பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருணை திருப்புகழ் உரை 247 குறவர் மடமகள் (வள்ளியின்) அமுதம் பொதிந்த கனத்த கொங்கை மலைகள் தாக்கும் ஒரு அழகிய மார்பனே! உக்கி ரமான ஒளி இலைவேலை எழுகடலும் (வற்றிச்) சுருங்கும்படிச் செலுத்த வல்ல பெருமாளே! (அருணை சயிலமிசையினில் வரவேணும்) 547. (கொல்லனது) உலைக்களத்தில் உள்ள நெருப்புப் போல உடலில் சிவாக்கினி பற்றி மேல் எழுந்து சந்திர மண்டலத்தை முட்டி அங்கு அமுத ஊறல் ஊறி உருகி வர விடுகின்ற பரம சுகத்தை அடைந்து, உன்னுடைய திருவடியை (அல்லது பரமசுகம் முற்றி நிலைத்துள்ள உனது திருவடியை) விரும்பி நினையாமல் வில்லைப்போல வளைந்த நெற்றியிலிட்ட திலதம் எனத் திகழும் பொட்டு ಗ್ಲಿಶ್ಠಿ சிறந்து திகழும் பொட்டு) விளங்கும் முகத்தை உடையவர்களின் முத்துப் போன்ற பல்லழகாலே - துன்ப வலையிற் சேர்ப்பித்த காமப்பித்தாற் கவலை அடைந்து திருடன் என வெட்கப்பட்டு அலைவேனோ! சாஸ்திர முறைப்படி வாசிக்கப்படுவதும், பொன் போல விளங்குவதும், வட்டவடிவு உடையதுமான திமிலைப் (ஒருவகைத் தோற்கருவி) பறைபோலச் சப்திக்கப் பொன்மயிலைச் செலுத்தின ஒளி வேலனே! பகைவர்கள் போல எதிர்த்துத் தாக்கி, நிறங்கறுத்து வந்த துஷடரும் (கதம்) கோபம் கொண்டவருமான (அமணர்) சமணருடைய குலத்தைக் (காலன்போல) அழித்தவரே! அலைவீசும் கடலை (ஆடையாக) உடுத்துள்ள (தலமதனில்) பூமியில், வெற்றித்தல்மாம் (சிவபிரான் அரி அயன் இருவருக்கும் அரியவராய் நின்று வெற்றிகண்ட தலமாம்) திரு அண்ணாமலையில் விளங்கும் மலையில் வீற்றிருப்பவனே! - அசுரர்களை வெட்டித் தேவர்களைச் சிறையினின்றும் விடுவித்துப் (பொன்னுலக்) ராஜ்ய பாரத்தை ஒரு நிலையில் வைத்த) பெருமாளே. (வெட்கி அலைவேனோ)