பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சீபுரம்) திருப்புகழ் உரை 1 OS முக்கண் கொண்ட அழகர் சொல்லுக எனக்கேட்ட பொருளுக்கு உபதேச வித்தாக இருப்பது, மோகூடித்துக்குக் காரணமாக விளங்குவது, பெறுதற்கு முடியாததாய் மூடர்களுக்கு எட்டாததாய் இருப்பது, நான்கு வேதங்களுக்கும் எட்ட முடியவில்லை என்று விளக்கம், உறாத வழியில் முற்பட்டும், முற்பட்ட நிலைக்கு அப்பாலான நிலையில் உள்ளது எதுவோ அந்தப் பொருளை (அடியேனுக்கு) உபதேசித்தருளுக. சிவந்த கண் மலரையும் சக்ராயுதத்தையும் கொண்ட மாமன் மெச்சிப் புகழ, புல்லும் மலரும் (படர)-உள்ள -வியம் (பெரிய) திக்குகளில் உள்ள (பொன்பூதரம்) மேரு முதலான பலப்பல உருவ பேதங்களைப் படைத்துப், பூதங்களும் பேய்களும் கை கொட்டிட்டு (ஆர்ப்பளித்து) ஆட, பெரிய கடலைச் (செற்றும்) அடக்கியும், கொடுமையுடன் எழுந்த சூரனது மார்பிடம் முற்றின ரத்தத்தைச் சொரியவும் செய்த திருக்கரத் தாமரையினின்றும் வேலாயுதத்தைச் செலுத்தின-சந்தனக் குழம்பு-பச்சைக் கற்பூரம் இவைதமைப் பூசியுள்ள திருப்புயங்களை உடையவனே! ரவிக்கை பொருந்தியதும், கனமானதும், பால் கொண்டது. மான கொங்கையைக் கொண்டவளும் முன்பு ஒருநாள் கற்பு நிலை தவறாமல் உலகு ஏழையும் ஒருங்கே ஈன்ற வளுமான (காமாகூதிதேவி) தவஞ்செய்து மகிழ்ந்த கச்சிப் பதியில் கச்சாலை (கச்சபாலயம்) என்ற திருக்கோயிலில் வீற்றிருக்கும் பெருமாளே! (அப்பாலை யிலாவது புரிவாயே) வேதங்கள் ஐயா என ஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே -திருவாசகம்-சிவபுராணம். பெருமறை தேடிய அரும்பொருள்'- திருவாசகம்-அற்புத 3. மறையி லீறுமுன் தொடரொணாத நீ திருவாசகம்-சதகம்-95