திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 393 அருமா மதனை (திருவருணை) Thiruppugazh 393 arumAmadhanai (thiruvaruNai) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனனா தனனத் தனனா தனனத் தனனதா தனனத் ...... தனதான ......... பாடல் ......... அருமா மதனைப் பிரியா தசரக் கயலார் நயனக் ...... கொடியார்தம் அழகார் புளகப் புழுகார் சயிலத் தணையா வலிகெட் ...... டுடல்தாழ இருமா நடைபுக் குரைபோ யுணர்வற் றிளையா வுளமுக் ...... குயிர்சோர எரிவாய் நரகிற் புகுதா தபடிக் கிருபா தமெனக் ...... கருள்வாயே ஒருமால் வரையைச் சிறுதூள் படவிட் டுரமோ டெறிபொற் ...... கதிர்வேலா உறைமா னடவிக் குறமா மகளுக் குருகா றிருபொற் ...... புயவீரா திருமால் கமலப் பிரமா விழியிற் றெரியா வரனுக் ...... கரியோனே செழுநீர் வயல்சுற் றருணா புரியிற் றிருவீ தியினிற் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... அருமா மதனைப் பிரியாத சரம் ... அரியவனும் அழகனுமான மன்மதனை விட்டு அகலாத பாணங்கள் போன்றதும், கயல் ஆர் நயனக் கொடியார் தம் ... கயல் மீன்போன்றதும் ஆகிய கண்களை உடைய பொல்லாதவர்களான விலைமாதர்களின் அழகு ஆர் புளக புழுகு ஆர் சயிலத்து ... அழகிய, புளகாங்கிதம் கொண்ட, புனுகுசட்ட வாசனை பூண்ட, மலைகள் போன்ற மார்பகங்களை அணையா வலி கெட்டு உடல் தாழ ... அணைந்து, வலிமை இழந்து உடல் நலிய, இருமா நடை புக்கு உரை போய் உணர்வு அற்று ... இருமலில் வீழும் தன்மை வந்து சேர, பேச்சு அற்று, உணர்வும் போய், இளையா உளம் உக்கு உயிர் சோர ... இளைத்து, உள்ளம் மெலிந்து, உயிர் சோர்வுற்று, எரி வாய் நரகில் புகுதாதபடிக்கு ... நெருப்பு கொளுத்தும் (கும்பிபாக)* நரகத்தில் புகாத வண்ணம், இரு பாதம் எனக்கு அருள்வாயே ... உனது இரு திருவடிகளை எனக்குத் தந்து அருளுக. ஒரு மால் வரையைச் சிறு தூள் படவிட்டு ... ஒப்பற்ற பெரிய கிரெளஞ்ச மலையை சிறு தூளாகும்படிச் செய்து, உரமோடு எறி பொன் கதிர் வேலா ... பலத்துடன் செலுத்திய, அழகிய ஒளி வீசும் வேலாயுதத்தை உடையவனே, உறை மான் அடவிக் குற மா மகளுக்கு உருகா ... மான்கள் வாழும் காட்டில் பெருமை வாய்ந்த குற மகளான வள்ளிக்கு உருகின ஆறிரு பொன் புய வீரா ... பன்னிரண்டு திரண்ட தோள்களை உடைய வீரனே, திருமால் கமலப் பிரமா விழியில் தெரியா அரனுக்கு அரியோனே ... திருமால், தாமரையில் வீற்றீருக்கும் பிரமன் ஆகிய இருவருக்கும் காணப் பெறாத சிவனுக்கும் அருமை வாய்ந்தவனே, செழு நீர் வயல் சுற்று அருணா புரியில் ... செழுமை வாய்ந்த நீர் வயல்கள் சூழ்ந்துள்ள திரு அண்ணாமலையில் திரு வீதியினில் பெருமாளே. ... அகன்ற வீதிகளில் மகிழ்ச்சியுடன் உலாவரும் பெருமாளே. |
* எரிவாய் நரகம் - கும்பி பாகம் எனப்படும். இது ஏழு நரகங்களில் ஒன்று. பாவம் செய்தவரைக் குயச் சூளையில் சுடுவது போல் வாட்டும் நரகம். |
ஏழு நரகங்கள் பின்வருமாறு: கூடாசலம், கும்பிபாகம், அள்ளல், அதோகதி, ஆர்வம், பூதி, செந்து (பிங்கலம்). |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 2.227 pg 2.228 WIKI_urai Song number: 535 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை Sorry, no audio recordings for this song |
Song 393 - arumA mathanai (thiruvaNNAmalai) arumA mathanaip piriyA thasarak kayalAr nayanak ...... kodiyArtham azhakAr puLakap puzhukAr sayilath thaNaiyA valiket ...... tudalthAzha irumA nadaipuk kuraipO yuNArvaR RiLaiyA vuLamuk ...... kuyirsOra erivAy narakiR pukuthA thapadik kirupA thamenak ...... karuLvAyE orumAl varaiyaic ciRuthUL padavit turamO deRipoR ...... kathirvElA uRaimA nadavik kuRamA makaLuk kurukA RirupoR ...... puyaveerA thirumAl kamalap piramA vizhiyiR ReriyA varanuk ...... kariyOnE sezhuneer vayalcut RaruNA puriyiR Riruvee thiyiniR ...... perumALE. ......... Meaning ......... arumA mathanaip piriyAtha saram: Like the arrows that never leave the hands of the unique and handsome Manmathan (God of Love) and kayal Ar nayanak kodiyAr tham: like the kayal fish are the lovely eyes of the taunting whores. azhaku Ar puLaka puzhuku Ar sayilaththu aNaiyA: I hugged their beautiful, tantalising, sweet-scented, mountain-like bosom; vali kettu udal thAzA: I lost all my vigour, and my health was shattered. irumA nadai pukku urai pOy uNarvu atRu: I fell into a coughing spell and lost my speech and sensation. iLaiyA uLam ukku uyir sOra: I became very thin, my mind was down in the dumps and my life was sinking. eri vAy narakil pukuthAthapadikku: To save me from falling into the worst hell, namely, the burning inferno (called kumbipAkam*), iru pAtham enakku aruLvAyE: kindly grant me Your hallowed feet! oru mAl varaiyaic ciRu thUL padavittu: The matchless great Mount Krouncha was shattered to pieces uramOdu eRi pon kathir vElA: by Your powerful throwing of the elegant and dazzling spear, Oh Lord! uRai mAn adavik kuRa mA makaLukku: In the forest, where deers roam about, lived the famous damsel of the KuRavAs, namely, VaLLi, urukA ARiru pon puya veerA: and Your twelve strong shoulders melted in love for her, Oh valorous One! thirumAl kamalap piramA vizhiyil theriyA aranukku ariyOnE: You are extremely dear to Lord SivA whose vision could never be fully seen by Vishnu and BrahmA, seated on the lotus. sezhu neer vayal cutRu aruNA puriyil: In ThiruvaNNAmalai, surrounded by fertile and lush paddy-fields, thiru veethiyinil perumALE.: You have Your abode, relishing Your procession in its wide streets, Oh Great One! |
* kumbipAgam is one of the seven hells, where the body of the sinner is roasted like earthen pots in a fiery oven. |
The seven hells are: kUdAsalam, kumbipAkam, aLLal, athOkathi, Arvam, pUthi and chenthu (pingalam). |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |