the bright and fragrant flowers around which beetles swarm raising a strange musical hum, seeRum arA eyitRil URiya kALam vitta seetha nilA eRikkum analAlE: because of the fiery rays emitted by the cool moon that spews venom soaked in the fangs of infuriated cobras, pOthanai neethi atRa vEthanai vALi thotta pOr matha rAjanukkum azhiyAthE: and because of the able warrior and God of Love, Manmathan, who shot flowery arrows on Brahma, Lord of the VEdAs, seated on a lotus and who lacked righteousness*, this young lass should not be destroyed; pOkam e(l)lA niRaiththu mOka vidAy mikuththa pUvaiyai nee aNaikka vara vENum: instead, You should offer her plenty of pleasures in a variety of ways and come to embrace this girl who is deeply in love with You. mAthinai vENi vaiththa nAthanum Othu pacchai mAyanum Atharikkum ayil veerA: Oh valorous One and the Holder of the spear, You are immensely liked by Lord SivA who holds the River Ganga on His matted hair and by Lord VishNu with the famous hue of emerald-green! vAnavar sEnai mutRum vAzh amarApathikkuL vAraNamAna thaththai maNavALA: In IndrA's capital town, AmarAvathi, which is surrounded by the armies of the celestials, there lived a parrot-like damsel reared by an elephant called AirAvatham; and You are the consort of that DEvayAnai! mEthiniyOr thazhaikkavE aruNAsalaththu veethiyin mEvi niRku(m) murukOnE: For the prosperity of the people of the world, You are seated with relish in the streets of ThiruvaNNAmalai, Oh MurugA! mEruvai neeRu ezhuppi nAn mukanAr pathaththil vEl adaiyALam itta perumALE.: You shattered the Mount MEru to pieces and chained the ankles of Brahma with Your spear, Oh Great One! |
* Brahma's unrighteousness: Despite the fact that He was the creator of the beautiful maid, ThilOththamai, in the celestial world, Brahma lustfully fitted Himself with an additional face to constantly stare at her; because of this incestuous act, He became unrighteous. |
This song has been written in the Nayaka-Nayaki BhAva portraying the pangs of separation of the heroine from Lord Muruga. The Love God, the flowery arrows and the moon are some of the sources which aggravate the agony of separation from the Lord. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |