திருப்புகழ் 347 மக்கட்குக் கூற  (காஞ்சீபுரம்)
Thiruppugazh 347 makkatkukkURa  (kAnjeepuram)
Thiruppugazh - 347 makkatkukkURa - kAnjeepuramSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தத்தத்தத் தானன தானன
     தத்தத்தத் தானன தானன
          தத்தத்தத் தானன தானன ...... தனதான

......... பாடல் .........

மக்கட்குக் கூறரி தானது
     கற்றெட்டத் தான்முடி யாதது
          மற்றொப்புக் கியாதுமொ வாதது ...... மனதாலே

மட்டிட்டுத் தேடவொ ணாதது
     தத்வத்திற் கோவைப டாதது
          மத்தப்பொற் போதுப கீரதி ...... மதிசூடும்

முக்கட்பொற் பாளரு சாவிய
     அர்த்தக்குப் போதக மானது
          முத்திக்குக் காரண மானது ...... பெறலாகா

முட்டர்க்கெட் டாதது நான்மறை
     யெட்டிற்றெட் டாதென வேவரு
          முற்பட்டப் பாலையி லாவது ...... புரிவாயே

செக்கட்சக் ராயுத மாதுலன்
     மெச்சப்புற் போதுப டாவிய
          திக்குப்பொற் பூதர மேமுதல் ...... வெகுரூபம்

சிட்டித்துப் பூதப சாசுகள்
     கைக்கொட்டிட் டாடம கோததி
          செற்றுக்ரச் சூரனை மார்பக ...... முதுசோரி

கக்கக்கைத் தாமரை வேல்விடு
     செச்சைக்கர்ப் பூரபு யாசல
          கச்சுற்றப் பாரப யோதர ...... முலையாள்முன்

கற்புத்தப் பாதுல கேழையு
     மொக்கப்பெற் றாள்விளை யாடிய
          கச்சிக்கச் சாலையில் மேவிய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

மக்கட்குக் கூற அரிதானது ... மக்களுக்கு இது இத்தன்மையது என
எடுத்துக்கூற அரிதானது,

கற்று எட்டத் தான்முடி யாதது ... கற்ற கல்வியாலும் அதனை எட்ட
முடியாதது,

மற்றொப்புக் கியாதும் ஒவாதது ... மற்றபடி அதற்கு உவமை ஏதும்
ஒவ்வாதது,

மனதாலே மட்டிட்டுத் தேடவொணாதது ... மனதினால் அதை
அளவிட்டுத் தேடி அறியமுடியாதது,

தத்வத்திற் கோவைபடாதது ... எத்தகைய ஆராய்ச்சியிலும் அதனை
வரிசைப்படுத்த முடியாதது,

மத்தப்பொற் போது பகீரதி மதிசூடும் ... ஊமத்தை மலரையும்,
தங்கநிறக் கொன்றை மலரையும், கங்கைநதியையும், பிறைச்சந்திரனையும்
சடையிலே சூடும்

முக்கட்பொற்பாளர் உசாவிய ... முக்கண்ணராகிய அழகிய சிவபிரான்
சொல்லுக என்று கேட்க

அர்த்தக்குப் போதக மானது ... சொல்லப்பட்ட பொருளுக்கு உபதேச
வித்தாக இருப்பது,

முத்திக்குக் காரண மானது ... மோட்சத்துக்குக் காரணமாக இருப்பது,

பெறலாகா முட்டர்க்கெட் டாதது ... பெறுவதற்கு முடியாததாய்,
மூடர்களுக்கு எட்டாததாய் இருப்பது,

நான்மறை யெட்டிற்று எட்டாதெனவேவரு ... நான்கு வேதங்களும்
எட்டுவதற்கு முயன்றாலும், எட்ட முடியாமல் இருக்கும் பொருள் அது,

முற்பட்டப் பாலையி லாவது புரிவாயே ... முதன்மையான
பொருளுக்கும் அப்பாற்பட்ட பொருள் எதுவோ, அதனை எனக்கு
உபதேசித்து அருள்வாயாக.

செக்கட் சக்ராயுத மாதுலன் ... செங்கண்களையும், சக்ராயுதத்தையும்
உடைய தாய்மாமன் திருமால்

மெச்சப்புற் போது படாவிய ... மெச்சிப் புகழும்படியாக, புல்லையும்
மலரையும் பெரிதாகப் படரவிட்டு,

திக்குப்பொற் பூதர மேமுதல் ... திசைகளில் உள்ள பொன் மேரு
மலை முதலாக

வெகுரூபம் சிட்டித்துப் பூதப சாசுகள் ... பலப்பல உருவங்களைச்
சிருஷ்டித்து, பூதங்களும் பேய்களும்

கைக்கொட்டிட் டாட மகோததி செற்று ... கைகொட்டி
ஆடும்படியாக, பெருங்கடலை வற்றடித்து,

உக்ரச் சூரனை மார்பக முதுசோரி கக்க ... கடுமையான
சூரனுடைய மார்பகத்திலிருந்து மிகுந்த இரத்தம் கக்கச்செய்யுமாறு,

கைத் தாமரை வேல்விடு ... தாமரைமலர் போன்ற திருக்கரத்தினின்று
வேலாயுதத்தை விட்ட

செச்சைக்கர்ப்பூர புயாசல ... செஞ்சந்தனமும் பச்சைக் கற்பூரமும்
பூசிய புயமலையை உடையோனே,

கச்சுற்றப் பார பயோதர முலையாள் ... கச்சணிந்த கனமான பால்
ஊறும் மார்பினாளும்,

முன் கற்புத் தப்பாது உலகேழையும் ஒக்கப்பெற்றாள் ... முன்னர்,
கற்புநிலை தவறாமல் ஏழு உலகங்களையும் ஒருங்கே ஈன்றளித்தவளுமான
காமாட்சித் தாயார்

விளை யாடிய கச்சிக்கச் சாலையில் ... திருவிளையாடல்கள் பல
புரிந்த காஞ்சிபுரத்தில் உள்ள கச்சபேசுரம் என்னும் திருத்தலத்தில்

மேவிய பெருமாளே. ... வீற்றிருக்கும் பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.113  pg 2.114  pg 2.115  pg 2.116 
 WIKI_urai Song number: 489 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 347 - makkatkuk kURa (kAnjeepuram)

makkatkuk kURari dhAnadhu
     katrettath thAnmudi yAdhadhu
          matroppuk kiyAdhum ovAdhadhu ...... manadhAlE

mattittuth thEdavo NAdhadhu
     thathvaththiR kOvaipa dAdhadhu
          maththappoR pOdhu bageerathi ...... madhisUdum

mukkatpoR pALaru sAviya
     arththakkup bOdhaga mAnadhu
          mukthikkuk kAraNa mAnadhu ...... peRalAgA

muttark ettAdhadhu nAnmaRai
     yettitr ettAdhena vEvaru
          muRpattap pAlaiyil Avadhu ...... purivAyE

chekkat chakrAyudha mAthulan
     mechchappuR pOdhupa dAviya
          dhikkuppoR bUdhara mEmudhal ...... vegurUpam

chittiththup bUtha pasAsugaL
     kaikkottit Ada mahOdhadhi
          setrugra sUranai mArbaga ...... mudhusOri

kakkakaith thAmarai vElvidu
     sechchaik karppUra buyAsala
          kachchutrap bAra payOdhara ...... mulaiyALmun

kaRpuththap pAdh ulagEzhaiyum
     okkap petrAL viLai yAdiya
          kachchikkach chalaiyil mEviya ...... perumALE.

......... Meaning .........

makkatkuk kURari dhAnadhu: It cannot be explained to other people;

katrettath thAnmudi yAdhadhu: It cannot be attained by any amount of education;

matroppuk kiyAdhum ovAdhadhu: It is incomparable with anything else;

manadhAlE mattittuth thEdavo NAdhadhu: It cannot be measured by the mind nor conceptualised.

thathvaththiR kOvaipa dAdhadhu: It cannot be confined within any series of research or logic;

maththappoR pOdhu bageerathi madhisUdum: He who adorns His tresses with the Umaththai flower, the golden flower of kondRai (Indian laburnum), the river GangA and the crescent moon;

mukkatpoR pALaru sAviya: He who has three eyes and is known as handsome SivA asked You to interpret It;

arththakkup bOdhaga mAnadhu: and It constituted the inner meaning of Your explanation!

mukthikkuk kAraNa mAnadhu: It is the cause of blissful liberation!

peRalAgA muttark ettAdhadhu: It is inaccessible to stupid fools.

nAnmaRai yettitr ettAdhena vEvaru: The four scriptures are trying hard to attain It, but It is still elusive.

muRpattap pAlaiyil Avadhu purivAyE: It is far earlier than the earliest substance; kindly preach It to me!

chekkat chakrAyudha mAthulan: Your maternal uncle, Vishnu, with reddish eyes and the wheel in hand,

mechchappuR pOdhupa dAviya: is full of praise for Your deeds. You made the grass and flowers grow abundantly;

dhikkuppoR bUdhara mEmudhal vegurUpam chittiththu: In every direction, You created, right from the golden mount of Meru, all shapes and forms.

bUtha pasAsugaL kaikkottit Ada: The devils and the ghosts danced, clapping their hands;

mahOdhadhi setru: the vast ocean evaporated;

ugra sUranai mArbaga mudhusOri kakka: the fierce demon, SUran, was hurt in his chest, with blood gushing;

kaith thAmarai vElvidu: when You wielded the spear from Your lotus-like hand,

sechchaik karppUra buyAsala: Oh mighty one with mountain-like shoulders, soaked in thick paste of sandalwood and camphor!

kachchutrap bAra payOdhara mulaiyAL: She is the heavy bosomed one, filled with the milk of Grace,

mun kaRpuththap pAdh ulagEzhaiyum okkap petrAL: and She once delivered the seven worlds simultaneously, by the sheer power of Her chastity;

viLai yAdiya kachchik: and She, Mother Kamakshi, performed so many mystical deeds at this place, KAnchipuram,

kach chalaiyil mEviya perumALE.: in the heart of which is KachchApeswaram, where you reside, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 347 makkatkuk kURa - kAnjeepuram

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]