திருப்புகழ் 334 தத்தித் தத்தி  (காஞ்சீபுரம்)
Thiruppugazh 334 thaththiththaththi  (kAnjeepuram)
Thiruppugazh - 334 thaththiththaththi - kAnjeepuramSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தத்தத் தத்தத் தத்தத் தத்தத்
     தத்தத் தத்தத் ...... தனதான

......... பாடல் .........

தத்தித் தத்திச் சட்டப் பட்டுச்
     சத்தப் படுமைக் ...... கடலாலே

சர்ப்பத் தத்திற் பட்டுக் கெட்டுத்
     தட்டுப் படுமப் ...... பிறையாலே

சித்தத் துக்குப் பித்துற் றுச்சச்
     சித்ரக் கொடியுற் ...... றழியாதே

செப்பக் கொற்றச் சிற்பப் பத்திச்
     செச்சைத் தொடையைத் ...... தரவேணும்

கொத்துத் திக்குப் பத்துட் புக்குக்
     குத்திக் கிரியைப் ...... பொரும்வேலா

கொச்சைப் பொச்சைப் பொற்பிற் பச்சைக்
     கொச்சைக் குறவிக் ...... கினியோனே

சுத்தப் பத்தத் தர்க்குச் சித்தத்
     துக்கத் தையொழித் ...... திடும்வீரா

சொர்க்கத் துக்கொப் புற்றக் கச்சிச்
     சொக்கப் பதியிற் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

தத்தித் தத்திச் சட்டப்பட்டுச் சத்தப்படு மைக் கடலாலே ...
அலைகள் தாவித் தாவிச் சென்று ஓர் ஒழுங்கு முறையில் ஒலி செய்கின்ற
கரிய நிறக் கடலாலும்,

சர்ப்பத் தத்தில் பட்டுக் கெட்டுத் தட்டுப்படும் அப்
பிறையாலே
... (கிரகணத்தின் போது ராகு கேது எனப்படும்) பாம்பால்
பிடி படுதல் என்னும் ஆபத்தில் அகப்பட்டு, கெடுதல் உற்று தடை
படுகின்ற அந்தச் சந்திரனாலும்,

சித்தத்துக்குப் பித்து உற்று உச்சச் சித்ரக் கொடி உற்று
அழியாதே
... மனதில் மோக வெறி கொண்டு, அதன் அதிகமான
நிலையை இந்த அழகிய கொடி போன்ற பெண் அடைந்து அழிந்து
போகாமல்,

செப்பக் கொற்ற(ம்) சிற்ப(ம்) பத்திச் செச்சைத் தொடையைத்
தர வேணும்
... (உனது) செவ்வையானதும், வீரத்துக்கு அறிகுறியானதும்,
தொழில் திறம் காட்டுவதும், வரிசையாக அமைந்துள்ளதுமான வெட்சி
மாலையைத் தந்தருள வேண்டும்.

கொத்துத் திக்குப் பத்துள் புக்கு குத்திக் கிரியைப் பொரும்
வேலா
... நிறைந்துள்ள பத்துத் திக்குகளிலும் புகுந்து, வேலால் குத்தி,
கிரெளஞ்ச மலையைப் போரில் வென்ற வேலனே,

கொச்சைப் பொச்சைப் பொற்பில் பச்சைக் கொச்சைக்
குறவிக்கு இனியோனே
... மிழற்றும் பேச்சைப் பேசுபவளும், காடு
மலைகளில் இருப்பவளும், அழகிய பச்சை நிறம் கொண்டவளும் ஆகிய
குறப் பெண் வள்ளிக்கு இனியவனே,

சுத்தப் பத்த அத்தர்க்குச் சித்த துக்கத்தை ஒழித்திடும் வீரா ...
பரிசுத்தமான, பக்தியில் உயர்ந்த அன்பர்களுக்கு மனதில் உள்ள
துயரங்களை ஒழிக்கும் வீரனே,

சொர்க்கத்துக்கு ஒப்பு உற்றக் கச்சிச் சொக்கப் பதியில்
பெருமாளே.
... தேவ உலகுக்கு ஒப்பான கச்சி எனப்படும் அழகிய
நகரில் வீற்றிருக்கும் பெருமாளே.


இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் அமைந்தது.
அலைகள், கடல், சந்திரன் முதலியவை தலைவனின் பிரிவுத் துயரால் ஏற்படும்
விரக தாபத்தை மிகவும் அதிகமாக்கும் பொருட்கள்.


இந்தப் பாடலின் சிறப்பு யாதெனில், 2, 4, 6, 8, 10, 12, 14, 16 வது அடிகளை மட்டும்
    பின்வருமாறு வைத்துப் பாடினாலும் சிறப்பான பொருள் சுருக்கமாகப் பெறப்படும்:

சத்தப் படுமைக் ...... கடலாலே

தட்டுப் படுமப் ...... பிறையாலே

சித்ரக் கொடியுற் ...... றழியாதே

செச்சைத் தொடையைத் ...... தரவேணும்

குத்திக் கிரியைப் ...... பொரும்வேலா

கொச்சைக் குறவிக் ...... கினியோனே

துக்கத் தையொழித் ...... திடும்வீரா

சொக்கப் பதியிற் ...... பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.81  pg 2.82  pg 2.83  pg 2.84 
 WIKI_urai Song number: 476 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 334 - thaththith thaththi (kAnjeepuram)

thaththith thaththic cattap pattu
     thap padumaik ...... kadalAlE

sarppath thaththiR pattuk kettuth
     thattup padumap ...... piRaiyAlE

siththath thukkup piththut Rucchac
     cithrak kodiyut ...... RazhiyAthE

seppak kotRac ciRpap paththic
     cecchaith thodaiyaith ...... tharavENum

koththuth thikkup paththut pukkuk
     kuththik kiriyaip ...... porumvElA

kocchaip pocchaip poRpiR pacchaik
     kocchaik kuRavik ...... kiniyOnE

suththap paththath tharkkuc ciththath
     thukkath thaiyozhith ...... thidumveerA

sorkkath thukkop putRak kacchic
     cokkap pathiyiR ...... perumALE.

......... Meaning .........

thaththith thaththic cattap pattu saththappadu maik kadalAlE: Because of the dark sea with waves tossing about in a pattern making a roaring noise,

sarppath thaththiR pattuk kettuth thattup padumap piRaiyAlE: and because of the moon which faces obstruction in its orbit being ensnared (by the two serpents RAhu and KEthu) in an eclipse,

siththath thukkup piththutRu ucchac cithrak kodi yutRazhiyAthE: this beautiful creeper-like belle is overwhelmed by passion in its extreme form; not letting her to be destroyed by that passion,

seppak kotRac ciRpap paththic cecchaith thodaiyaith tharavENum: kindly give her Your reddish garland made of rows of vetchi flowers, that symbolises your victory and displays Your prowess!

koththuth thikkup paththut pukkuk kuththik kiriyaip porumvElA: You attacked the Mount Krouncha from the ten directions, piercing it all over and conquered it with Your spear in the war, Oh Lord!

kocchaip pocchaip poRpiR pacchaik kocchaik kuRavik kiniyOnE: You are the sweetheart of VaLLi, the damsel of the KuRavAs, who has child-like speech, living in the forests and mountains and who has a lovely green complexion!

suththap paththath tharkkuc ciththath thukkath thaiyozhith thidumveerA: You eradicate the grief in the mind of Your devotees who have pure and dedicated devotion, Oh valorous One!

sorkkath thukkop putRak kacchic cokkap pathiyiR perumALE.: This beautiful place Kacchi is comparable to the divine world, and it is Your abode, Oh Great One!


This song is based on the Nayaka-Nayaki Bhavam, where the poet, assuming the heroine's mother's role, expresses the pang of separation from the hero, Murugan.
The sea, the waves and the moon are a few of the things that aggravate the agony of separation.


A special feature of this song is that if one groups lines 2, 4, 6, 8, 10, 12, 14 and 16 only,
    a new song is obtained as follows, conveying the same meaning succinctly:

saththap padumaik ...... kadalAlE

thattup padumap ...... piRaiyAlE

sithrak kodiyut ...... RazhiyAthE

secchaith thodaiyaith ...... tharavENum

kuththik kiriyaip ...... porumvElA

kocchaik kuRavik ...... kiniyOnE

thukkath thaiyozhith ...... thidumveerA

cokkap pathiyiR ...... perumALE.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 334 thaththith thaththi - kAnjeepuram

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]