(இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு எனது முக்கியக் குறிப்பைப் படியுங்கள் - நன்றி).
(Please read my important note before using this website - Thank You).
திருப்புகழ் 339 கருமமான பிறப்பற  (காஞ்சீபுரம்)
Thiruppugazh 339 karumamAnapiRappaRa  (kAnjeepuram)
Thiruppugazh - 339 karumamAnapiRappaRa - kAnjeepuramSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

mp3
 
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனன தானன தத்தன தனதன
     தானா தத்தத் ...... தனதான

......... பாடல் .........

கரும மானபி றப்பற வொருகதி
     காணா தெய்த்துத் ...... தடுமாறுங்

கலக காரண துற்குண சமயிகள்
     நானா வர்க்கக் ...... கலைநூலின்

வரும நேகவி கற்பவி பரிதம
     னோபா வத்துக் ...... கரிதாய

மவுன பூரித சத்திய வடிவினை
     மாயா மற்குப் ...... புகல்வாயே

தரும வீம அருச்சுன நகுலச
     காதே வர்க்குப் ...... புகலாகிச்

சமர பூமியில் விக்ரம வளைகொடு
     நாளோர் பத்தெட் ...... டினிலாளுங்

குரும கீதல முட்பட வுளமது
     கோடா மற்க்ஷத் ...... ரியர்மாளக்

குலவு தேர்கட வச்சுதன் மருககு
     மாரா கச்சிப் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

கருமமான பிறப்பற ... வினையின் காரணமாக நேர்ந்த இந்தப் பிறப்பு
தொலைவதற்கு

ஒருகதி காணாது எய்த்துத் தடுமாறும் ... ஒரு வழியும் தெரியாமல்
இளைத்துத் தடுமாறுபவரும்,

கலக காரண துற்குண சமயிகள் ... குழப்பத்தை விளைவிக்கும்
பொல்லாத குணமுடையவருமான சமயவாதிகளின்

நானா வர்க்கக் கலைநூலின் ... பலவிதமான சாஸ்திர நூல்களில்

வரும் அநேக விகற்ப விபரித ... சொல்லப்பட்ட அனேக
மாறுபாடுகள் கொண்டதும், பொருந்தாததுமான

மனோபாவத்துக்கு அரிதாய ... மன உணர்ச்சிக்கு எட்டாததான,

மவுன பூரித சத்திய வடிவினை ... மெளனநிலை, நிறைவு இவற்றைக்
கொண்டதான, உண்மை ஒளியை

மாயா மற்குப் புகல்வாயே ... நான் இறப்பின்றி விளங்குவதற்காக
உபதேசித்து அருள்வாயாக.

தரும வீம அருச்சுன நகுல சகாதேவர்க்குப் புகலாகி ... தருமன்,
வீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் ஆகிய ஐவர்க்கும் பாதுகாப்பு
அளிப்பவனாகி,

சமர பூமியில் விக்ரம வளைகொடு ... போர்க்களத்தில் வெற்றிச்
சங்கை (பாஞ்சஜன்யத்தை) ஊதி,

நாளோர் பத்தெட்டினிலாளும் ... நாள் ஒரு பதினெட்டில் நிகழும் போரில்

குரு மகீதல முட்பட ... குருக்ஷேத்திரம் பாழ்நிலமாக,

உளமது கோடாமல் க்ஷத்ரியர்மாள ... தனது திருவுள்ளம்
கோணாது நெறிமுறையில் நிற்கவும், கெளரவ அரசர்கள் யாவரும் இறந்து
படவும்,

குலவு தேர்கடவு அச்சுதன் மருக ... (அர்ச்சுனனின்) விளக்கமுற்ற
தேரைச் செலுத்திய அச்சுதனின் (திருமாலின்) மருகனே,

குமாரா கச்சிப் பெருமாளே. ... குமாரஸ்வாமியே, காஞ்சீபுரத்துப்
பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.95  pg 2.96  pg 2.97  pg 2.98 
 WIKI_urai Song number: 481 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
திருமதி காந்திமதி சந்தானம்

Mrs Kanthimathy Santhanam
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Mrs Kanthimathy Santhanam

YouTube  'YouTube' Links for this song  
  இப்பாடலுக்கான யூ ட்யூப் பதிவுகள்  

to come வரவிருக்கின்றது

 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 


Song 339 - karumamAna piRappaRa (kAnjeepuram)

karuma mAnapi RappaRa vorukathi
     kANA theyththuth ...... thadumARung

kalaka kAraNa thuRkuNa samayikaL
     nAnA varkkak ...... kalainUlin

varuma nEkavi kaRpavi parithama
     nOpA vaththuk ...... karithAya

mavuna pUritha saththiya vadivinai
     mAyA maRkup ...... pukalvAyE

tharuma veema arucchuna nakulasa
     kAthE varkkup ...... pukalAki

samara pUmiyil vikrama vaLaikodu
     nALOr paththet ...... tinilALung

kuruma keethala mutpada vuLamathu
     kOdA maRkshath ...... riyarmALak

kulavu thErkada vachchuthan marukaku
     mArA kacchip ...... perumALE.

......... Meaning .........

karuma mAnapi RappaRa vorukathi kANAthu: There is no way out to get rid of birth caused by bad deeds;

eyththuth thadumARung: People drifting about unable to find such a way

kalaka kAraNa thuRkuNa samayikaL: and those vicious religious fanatics who are bent upon creating trouble

nAnA varkkak kalainUlin: pursue various religious text books

varuma nEkavi kaRpavi paritha manOpAvaththuk karithAya: in which there are contradictory and incoherent points of view; it is beyond my mental comprehension.

mavuna pUritha saththiya vadivinai: It is tranquil; It is complete and comprehensive; It is the true effulgence;

mAyA maRkup pukalvAyE: kindly preach It to me so that I may remain immortal.

tharuma veema arucchuna nakula sakAthEvarkkup pukalAki: He was the protector of the five PANdavAs, namely, DharmA, Bhima, Arjuna, Nakula and SakAthEva;

samara pUmiyil vikrama vaLaikodu: He blew His triumphant conch (PAnchajanya) in the battlefield;

nALOr paththet tinilALung: in the war that lasted for eighteen days,

kuruma keethala mutpada: the land of Kurukshethra was devastated;

vuLamathu kOdA maR: he stood in the righteous path, without any deviation;

kshathriyar mALak: the kings of the KauravAs were all annihilated;

kulavu thErkada vachchuthan maruka: while He drove the chariot (for Arjuna); You are the nephew of that Lord Vishnu!

kumArA kacchip perumALE.: Oh Lord KumArA! You have Your abode at KAnchipuram, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

mp3
 

Thiru Arunagirinathar's Thiruppugazh - 339 karumamAna piRappaRa - kAnjeepuram


   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  



  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  


... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 


Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

PLEASE do not ask me for songs about other deities or for BOOKS - This is NOT a bookshop - sorry.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

 மேலே   top