திருப்புகழ் 362 குருதி புலால் என்பு  (திருவானைக்கா)
Thiruppugazh 362 kurudhipulAlenbu  (thiruvAnaikkA)
Thiruppugazh - 362 kurudhipulAlenbu - thiruvAnaikkASri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதன தானந்த தான தந்தன
     தனதன தானந்த தான தந்தன
          தனதன தானந்த தான தந்தன ...... தனதான

......... பாடல் .........

குருதிபு லாலென்பு தோன ரம்புகள்
     கிருமிகள் மாலம்பி சீத மண்டிய
          குடர்நிணம் ரோமங்கள் மூளை யென்பன ...... பொதிகாயக்

குடிலிடை யோரைந்து வேட ரைம்புல
     அடவியி லோடுந்து ராசை வஞ்சகர்
          கொடியவர் மாபஞ்ச பாத கஞ்செய ...... அதனாலே

சுருதிபு ராணங்க ளாக மம்பகர்
     சரியைக்ரி யாவண்டர் பூசை வந்தனை
          துதியொடு நாடுந்தி யான மொன்றையு ...... முயலாதே

சுமடம தாய்வம்பு மால்கொ ளுந்திய
     திமிரரொ டேபந்த மாய்வ ருந்திய
          துரிசற ஆநந்த வீடு கண்டிட ...... அருள்வாயே

ஒருதனி வேல்கொண்டு நீள்க்ர வுஞ்சமும்
     நிருதரு மாவுங்க லோல சிந்துவும்
          உடைபட மோதுங்கு மார பங்கய ...... கரவீரா

உயர்தவர் மாவும்ப ரான அண்டர்கள்
     அடிதொழு தேமன்ப ராவு தொண்டர்கள்
          உளமதில் நாளுங்க லாவி யின்புற ...... வுறைவோனே

கருதிய ஆறங்க வேள்வி யந்தணர்
     அரிகரி கோவிந்த கேச வென்றிரு
          கழல்தொழு சீரங்க ராச னண்புறு ...... மருகோனே

கமலனு மாகண்ட லாதி யண்டரு
     மெமது பிரானென்று தாள்வ ணங்கிய
          கரிவனம் வாழ்சம்பு நாதர் தந்தருள் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

குருதி புலால் என்பு தோல் னரம்புகள் ... இரத்தம், ஊன்,
எலும்புகள், தோல், நரம்புகள்,

கிருமிகள் மால் அம் பிசீத மண்டிய குடர் ... கிருமிகள், காற்று,
நீர், மாமிசம், நெருங்கிய குடல்கள்,

நிணம் ரோமங்கள் மூளை யென்பன பொதி ... கொழுப்பு,
மயிர்கள், மூளை முதலியன நிறைந்த

காயக்குடிலிடை யோரைந்து வேடர் ... உடல் என்னும் குடிசையுள்
மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐம்பொறிகளாகிய வேடர்கள்,

ஐம்புல அடவியி லோடுந்துராசை வஞ்சகர் ... சுவை, ஒளி,
ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐம்புலக் காட்டிலே ஓடுகின்ற, கெட்ட
ஆசை கொண்ட வஞ்சகர்கள்,

கொடியவர் மாபஞ்ச பாதகஞ்செய ... மகா பொல்லாதவர்கள்,
பஞ்சமா* பாதகச் செயல்களை செய்ய,

அதனாலே சுருதி புராணங்கள் ஆகமம் பகர் ... அதன்
காரணமாக, வேதங்கள், புராணங்கள், ஆகம நூல்களில்
சொல்லப்படுகின்ற

சரியைக்ரியா அண்டர் பூசை வந்தனை ... சரியை, கிரியை,
தேவ பூஜை, வழிபாடு

துதியொடு நாடுந்தி யான மொன்றையு முயலாதே ...
தோத்திரம், நாடிச் செய்யும் தியானம் முதலியவற்றில்** ஒன்றையேனும்
முயற்சித்து அநுஷ்டிக்காமல்

சுமடமதாய் வம்பு மால்கொளுந்திய ... அறிவிலியாய், பயனில்லாது,
ஆசைகளை எழுப்புவதுமாய் உள்ள

திமிரரொடே பந்தமாய்வருந்திய ... ஆணவக்காரர்களுடன்
கூட்டுறவில் ஆழ்ந்து வருந்திய

துரிசற ஆநந்த வீடு கண்டிட அருள்வாயே ... குற்றம் அற்றுப்
போவதற்கும், ஆனந்தமான பேரின்ப வீட்டை யான்
கண்டுகொள்வதற்கும் நீ அருள்வாயாக.

ஒருதனி வேல்கொண்டு நீள்க்ர வுஞ்சமும் ... ஓர் ஒப்பற்ற
வேலைக் கொண்டு, நெடிய கிரெளஞ்சமலையையும்,

நிருதரு மாவுங்க லோல சிந்துவும் ... அசுரர்களையும், மாமரமாய்
நின்ற சூரனையும், ஆரவாரிக்கும் கடலையும்

உடைபட மோதுங்கு மார பங்கய கரவீரா ... உடைபட்டுப்
போகுமாறு போர் புரிந்த குமாரனே, தாமரையொத்த கரங்களை
உடைய வீரனே,

உயர்தவர் மா உம்ப ரான அண்டர்கள் ... சிறந்த தவ முநிவர்கள்,
மேலுலகவாசிகளான தேவர்கள்,

அடிதொழுதே மன்பராவு தொண்டர்கள் ... உனது திருவடிகளைத்
தொழுது நன்கு துதிக்கும் அடியார்கள்,

உளமதில் நாளுங்குலாவி யின்புற வுறைவோனே ... இவர்களது
உள்ளத்தில் தினமும் விளையாடி இன்பமுற வீற்றிருப்போனே,

கருதிய ஆறங்க வேள்வி யந்தணர் ... ஆய்ந்து அறிந்த வேதத்தின்
ஆறு அங்கங்களிலும்*** வல்ல, வேள்வி செய்யும் வேதியர்கள்

அரிகரி கோவிந்த கேச வென்று ... ஹரி ஹரி, கோவிந்தா, கேசவா
என்று துதிசெய்து,

இருகழல்தொழு சீரங்க ராசன் நண்புறு மருகோனே ... இரு
திருவடிகளையும் வணங்கப்பெற்ற ஸ்ரீரங்கநாதரின் அன்புமிக்க
மருமகனே,

கமலனும் ஆகண்டல ஆதி யண்டரும் ... பிரம தேவனும், இந்திரன்
முதலான மற்ற தேவர்களும்

எமது பிரானென்று தாள்வணங்கிய ... எங்கள் தலைவன் எனக்
கூறி அடிபணிந்திடப் பெற்ற

கரிவனம் வாழ்சம்பு நாதர் தந்தருள் பெருமாளே. ...
திருவானைக்காவில் வாழ்கின்ற ஜம்புநாதர் தந்தருளிய பெருமாளே.


* ஐவகை பாதகங்கள்:

கொலை, களவு, சூது, கள்ளுண்ணல், குரு நிந்தை.


** நான்கு பக்தி மார்க்கங்கள் பின்வருமாறு:

1. சரியை: திருக்கோயிலில் அலகு இடுதல், மெழுகுதல், விளக்கு இடுதல், நந்தவனம்
வைத்தல், பூ எடுத்தல், மாலை அமைத்தல், இறைவனை வாழ்த்துதல், திருவேடம் கண்டு
பணிதல். இது 'தாத மார்க்கம் - சாலோகம்'.

2. கிரியை: பூஜை உபகரணங்களை அமைத்து நித்தியக் காரியம் செய்தல்.
இது 'புத்ர மார்க்கம் - சாமீபம்'.

3. யோகம்: புலன்களை அடக்கிப் பிராண வாயுவைச் சலனம் அற நிறுத்தி ஆறு
ஆதாரங்களின் பொருளை உணர்ந்து, சந்திர மண்டல அமிர்தத்தை உடல் முழுதும் நிரப்பி,
முழு ஜோதியை நினைத்திருத்தல். இது 'சக மார்க்கம் (தோழ நெறி) - சாரூபம்'.

4. ஞானம்: புறத் தொழில் அகத் தொழில் இன்றி, அறிவு மாத்திரத்தாலே செய்யும் வழிபாடு
ஞானம். இது 'சன்மார்க்கம் - சாயுஜ்யம்'.

. . . சிவஞான சித்தியார் சூத்திரம்.


*** வேதத்தின் ஆறு அங்கங்கள் பின்வருமாறு:

நிருத்தம், ஜோதிடம், சிக்ஷை, வியாகரணம், கற்பம், சந்தஸ்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.153  pg 2.154  pg 2.155  pg 2.156  pg 2.157  pg 2.158 
 WIKI_urai Song number: 504 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 362 - kurudhi pulAl enbu (thiruvAnaikkA)

kurudhi pulAl enbu thO narambugaL
     kirumigaL mAlambi seedha maNdiya
          kudar niNam rOmangaL mULai enbana ...... podhikAya

kudilidai Oraindhu vEdar aimpula
     ataviyi lOdun dhurAsai vanchagar
          kodiyavar mApancha pAthakam seya ...... adhanAlE

surudhi purANangaL Agamam pagar
     chariyai kriyAvaNdar pUsai vandhanai
          thudhiyodu nAdum dhiyAnam ondraiyu ...... muyalAdhE

sumadama dhAy vambu mAl koLundhiya
     thimirar odE bandhamAy varundhiya
          thurisaRa Anandha veedu kaNdida ...... aruLvAyE

oru thani vEl koNdu neeL kravunchamum
     nirudharu mAvunga lOla sindhuvum
          udaipada mOdhung kumAra pangaya ...... karaveerA

uyar thavar mAvumbar Ana aNdargaL
     adithozhu dhEmanba rAvu thoNdargaL
          uLamadhil nALung kulAvi inbuRa ...... uRaivOnE

karudhiya ARanga vELvi andhaNar
     arihari gOvindha kEsa vendriru
          kazhalthozhu seeranga rAjan aNbuRu ...... marugOnE

kamalanu mAkaNda lAdhi aNdarum
     emadhu pirAnendru thAL vaNangiya
          karivanam vAzh jambu nAthar thandharuL ...... perumALE.

......... Meaning .........

kurudhi pulAl enbu thO narambugaL: Blood, flesh, bones, skin, nerves,

kirumigaL mAlambi seedha maNdiya: germs, air, water, meat, dense intestines,

kudar niNam rOmangaL mULai enbana podhikAya: fat, hair, and brain - all these fill up this body.

kudilidai Oraindhu vEdar aimpula: In this cottage, there are five hunters constituting the sensory organs

ataviyi lOdun dhurAsai vanchagar: who run around this jungle of five senses and who are the worst cheats with lustful desires.

kodiyavar mApancha pAthakam seya adhanAlE: There are evil people who carry on with the five* worst offences

surudhi purANangaL Agamam pagar: and because of that, they ignore the ways of worship mentioned in VEdAs and PurAnAs,

chariyai kriyAvaNdar pUsai vandhanai: such as sariyai, kiriyai, worship of DEvAs, prostrations,

thudhiyodu nAdum dhiyAnam ondraiyu muyalAdhE: chanting and meditation. Not even one such method** was ever attempted by me;

sumadama dhAy vambu mAl koLundhiya thimirar odE: instead, I was roaming as a stupid and useless fellow, amidst provocative, lascivious and arrogant ones,

bandhamAy varundhiya: suffering due to my attachment to them.

thurisaRa Anandha veedu kaNdida aruLvAyE: Ending such blemish, please bestow on me Your grace so that I can attain the blissful heaven!

oru thani vEl koNdu neeL kravunchamum: With a unique spear, You pierced the large mount of Krouncha;

nirudharu mAvunga lOla sindhuvum: and also the demons and, SUran in the disguise of a mango tree, along with the seas roaring with waves,

udaipada mOdhung kumAra pangaya karaveerA: were all shattered to pieces when You fought with them with Your lotus-like hand, Oh warrior!

uyar thavar mAvumbar Ana aNdargaL: Great sages, the Celestials living in heaven and

adithozhu dhEmanba rAvu thoNdargaL: Your devotees who prostrate at Your feet with devotion

uLamadhil nALung kulAvi inbuRa uRaivOnE: are all privileged to be blessed by Your happy presence in their hearts at all times!

karudhiya ARanga vELvi andhaNar: The vedic purohits who are all well-versed in the six aspects*** of the scriptures and who perform sacrificial rites

arihari gOvindha kEsa vendru: keep chanting "Hari, Hari, Govinda and Kesava"

irukazhalthozhu seeranga rAjan aNbuRu marugOnE: in praise of the two lotus feet of Sriranga RAjan (Vishnu) whose beloved nephew You are!

kamalanum AkaNda lAdhi aNdarum: BrahmA, seated on the lotus, IndrA (Aakandan) and other DEvAs

emadhu pirAnendru thAL vaNangiya: proudly acclaim SivA as their Lord when worshipping His feet

karivanam vAzh jambu nAthar thandharuL perumALE.: at this place, ThiruvAnaikkA, whose Lord JambunAthar (SivA) has blessed us with You, Oh Great One!


* Five heinous sins (crimes) are:

murder, stealing, lying, drunkenness and abuse of the teacher.


** The four methods of worship are:

1.  sariyai:  Worship through service in temples such as doing penance, washing the floor, lighting the lamps, maintaining the flower garden, plucking the flowers for offering, making of garlands, singing of hymns, decorating the deities etc. This is known as 'dhAdha mArgam - sAlOkam'.

2.  kiriyai:  Worship, both inwardly and externally, of a God with a form through daily offerings (pUjA) and with several pUjA materials. This is called 'puthra mArgam - sameepam'.

3.  yOgam:  Inward worship only of a formless God by control of senses, holding the oxygen in the inhaled air and letting it through the six centres of 'kuNdalini chakrA' after understanding each state fully, experiencing the flow of nectar in the 'Lunar zone' between the eyebrows and letting it seep throughout the body and meditating on the full effulgence. This is 'sakha mArgam - sArUbam'.

4.  gnAnam:  Ceasing all external and internal activities, this method consists of worshipping through the medium of intellect alone, seeking the True Knowledge. This is 'san mArgam - sAyujyam'.


*** The six aspects of VEdAs are:

Nruththam, JOsyam, Siksha, VyAkaraNam, KaRpam and Chandas.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 362 kurudhi pulAl enbu - thiruvAnaikkA

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]