திருப்புகழ் 405 உலையிலனல்  (திருவருணை)
Thiruppugazh 405 ulaiyilanal  (thiruvaruNai)
Thiruppugazh - 405 ulaiyilanal - thiruvaruNaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதனன தத்த தனதனன தத்த
     தனதனன தத்த ...... தனதான

......... பாடல் .........

உலையிலன லொத்த வுடலினனல் பற்றி
     யுடுபதியை முட்டி ...... யமுதூற

லுருகிவர விட்ட பரமசுக முற்று
     வுனதடியை நத்தி ...... நினையாமற்

சிலைநுதலி லிட்ட திலதமவிர் பொட்டு
     திகழ்முகவர் முத்து ...... நகையாலே

சிலுகுவலை யிட்ட மயல்கவலை பட்டுத்
     திருடனென வெட்கி ...... யலைவேனோ

கலைகனக வட்ட திமிலைபறை கொட்ட
     கனகமயில் விட்ட ...... கதிர்வேலா

கருதலரின் முட்டிக் கருகிவரு துட்ட
     கதவமண ருற்ற ...... குலகாலா

அலைகடலு டுத்த தலமதனில் வெற்றி
     அருணைவளர் வெற்பி ...... லுறைவோனே

அசுரர்களை வெட்டி யமரர்சிறை விட்டு
     அரசுநிலை யிட்ட ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

உலையில் அனல் ஒத்த உடலின் அனல் பற்றி ... கொல்லனது
உலைக்களத்தில் உள்ள நெருப்புப் போல் உடலில் சிவாக்கினி பற்றி
மேல் எழுந்து,

உடு பதியை முட்டி அமுது ஊறல் உருகி வர விட்ட பரம
சுகம் உற்று
... சந்திர மண்டலத்தை முட்டி அங்கு அமுத ஊறல்
ஊறி உருகி வர விடுகின்ற பரம சுகத்தை அடைந்து,

உனது அடியை நத்தி நினையாமல் ... உனது திருவடியை விரும்பி
நினைக்காமல்,

சிலை நுதலில் இட்ட திலதம் அவிர் பொட்டு திகழ் ... வில்லைப்
போன்ற நெற்றியில் இட்ட சிறந்த பொட்டு விளங்கும் முகத்தை உடைய
மாதர்களின் முத்துப் போன்ற பல் அழகாலே

சிலுகு வலை இட்ட மயல் கவலை பட்டுத் திருடன் என
வெட்கி அலைவேனோ
... துன்ப வலையில் அகப்பட்டு காமப் பித்தால்
கவலை அடைந்து, திருடனைப் போல் வெட்கப்பட்டு அலைவேனோ?

கலை கனக வட்ட திமிலை பறை கொட்ட கனக மயில் விட்ட
கதிர் வேலா
... முறைப்படி வாசிக்கப்படுவதும், பொன் போல
விளங்குவதும் ஆகிய திமிலை என்ற ஒருவகைத் தோல் கருவி பறை போல
முழங்க, பொன்மயிலைச் செலுத்திய, ஒளி வீசும் வேலனே,

கருதலரின் முட்டிக் கருகி வரு துட்ட கத(ம்) அமணர் உற்ற
குலகாலா
... பகைவர்கள் போல எதிர்த்துத் தாக்கி, நிறம் கறுத்து வந்த,
கோபம் மிக்க சமணருடைய குலத்தை (திருஞானசம்பந்தராக வந்து)
அழித்தவனே,

அலை கடல் உடுத்த தலம் அதனில் வெற்றி அருணை வளர்
வெற்பில் உறைவோனே
... அலை வீசும் கடலை ஆடையாகத் தரித்த
பூமியில், (அரி, அயன் இருவருக்கும் அரியவராய் ஒளிப் பிழம்பாக
சிவபெருமான் நின்று) வெற்றி கண்ட தலமாகிய திருவண்ணாமலையில்
வீற்றிருப்பவனே,

அசுரர்களை வெட்டி அமரர் சிறை விட்டு அரசு நிலை இட்ட
பெருமாளே.
... அசுரர்களை வெட்டி அழித்து தேவர்களைச்
சிறையினின்று விடுவித்து, பொன்னுலக ஆட்சியை நிலை பெறச் செய்த
பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.251  pg 2.252 
 WIKI_urai Song number: 547 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 405 - ulaiyilanal (thiruvaNNAmalai)

ulaiyilana loththa vudalinanal patRi
     yudupathiyai mutti ...... yamuthURa

lurukivara vitta paramasuka mutRu
     vunathadiyai naththi ...... ninaiyAmaR

silainuthali litta thilathamavir pottu
     thikazhmukavar muththu ...... nakaiyAlE

silukuvalai yitta mayalkavalai pattuth
     thirudanena vetki ...... yalaivEnO

kalaikanaka vatta thimilaipaRai kotta
     kanakamayil vitta ...... kathirvElA

karuthalarin muttik karukivaru thutta
     kathavamaNa rutRa ...... kulakAlA

alaikadalu duththa thalamathanil vetRi
     aruNaivaLar veRpi ...... luRaivOnE

asurarkaLai vetti yamararsiRai vittu
     arasunilai yitta ...... perumALE.

......... Meaning .........

ulaiyil anal oththa udalin anal patRi: The fire of SivA would leap through the body like the blaze in the blacksmith's furnace,

udu pathiyai mutti amuthu URal uruki vara vitta parama sukam utRu: knocking the lunar zone and immersing in the bliss of nectar flowing there like a fountain;

unathu adiyai naththi ninaiyAmal: rather than contemplating Your hallowed feet (with such a pleasant experience),

silai nuthalil itta thilatham avir pottu thikazh mukavar muththu nakaiyAlE: I have fallen for the beautiful pearl-like teeth of women whose bow-like forehead displays an elegant vemillion dot adorning the face;

siluku valai itta mayal kavalai pattuth thirudan ena vedki alaivEnO: why am I obsessed with such passion, being ensnared in their net of misery; why am I roaming about shamefully like a thief?

kalai kanaka vatta thimilai paRai kotta kanaka mayil vitta kathir vElA: The percussion instrument made of leather, called thimilai that shines like gold, is beaten rhythmically when You mount the peacock and drive it away, Oh Lord with the bright spear!

karuthalarin muttik karuki varu thutta katha(m) amaNar utRa kulakAlA: Those dark-complexioned and angry ChamaNas, who confronted like enemies, were all annihilated by You (coming as ThirugnAna Sambandhar)!

alai kadal uduththa thalam athanil vetRi aruNai vaLar veRpil uRaivOnE: On this earth wearing the wavy ocean as garment, Lord SivA stood here, in ThiruvaNNAmalai, triumphantly (assuming the form of a huge effulgence beyond the comprehension of BrahmA and Vishnu); You have chosen this place as Your abode, Oh Lord!

asurarkaLai vetti amarar siRai vittu arasu nilai itta perumALE.: You destroyed all the demons and freed up the DEvAs, reestablishing their celestial kingdom, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 405 ulaiyilanal - thiruvaruNai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]