திருப்புகழ் 343 சீசி முப்புர  (காஞ்சீபுரம்)
Thiruppugazh 343 cheechimuppura  (kAnjeepuram)
Thiruppugazh - 343 cheechimuppura - kAnjeepuramSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தான தத்தனத் தான தத்தனத்
     தான தத்தனத் தான தத்தனத்
          தான தத்தனத் தான தத்தனத் ...... தனதான

......... பாடல் .........

சீசி முப்புரக் காடு நீறெழச்
     சாடி நித்திரைக் கோசம் வேரறச்
          சீவன் முத்தியிற் கூட வேகளித் ...... தநுபூதி

சேர அற்புதக் கோல மாமெனச்
     சூரி யப்புவிக் கேறி யாடுகச்
          சீலம் வைத்தருட் டேறி யேயிருக் ...... கறியாமற்

பாசம் விட்டுவிட் டோடி போனதுப்
     போது மிப்படிக் காகி லேனினிப்
          பாழ்வ ழிக்கடைக் காம லேபிடித் ...... தடியேனைப்

பார டைக்கலக் கோல மாமெனத்
     தாப ரித்துநித் தார மீதெனப்
          பாத பத்மநற் போதை யேதரித் ...... தருள்வாயே

தேசில் துட்டநிட் டூர கோதுடைச்
     சூரை வெட்டியெட் டாசை யேழ்புவித்
          தேவர் முத்தர்கட் கேத மேதவிர்த் ...... தருள்வோனே

சீர்ப டைத்தழற் சூல மான்மழுப்
     பாணி வித்துருப் பாத னோர்புறச்
          சீர்தி கழ்ப்புகழ்ப் பாவை யீனபொற் ...... குருநாதா

காசி முத்தமிழ்க் கூட லேழ்மலைக்
     கோவ லத்தியிற் கான நான்மறைக்
          காடு பொற்கிரிக் காழி யாருர்பொற் ...... புலிவேளூர்

காள அத்தியப் பால்சி ராமலைத்
     தேச முற்றுமுப் பூசை மேவிநற்
          காம கச்சியிற் சால மேவுபொற் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

சீசி முப்புரக் காடு நீறெழச் சாடி ... சீச்சீ என்று வெறுக்கத்தக்க
தீய திரிபுர மலைகள் போன்ற (ஆணவம், கன்மம், மாயை என்ற)
மும்மலங்களாகிய காடு வெந்து சாம்பலாகும்படி,

நித்திரைக் கோசம் வேரற ... தூக்கமும், ஆன்மாவை
முடிக்கொண்டுள்ள பஞ்ச கோசங்களும்* வேரோடு அற,

சீவன் முத்தியிற் கூடவே ... ஆன்மா முக்தி நிலை அடைந்து
விடுதலை பெற,

களித்து அநுபூதி சேர ... யான் மகிழ்ந்து பேரின்ப
அநுபவத்தைப் பெற,

அற்புதக் கோல மாமென ... அற்புதத் தோற்றம் இது என்று
கூறும்படியாக

சூரியப்புவிக் கேறி யாடுக ... சூரிய மண்டலத்தில் யான் சென்று
அங்கு நடனம் புரிய,

சீலம் வைத்தருள் தேறியேயிருக்க அறியாமல் ... ஒழுக்க
வழியினில் சென்று திருவருளை உணர்ந்து நிலைபெற்றிருக்கத் தெரியாமல்,

பாசம் விட்டுவிட் டோடி போனது ... பாசங்கள் என்னை
விட்டு விலகி மீண்டும் ஓடிவந்து சேரும் நிலை

போது மிப்படிக்கு ஆகிலேன் ... போதும் போதும். இப்படிப்
பாசத்தில் அகப்படும் நிலை எனக்கு வேண்டாம்.

இனிப் பாழ்வழிக்கு அடைக்காமலே ... இனியாகிலும்
இந்தப் பாழும் நெறியில் என்னை அடைத்து வைக்காமல்

பிடித்து அடியேனைப் பார் அடைக்கலக் கோலமாமென ...
என்னைப் பற்றிக்கொண்டு உலகில் எனக்குப் புகலிடமாக
இருக்கும் தோற்றத்தைக் காண்பித்து,

தாபரித்து நித்த ஆரம் ஈதென ... ஆதரவுடன் யான்
நித்தியமான ஓர் ஆபரணத்தை அணிவதற்காக

பாத பத்மநற் போதை யேதரித்தருள்வாயே ... உன்
திருவடியாகிய நற்கமல மலரை என் மீது தரிக்கச் செய்வாயாக.

தேசில் துட்டநிட்டூர ... ஞானம் இல்லாத துஷ்டனும்,
கொடுமை வாய்ந்தவனும்,

கோதுடைச் சூரை வெட்டி ... குற்றங்கள் நிறைந்தவனுமான
சூரனை வெட்டி,

யெட் டாசை யேழ்புவித் தேவர் முத்தர்கட்கு ... எட்டுத்
திசைகளிலும் ஏழுலகிலும் இருக்கும் தேவர்கள், ஜீவன்முக்தரான
அறிஞர்களின்

ஏத மேதவிர்த்தருள்வோனே ... துயரத்தை நீக்கி அருளியவனே,

சீர்ப டைத்தழற் சூல மான்மழுப் பாணி ... தன் திருக்கரங்களில்
சிறப்பு வாய்ந்த நெருப்பு, சூலம், மான், மழு ஆகியவற்றை ஏந்தியவரும்,

வித்துருப் பாதன் ... பவளம் போன்ற சிவந்த பாதங்களை
உடையவருமான சிவபெருமானின்

ஓர்புறச் சீர்தி கழ்ப்புகழ்ப் பாவை யீனபொற் குருநாதா ...
ஒரு பாகத்தில் அமர்ந்த சிறப்புப் பொருந்திய புகழ்த் தேவி பார்வதி
பெற்றெடுத்த அழகிய குருநாதனே,

காசி முத்தமிழ்க் கூட லேழ்மலைக் கோவ லத்தியிற் கான ...
காசி, முத்தமிழ் விளங்கும் மதுரை, ஏழு மலைகளுடைய திருவேங்கடம்,
திருக்கோவலூர், திருவானைக்கா,

நான்மறைக் காடு பொற்கிரிக் காழி யாருர்பொற்
புலிவேளூர்
... நான்கு வேதங்களும் தங்கும் வேதாரணியம், கநகமலை,
சீர்காழி, திருவாரூர், அழகிய சிதம்பரம், புள்ளிருக்கும் வேளூராகிய
வைத்தீசுரன்கோயில்,

காள அத்தியப் பால்சி ராமலை ... திருக்காளத்தி, அதன்பின்
திரிசிராப்பள்ளி முதலிய தலங்களிலும்

தேச முற்றுமுப் பூசை மேவி ... நாடு முழுவதும் மூன்று
காலங்களிலும் வழிபாடு நடத்தப் பெற்று,

நற் காம கச்சியிற் சால மேவுபொற் பெருமாளே. ... நல்ல
காமகோட்டம் என்ற கச்சியில் (காஞ்சீபுரத்தில்) மிகவும் விரும்பி
வீற்றிருக்கும் அழகிய பெருமாளே.


* பஞ்ச கோசங்கள் (ஐந்து உறைகள்):

அன்னமய கோசம் - உணவும் உடலும் கூடியது,
பிராணமய கோசம் - வாக்கு, பாணி, பாதம், மற்றும் கர்மேந்திரியங்கள்
   இவற்றுடன் உயிரும் கூடியது,
மனோமய கோசம் - மனம் மட்டும்,
விஞ்ஞானமய கோசம் - ஐம்பொறிகளும், புத்தியும் கூடியது,
ஆனந்தமய கோசம் - ஆன்மாவுக்கு மிக அருகில் போலி ஆனந்தத்தைத் தருவது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.103  pg 2.104  pg 2.105  pg 2.106 
 WIKI_urai Song number: 485 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 343 - cheechi muppura (kAnjeepuram)

cheechi muppurak kAdu neeRezhach
     chAdi nidhdhiraik kOsam vEraRa
          jeevan mukthiyiR kUdavE kaLiththu ...... anubUthi

sEra aRbudhak kOla mAmena
     sUri yabbuvik kERi yAduga
          seelam vaiththaruL thERi yEyiruk ...... kaRiyAmal

pAsam vittuvit Odi pOnadhup
     pOdhu mippadik kAgi lEninip
          pAzh vazhik adaikkAmalE pidiththu ...... adiyEnaip

pAra daikkalak kOla mAm enath
     thApa riththunith thAra meedhenap
          pAdha padmanaR bOdhaiyE dharith ...... aruLvAyE

dhEsil dhushta nishtUra kOdhudai
     sUrai vettiyet tAsai yEzhbuvith
          dhEvar muththarkat kEdha mEthavirthth ...... aruLvOnE

seerpa daiththazhaR sUla mAn mazhup
     pANi viththurup pAdha nOrpuRa
          seer thigazh pughazh pAvai yeenapoR ...... gurunAtha

kAsi muththamizhk kUda lEzhmalaik
     kOva laththiyiR kAna nAnmaRaik
          kAdu poRkirik kAzhi yArurpoR ...... pulivELUr

kALa hasthi appAl sirAmalai
     dhEsa mutrumup pUjai mEvi naR
          kAma kachchiyiR sAla mEvupoR ...... perumALE.

......... Meaning .........

cheechi muppurak kAdu: Down, down with the three slags (namely, arrogance, karma and delusion) which are the three evil mountains, Thiripuram; these are like wild forests

neeRezhach chAdi: that must be burnt down to ashes;

nidhdhiraik kOsam vEraRa: sleepiness and the five shrouds* that cover the soul will have to be annihilated;

jeevan mukthiyiR kUdavE: the soul must be liberated, attaining eternal bliss;

kaLiththu anubUthi sEra: it should experience rapturous enlightenment;

aRbudhak kOla mAmena sUri yabbuvik kERi yAduga: it should create a wonderful vision of climbing up to the land of the sun and dancing in ecstasy;

seelam vaiththaruL thERi yEyiruk kaRiyAmal: For all that, I have to follow the righteous path and realise Your grace, steadily remaining in tranquility. Not knowing how to accomplish that

pAsam vittuvit Odi pOnadhup: I am being hounded by attachments which seem to go away for some time but return to me with a vengence.

pOdhu mippadik kAgi lEn: I have had it, and enough is enough. I do not want to be subjected to this misery.

inip pAzh vazhik adaikkAmalE pidiththu adiyEnai: Henceforth, please do not thrust me into this disgusting track and kindly take charge of me;

pAra daikkalak kOla mAm enath thApariththu: please be compassionate and bless me with Your vision that is the only salvation for me in this world;

nith thAra meedhenap pAdha padmanaR bOdhaiyE dharith aruLvAyE: and grant me an eternal jewel to wear that is nothing but Your hallowed lotus feet!

dhEsil dhushta nishtUra kOdhudai sUrai vetti: He was an ignorant, wicked and evil one; he was full of blemishes; that SUran was destroyed by You;

yet tAsai yEzhbuvith dhEvar muththarkat kEdha mEthavirthth aruLvOnE: and the celestials and ascetic sages in all the eight directions of the seven worlds were relieved of their miseries by Your grace!

seerpa daiththazhaR sUla mAn mazhup pANi: He (Lord SivA) holds in His hands the eminent fire, a trident, a deer and a pick-axe;

viththurup pAdhan: His feet are red like coral;

OrpuRa seer thigazh pughazh pAvai yeenapoR gurunAtha: on the side of His body, the celebrated Goddess PArvathi DEvi is seated elegantly; and She delivered You, oh handsome Master!

kAsi muththamizhk kUda lEzhmalai: KAsi (Varanasi), Madhurai (famous for the three branches of Tamil), the seven hills (ThiruvEnkatam),

kOva laththiyiR kAna nAnmaRaik kAdu: ThirukkOvalUr, ThiruvAnaikkA, VedAraNyam (the forest of the four vEdAs),

poRkirik kAzhi yArurpoR pulivELUr: Kanagamalai, SeegAzhi, ThiruvArUr, beautiful Chidhambaram,

kALa hasthi appAl sirAmalai: KALahasthi and ThirisirApalli are a few abodes of Yours,

dhEsa mutrumup pUjai mEvi: besides several places throughout the country, where You are worshipped all the three times of the day.

naRkAma kachchiyiR sAla mEvupoR perumALE.: You are seated with relish at the holy place, KAmakOttam in Kacchi (kAnjeepuram), Oh Handsome and Great One!


* The five shrouds (kOsam) are as follows:

annamaya kOsam - consisting of food and the body,
prANamaya kOsam - consisting of active organs like tongue, arms, legs, genitals etc. and life,
manOmaya kOsam - consisting of the mind,
vignAnamaya kOsam - consisting of the sensory organs and intellect,
Anandamaya kOsam - the innermost shroud covering the soul where delusory bliss is experienced.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 343 cheechi muppura - kAnjeepuram

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]