திருப்புகழ் 377 கறுவு மிக்கு ஆவி  (திருவருணை)
Thiruppugazh 377 kaRuvumikkuAvi  (thiruvaruNai)
Thiruppugazh - 377 kaRuvumikkuAvi - thiruvaruNaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதனத் தானனத் தனதனத் தானனத்
     தனதனத் தானனத் ...... தனதான

......... பாடல் .........

கறுவுமிக் காவியைக் கலகுமக் காலனொத்
     திலகுகட் சேல்களிப் ...... புடனாடக்

கருதிமுற் பாடுகட் டளையுடற் பேசியுட்
     களவினிற் காசினுக் ...... குறவாலுற்

றுறுமலர்ப் பாயலிற் றுயர்விளைத் தூடலுற்
     றுயர்பொருட் கோதியுட் ...... படுமாதர்

ஒறுவினைக் கேயுளத் தறிவுகெட் டேனுயிர்ப்
     புணையிணைத் தாள்தனைத் ...... தொழுவேனோ

மறையெடுத் தோதிவச் சிரமெடுத் தானுமைச்
     செறிதிருக் கோலமுற் ...... றணைவானும்

மறைகள்புக் காரெனக் குவடுநெட் டாழிவற்
     றிடஅடற் சூரனைப் ...... பொரும்வேலா

அறிவுடைத் தாருமற் றுடனுனைப் பாடலுற்
     றருணையிற் கோபுரத் ...... துறைவோனே

அடவியிற் றோகைபொற் றடமுலைக் காசையுற்
     றயருமச் சேவகப் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

கறுவு மிக்கு ஆவியைக் கல(க்)கும் அக் காலன் ஒத்து ...
கோபம் மிகுந்து உயிரைக் குலையச் செய்யும் அந்த யமனைப் போன்று,

இலகு கண் சேல் களிப்புடன் நாடக் கருதி முற்பாடு
கட்டளை உடல் பேசி
... விளங்கும் சேல் மீன் போன்ற கண்
மகிழ்ச்சியுடன் விரும்பிப் பார்க்க, யோசனை செய்து முன்னதாகவே
உடலுக்கு அளவான பொருள் இவ்வளவு என்று பேசி,

உள் களவினில் காசினுக்கு உறவால் உற்று ... உள்ளத்தில்
வைத்த கள்ளத்தனத்தால் பொருளுக்குத் தக்க உறவு பூண்டு,

உறு மலர்ப் பாயலில் துயர் விளைத்து ஊடல் உற்று ...
பொருந்திய மலர்ப் படுக்கையில் துயரத்தை உண்டு பண்ணியும், பிணக்கு
உற்றும்,

உயர் பொருட்கு ஓதி உட்படு மாதர் ஒறு வினைக்கே உளத்து
அறிவு கெட்டேன்
... அதிகப் பொருள் தர வேண்டும் என்று கூறி
உட்படுகின்ற விலைமாதர்கள் கடிந்து கூறும் துன்பத்துக்கு என்
உள்ளத்து அறிவை இழந்தவன் நான்.

உயிர்ப் புணை இணைத் தாள்தனைத் தொழுவேனோ ...
என் உயிருக்குப் பிறவிக் கடலைக் கடக்கத் தெப்பம் போல உதவும் உனது
இரு திருவடிகளையும் தொழ மாட்டேனோ?

மறை எடுத்து ஓதி வச்சிரம் எடுத்தானும் மைச் செறி
திருக் கோலம் உற்று அணைவானும்
... வேதங்களை எடுத்து
ஓதுபவனாகிய பிரமனும், வஜ்ராயுதத்தை ஏந்திய இந்திரனும், மேகம்
போலக் கருமை நிறம் நிறைந்த அழகிய கோலத்தைக்கொண்டு சேரும்
திருமாலும்,

மறைகள் புக்கார் எனக் குவடு நெட்டாழி வற்றிட அடல்
சூரனைப் பொரும் வேலா
... (சூரனுக்குப் பயந்து) மறைவிடம் தேடி
(தன்னிடம்) அடைக்கலம் புகுந்துள்ளார்கள் என்ற காரணத்தால்,
மலைகளைக் கொண்ட நெடிய கடல் வற்றிப்போக, வலிமை வாய்ந்த
சூரனோடு போர் செய்யும் வேலனே,

அறிவுடைத்தாரும் மற்றுடன் உனைப் பாடல் உற்று
அருணையில் கோபுரத்து உறைவோனே
... அறிவு வாய்ந்த
பெரியோர்களும் என்னுடன் கூடி (யான் பாடும் சந்தப் பாக்களால்)
உன்னைப் பாட திருவண்ணாமலையில் கோபுரத்தில் மகிழ்ச்சியுடன்
வீற்றிருப்பவனே,

அடவியில் தோகை பொன் தட முலைக்கு ஆசை உற்று
அயரும் அச் சேவகப் பெருமாளே.
... வள்ளி மலைக் காட்டில் மயில்
போன்று உலாவும் வள்ளியின் அழகிய பெரிய மார்பகங்களுக்கு ஆசை
அடைந்து சோர்வு கொண்ட வலிமை வாய்ந்த பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.195  pg 2.196  pg 2.197  pg 2.198 
 WIKI_urai Song number: 519 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 377 - kaRuvu mikku Avi (thiruvaNNAmalai)

kaRuvumik kAviyaik kalakumak kAlanoth
     thilakukat sElkaLip ...... pudanAdak

karuthimuR pAdukat taLaiyudaR pEsiyut
     kaLaviniR kAsinuk ...... kuRavAlut

RuRumalarp pAyalit RuyarviLaith thUdalut
     Ruyarporut kOthiyut ...... padumAthar

oRuvinaik kEyuLath thaRivuket tEnuyirp
     puNaiyiNaith thALthanaith ...... thozhuvEnO

maRaiyeduth thOthivac chirameduth thAnumaic
     cheRithiruk kOlamut ...... RaNaivAnum

maRaikaLpuk kArenak kuvadunet tAzhivat
     RidAdaR cUranaip ...... porumvElA

aRivudaith thArumat Rudanunaip pAdalut
     RaruNaiyiR kOpurath ...... thuRaivOnE

adaviyit ROkaipot Radamulaik kAsaiyut
     Rayarumac chEvakap ...... perumALE.

......... Meaning .........

kaRuvu mikku Aviyaik kala(k)kum ak kAlan oththu: They are like the fiery God of Death (Yaman) who shakes up the life;

ilaku kaN sEl kaLippudan nAdak karuthi muRpAdu kaddaLai udal pEsi: they roll their elegant sEl-fish-like eyes staring ardently and negotiate for their bodies the price predetermined after careful thought;

uL kaLavinil kAsinukku uRavAl utRu: with deceit hidden in their heart, they dole out carnal pleasure in proportion to the money received;

uRu malarp pAyalil thuyar viLaiththu Udal utRu: on the neat floral bed, they tease and cause misery, feigning quarrels;

uyar porutku Othi utpadu mAthar oRu vinaikkE uLaththu aRivu kettEn: these whores submit to those who offer abundant money; I am one who has lost the acumen of mind to the misery of their taunting.

uyirp puNai iNaith thALthanaith thozhuvEnO: Will I worship Your hallowed feet that serve my life as the raft to cross the sea of birth?

maRai eduththu Othi vacchiram eduththAnum maic cheRi thiruk kOlam utRu aNaivAnum: As BrahmA, who preaches the VEdAs, IndrA who holds the weapon vajrA in his hand and Lord VishNu who is endowed with a beautiful form and complexion of the dark cloud

maRaikaL pukkAr enak kuvadu nettAzhi vatRida adal cUranaip porum vElA: searched for shelter (being scared by SUran) and sought Your refuge, You fought with that strong demon SUran with Your spear, drying out the wide sea filled with large mountains, Oh Lord!

aRivudaiththArum matRudan unaip pAdal utRu aruNaiyil kOpuraththu uRaivOnE: As learned and wise men join me in singing my songs praising You in rhymes, You are seated with relish on the temple tower of ThiruvaNNAmalai, Oh Lord!

adaviyil thOkai pon thada mulaikku Asai utRu ayarum ac chEvakap perumALE.: In the forest of VaLLimalai, she roams about like a peacock; You went craving for the broad and large bosom of that VaLLi and became weary, Oh valorous and Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 377 kaRuvu mikku Avi - thiruvaruNai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]