திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 404 இறுகு மணி முலை (திருவருணை) Thiruppugazh 404 iRugumaNimulai (thiruvaruNai) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனன தனதன தனன தனதன தனன தனதன ...... தனதான ......... பாடல் ......... இறுகு மணிமுலை மருவு தரளமு மெரியு முமிழ்மதி ...... நிலவாலே இரவி யெனதுயிர் கவர வருகுழ லிசையி லுறுகட ...... லலையாலே தறுகண் ரதிபதி மதனன் விடுகொடு சரமி லெளியெனு ...... மழியாதே தருண மணிபொழி லருணை நகருறை சயில மிசையினில் ...... வரவேணும் முறுகு திரிபுர மறுகு கனலெழ முறுவ லுடையவர் ...... குருநாதா முடிய கொடுமுடி யசுரர் பொடிபட முடுகு மரகத ...... மயில்வீரா குறவர் மடமக ளமுத கனதன குவடு படுமொரு ...... திருமார்பா கொடிய சுடரிலை தனையு மெழுகடல் குறுக விடவல ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... இறுகு மணி முலை மருவு தரளமும் எரியும் உமிழ் மதி நிலவாலே ... நெருங்கி அழுத்தமாயுள்ள அழகிய மார்பின் மீதுள்ள முத்து மாலை கூட தீயை உமிழும்படி காய்கின்ற சந்திரனுடைய நிலா ஒளியாலும், இர(ரா)வி எனது உயிர் கவர வரு குழல் இசையில் உறு கடல் அலையாலே ... என்னை வருத்தி அறுத்து எனது உயிரை அபகரிக்க எழுகின்ற புல்லாங்குழலின் இசையாலும், ஒலிக்கும் கடலின் அலையாலும், தறுகண் ரதி பதி மதனன் விடு கொடு சரமில் எளியெனும் அழியாதே ... கொடியவனும், ரதியின் கணவனும் ஆகிய மன்மதன் செலுத்திய கொடிய பாணத்தாலும், எளியவளாகிய நான் அழிந்து போகாமல், தருணம் மணி பொழில் அருணை நகர் உறை சயிலம் மிசையினில் வரவேணும் ... தக்க சமயத்தில், அழகிய சோலைகளை உடைய திரு அண்ணாமலை நகரிலுள்ள மலை மீது வந்தருள வேண்டும். முறுகு திரி புரம் முறுகு கனல் எழ முறுவல் உடையவர் குரு நாதா ... கடுமை வாய்ந்த திரிபுரங்களின் தெருக்களில் நெருப்பு எழும்படி புன் சிரிப்புச் சிரித்த சிவபெருமானுக்கு குரு நாதனே, முடிய கொடு முடி அசுரர் பொடிபட முடுகு மரகத மயில் வீரா ... எல்லா மலை உச்சிகளிலும் வாசம் செய்த அசுரர்கள் பொடிபட்டு அழியும்படி செலுத்திய பச்சை நிறம் கொண்ட மயில் வீரனே, குறவர் மட மகள் அமுத கனதன குவடு படும் ஒரு திரு மார்பா ... வேடர்களின் கபடமற்ற மகளாகிய வள்ளியின் அமுதம் பொதிந்த மார்பகங்களாகிய மலைகள் தாக்கும் ஒப்பற்ற அழகிய மார்பனே, கொடிய சுடர் இலை தனையும் எழு கடல் குறுக விடவல பெருமாளே. ... உக்கிரமான, ஒளி வாய்ந்த இலை ஒத்த வேலை ஏழு கடல்களும் வற்றும்படிச் செலுத்த வல்ல பெருமாளே. |
இப்பாடல் அகப் பொருள் துறையைச் சார்ந்தது. 'நாயக நாயகி' பாவத்தில் புலவர் தம்மையே நாயகியாக எண்ணிப் பாடியது. நிலவு, குழல் இசை, கடல் ஒலி, மன்மதன், அவனது பாணம் ஆகியவை விரக நோயை வளர்ப்பவை. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 2.249 pg 2.250 pg 2.251 pg 2.252 WIKI_urai Song number: 546 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை Sorry, no audio recordings for this song |
Song 404 - iRugu maNi mulai (thiruvaNNAmalai) iRuku maNimulai maruvu tharaLamu meriyu mumizhmathi ...... nilavAlE iravi yenathuyir kavara varukuzha lisaiyi luRukada ...... lalaiyAlE thaRukaN rathipathi mathanan vidukodu sarami leLiyenu ...... mazhiyAthE tharuNa maNipozhi laruNai nakaruRai sayila misaiyinil ...... varavENum muRuku thiripura maRuku kanalezha muRuva ludaiyavar ...... gurunAthA mudiya kodumudi yasurar podipada muduku marakatha ...... mayilveerA kuRavar madamaka Lamutha kanathana kuvadu padumoru ...... thirumArpA kodiya sudarilai thanaiyu mezhukadal kuRuka vidavala ...... perumALE. ......... Meaning ......... iRuku maNi mulai maruvu tharaLamum eriyum umizh mathi nilavAlE: Because of the moonlight burning so blazingly that the pearl necklace upon the tight bosom spews fiery sparks, ira(a)vi enathu uyir kavara varu kuzhal isaiyil uRu kadal alaiyAlE: because of the music flowing from the flute just to persecute me and steal my life, because of the roaring waves of the sea, thaRukaN rathi pathi mathanan vidu kodu saramil eLiyenum azhiyAthE: and because of the evil arrows shot by the vile God of Love (Manmathan), the consort of Rathi, do not let this poor soul, namely myself, decay; tharuNam maNi pozhil aruNai nakar uRai sayilam misaiyinil varavENum: (to save me) You must come at the appropriate time on the top of the hill in ThiruvaNNAmalai, surrounded by lovely groves! muRuku thiri puram muRuku kanal ezha muRuval udaiyavar guru nAthA: He merely smiled and set fire to the streets of the evil place, Thiripuram; You are the Master of that Lord SivA! mudiya kodu mudi asurar podipada muduku marakatha mayil veerA: All the demons living on the top of many mountains were destroyed and shredded to pieces when You flew over mounted on Your green peacock, Oh valorous One! kuRavar mada makaL amutha kanathana kuvadu padum oru thiru mArpA: The innocent damsel of the hunters, VaLLi, hugged Your matchless broad chest with her nector-filled hill-like bosom, Oh Lord! kodiya sudar ilai thanaiyum ezhu kadal kuRuka vidavala perumALE.: You are capable of wielding the fierce, leaf-shaped spear with such a force that the seven seas dried up, Oh Great One! |
This song is based on the Nayaka-Nayaki Bhavam, where the poet, assuming the heroine's role, expresses the pang of separation from the hero, Murugan. The moonlight, the music of the flute, the waves of the sea, the God of Love Manmathan and His flowery arrows are a few of the things that aggravate the agony of separation. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |