திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 360 கரு முகில் (திருவானைக்கா) Thiruppugazh 360 karumugil (thiruvAnaikkA) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனதனதன தானத் தானன தனதனதன தானத் தானன தனதனதன தானத் தானன ...... தனதான ......... பாடல் ......... கருமுகில்திர ளாகக் கூடிய இருளெனமரு ளேறித் தேறிய கடிகமழள காயக் காரிகள் ...... புவிமீதே கனவியவிலை யோலைக் காதிகள் முழுமதிவத னேரப் பாவைகள் களவியமுழு மோசக் காரிகள் ...... மயலாலே பரநெறியுண ராவக் காமுகர் உயிர்பலிகொளு மோகக் காரிகள் பகழியைவிழி யாகத் தேடிகள் ...... முகமாயப் பகடிகள்பொரு ளாசைப் பாடிக ளுருவியதன பாரக் கோடுகள் படவுளமழி வேனுக் கோரருள் ...... புரிவாயே மரகதவித நேர்முத் தார்நகை குறமகளதி பாரப் பூண்முலை மருவியமண வாளக் கோலமு ...... முடையோனே வளைதருபெரு ஞாலத் தாழ்கடல் முறையிடநடு வாகப் போயிரு வரைதொளைபட வேல்விட் டேவிய ...... அதிதீரா அரவணைதனி லேறிச் சீருடன் விழிதுயில்திரு மால்சக் ராயுதன் அடியிணைமுடி தேடிக் காணவும் ...... அரிதாய அலைபுனல்சடை யார்மெச் சாண்மையும் உடையதொர்மயில் வாசிச் சேவக அழகியதிரு வானைக் காவுறை ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... கரு முகில் திரளாகக் கூடிய இருள் என மருள் ஏறித் தேறிய கடி கமழ் அளக ஆயக்காரிகள் ... கரிய மேகங்கள் திரண்டு கூடிய இருள் என்று சொல்லும்படியான வியப்பு நிறைந்து விளக்கமுற்றதும், நறு மணம் வீசுவதுமான கூந்தலை உடைய அழகை உடையவர்கள், புவி மீதே கனவிய விலை ஓலைக் காதிகள் ... இந்த உலகிலேயே மிகுந்த விலை கொண்ட காதணியை அணிந்தவர்கள், முழு மதி வதன(ம்) நேர் அப்பாவைகள் ... பூரண சந்திரனை ஒத்த முகத்தை உடைய அந்தப் பதுமையைப் போன்றவர்கள், களவிய முழு மோசக்காரிகள் ... கள்ளத்தனத்துடன் கூடிய முழு மோசம் செய்பவர்கள் மயலாலே பர நெறி உணரா அக்காமுகர் உயிர் பலி கொ(ள்)ளு மோகக்காரிகள் ... (ஆகிய இத்தகைய வேசியர்கள்) மீதுள்ள ஆசையால் மேலான மார்க்கத்தை அறியாத அந்தக் காமாந்தகர் உயிரையே பலி கொள்ளுகின்ற ஆசைக்காரிகள், பகழியை விழியாகத் தேடிகள் முகம் மாயப் பகடிகள் பொருள் ஆசைப் பாடிகள் ... அம்பையே கண்ணாகத் தேடி வைத்துள்ளவர்கள், முகம் காட்டிப் பாசாங்கு செய்கின்ற வெளி வேஷதாரிகள், பொருள் மேலேயே ஆசை கொண்டுள்ளவர்கள் (ஆகிய விலைமாதர்களின்) உருவிய தன பாரக் கோடுகள் பட உளம் அழிவேனுக்கு ஓர் அருள் புரிவாயே ... வடிவழகு கொண்டுள்ள மார்பகங்களான சிகர முனைகள் என் நெஞ்சில் தைக்க உள்ளம் அழிகின்ற எனக்கு ஒப்பற்ற அருளைப் புரிந்திடுக. மரகத வித நேர் முத்து ஆர் நகை குற மகள் ... மரகதப் பச்சை நிறம் கொண்டவளும், முத்துக்கள் போன்ற பற்களை உடையவளுமான குறப் பெண்ணான வள்ளியின் அதி பாரப் பூண் முலை மருவிய மணவாளக் கோலமும் உடையோனே ... அதிக பாரமுள்ள ஆபரணம் அணிந்த மார்பினைப் பொருந்திய மணவாளக் கோலம் உடையவனே, வளை தரு பெரு ஞாலத்து ஆழ் கடல் முறை இட நடுவாகப் போய் ... பெரிய பூமியை வளைந்துள்ள ஆழமான கடல் முறையிட, அக்கடலின் நடுவில் சென்று இரு வரை தொளை பட வேல் விட்டு ஏவிய அதி தீரா ... பெரிய மலையாகிய கிரவுஞ்சத்தை பிளவுபடும்படி வேலைச் செலுத்திய மிக்க வல்லவனே, அரவு அணை தனில் ஏறிச் சீருடன் விழி துயில் திருமால் சக்ராயுதன் ... (ஆதிசேஷனாம்) பாம்பணையின் மேல் ஏறி, சீராகக் கண் துயிலும் திருமால், சக்ராயுதத்தை ஏந்தியவன், அடி இணை முடி தேடிக் காணவும் அரிதாய அலை புனல் சடையார் மெச்சு ... (சிவனுடைய) இரண்டு திருவடியின் என்லையைத் தேடிப் பார்ப்பதற்கும் கிடையாதிருந்தவரும், அலைகளைக் கொண்ட கங்கையைச் சடையில் தரித்தவருமாகிய சிவ பெருமான் மெச்சுகின்ற ஆண்மையும் உடையது ஒர் மயில் வாசிச் சேவக ... ஆண்மையை உடைய ஒப்பற்ற மயில் என்னும் குதிரையை வாகனமாகக் கொண்டவனே, அழகிய திருவானைக்கா உறை பெருமாளே. ... அழகிய திருவானைக்காவில் வீற்றிருக்கும் பெருமாளே. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 2.147 pg 2.148 pg 2.149 pg 2.150 WIKI_urai Song number: 502 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை Sorry, no audio recordings for this song |
Song 360 - karu mugil (thiruvAnaikkA) karumukilthira LAkak kUdiya iruLenamaru LERith thERiya kadikamazhaLa kAyak kArikaL ...... puvimeethE kanaviyavilai yOlaik kAthikaL muzhumathivatha nErap pAvaikaL kaLaviyamuzhu mOsak kArikaL ...... mayalAlE paraneRiyuNa rAvak kAmukar uyirpalikoLu mOkak kArikaL pakazhiyaivizhi yAkath thEdikaL ...... mukamAyap pakadikaLporu LAsaip pAdika Luruviyathana pArak kOdukaL padavuLamazhi vEnuk kOraruL ...... purivAyE marakathavitha nErmuth thArnakai kuRamakaLathi pArap pUNmulai maruviyamaNa vALak kOlamu ...... mudaiyOnE vaLaitharuperu njAlath thAzhkadal muRaiyidanadu vAkap pOyiru varaithoLaipada vElvit tEviya ...... athitheerA aravaNaithani lERic cheerudan vizhithuyilthiru mAlchak rAyuthan adiyiNaimudi thEdik kANavum ...... arithAya alaipunalsadai yArmec chANmaiyum udaiyathormayil vAsic chEvaka azhakiyathiru vAnaik kAvuRai ...... perumALE. ......... Meaning ......... karu mukil thiraLAkak kUdiya iruL ena maruL ERith thERiya kadi kamazh aLaka AyakkArikaL: Their fragrant hair is awesome in its pitch darkness as if dark clouds have assembled together; puvi meethE kanaviya vilai Olaik kAthikaL: their ear-studs are the costliest ones in this world; muzhu mathi vathana(m) nEr appAvaikaL: they look like statuettes with the face of the full moon; kaLaviya muzhu mOsakkArikaL: they do treacherous things in a sneaky way; mayalAlE para neRi uNarA ak kAmukar uyir pali ko(L)Lu mOkakkArikaL: they are obsessively passionate to the point of taking the lives of their adorers who do not know the righteous path, overwhelmed by the craze for these whores; pakazhiyai vizhiyAkath thEdikaL mukam mAyap pakadikaL poruL Asaip pAdikaL: they have selected arrows for their eyes; they display various alluring aspects of their faces in an outward show; their desire is only for money; uruviya thana pArak kOdukaL pada uLam azhivEnukku Or aruL purivAyE: such whores wield their pretty peak-like bosom on me, hurting my heart; kindly bless me with Your matchless grace. marakatha vitha nEr muththu Ar nakai kuRa makaL: She has the complexion of emerald-green and rows of teeth like pearl; she is VaLLi, the damsel of the KuRavAs; athi pArap pUN mulai maruviya maNavALak kOlamum udaiyOnE: You embraced her huge bosom, wearing a heavy ornament, as her beloved consort, Oh Lord! vaLai tharu peru njAlaththu Azh kadal muRai ida naduvAkap pOy: The deep sea surrounding this vast earth made a pleading noise when You went amidst it iru varai thoLai pada vEl viddu Eviya athi theerA: and wielded Your spear to split the large mount, Krouncha, Oh Mighty One! aravu aNai thanil ERic cheerudan vizhi thuyal thirumAl sakrAyuthan: On top of the serpent-bed (AdhisEshan), He slumbers in a cosy comfort; He is Lord VishNu, holding the disc in His hand; adi iNai mudi thEdik kANavum arithAya alai punal sadaiyAr mecchu: He could not comprehend the boundary of Lord SivA's hallowed feet despite an intense search; He holds on His matted hair the wavy river Gangai; that Lord SivA appreciates ANmaiyum udaiyathu or mayil vAsic chEvaka: the valour of Your matchless peacock which serves as Your horse-like vehicle, Oh Lord! azhakiya thiruvAnaikkA uRai perumALE.: You have chosen Your abode in this beautiful place, ThiruvAnaikkA, Oh Great One! |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |