பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவனைக்கா திருப்புகழ் உரை 141 இளங்குமரனே! குகனே! கந்தனே! கிரெளஞ்ச மலையை அழித்த வேலாயுதனே! மயிலனே! எனத் துதித்துவந்து கும்பிட்ட வானுலகத் தேவர்களின் தலைவனான இந்திரனுடைய கொடிய துயரை நீக்கினவனே! நறுமணம் வீசும் கலவைச் சாந்தம் அணிந்தவனே! சிரேஷ்டமானதும், பரிசுத்தமானதும், மங்களகரமானதுமான வீர கடகத்தை (கங்கணத்தை) அணிந்த திருப்புயத்தை உடைய சிங்கமே! அழகனே! வெற்றிகொண்ட போர்க்களத்திற் சிறந்தவனே! வயலூரனே! உலகுக்கு முதல்வி, இமயமலை ஈன்ற மின்போன்ற தேவி, நீலி, கவுரி பரை, (பராசக்தி), மங்கை, குண்டலி (வல்லபசக்தி), நாளுக்குநாள் இனிமை பயக்கும் பழம் (அல்லது இனிமைதரும் க(ன்)ணி, எங்கள் அம்பிகை, திரிபுர்த்தை எரித்த தாய் (அல்லது திரிபுரை ஆயி), நாத வடிவினள், அகிலாண்டநாயகி, ஆலிலைபோன்ற உதரம் (வயிறு) உள்ள பசிய கரும்பு அனையவள், வெள்ளை நாவற் கீழ் வீற்றிருக்கும் அரசின் (ஐம்புநாதரின்) மனைவி, வஞ்சிக்கொடி போல்வாள் பெற்றருளிய பெருமாளே! (தாப சபலம் அற நின்கழல் பெறுவேனோ) 502. கரிய மேகங்கள் கூட்டமாகக் கூடின. இருள் என்று சொல்லும்படியான மருட்சி - வியப்பு - நிறைந்து விளக்க முற்றதும், நறுமணம் வீசுவதுமான - (அளக ஆயக்காரிகள்) கூந்தலை உடையவர்கள், தோழியர்களை உடையவர்கள், இந்தப் பூமியில் - வண்ணமே அந்த வெண்ணாவல் மரத்து அடியில் இறைவன் வீற்றிருக்கின்றார். அதனால் இறைவனுக்கு ஜம்புநாதர் வெண்ணாவலரசு’ எனப் பெயர் போந்தது; தலம் ஜம்புகேசுரம் ஆயிற்று (திரு ஆணைக்காப் புராணம்) "ஞான பூமிக்கண் ஒளிர இருப்பாய் உன் நீழலிலே யாம் உறைவோம் என்ன ! . திரு ஆணைக்கா உலா,-17. ஆனைக்காவே" சம்பந்தர் -3-109.7.