திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 308 ஈனமிகுத்துள பிறவி (ஆறு திருப்பதி) Thiruppugazh 308 eenamiguththuLapiRavi (AaRu thiruppadhi) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தானதனத் தனதனன ...... தனதான தானதனத் தனதனன ...... தனதான ......... பாடல் ......... ஈனமிகுத் துளபிறவி ...... யணுகாதே யானுமுனக் கடிமையென ...... வகையாக ஞானஅருட் டனையருளி ...... வினைதீர நாணமகற் றியகருணை ...... புரிவாயே தானதவத் தினின்மிகுதி ...... பெறுவோனே சாரதியுத் தமிதுணைவ ...... முருகோனே ஆனதிருப் பதிகமரு ...... ளிளையோனே ஆறுதிருப் பதியில்வளர் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... ஈனமிகுத்துள பிறவி யணுகாதே ... இழிவு மிகுந்துள்ள பிறப்பு மீண்டும் என்னை அணுகாதபடி, யானுமுனக்கு அடிமையென வகையாக ... நானும் உனக்கு அடிமையாகும் பாக்கியத்தைப் பெற ஞானஅருள் தனையருளி ... மெய்ஞ்ஞான அருளைப் புரிந்து, வினைதீர ... அடியேனது வினைகள் அறவே நீங்க, நாணம் அகற்றிய கருணை புரிவாயே ... (வள்ளியிடம் வெட்கத்தை விட்டு வலியச் சென்று ஆட்கொண்டது போல) நாணத்தை நீக்கி நீயே வந்து கருணை புரிவாயாக. தானதவத்தினின்மிகுதி பெறுவோனே ... அடியார்களின் தானத்திலும் தவத்திலும் மேன்மையான பகுதியைப் பெறுபவனே, சாரதியுத்தமி துணைவ முருகோனே ... சரஸ்வதி தேவியாம் உத்தமியின் சகோதரனே*, முருகனே, ஆனதிருப் பதிகம் அருள் இளையோனே ... திருஞானசம்பந்தராக வந்து பல தேவாரத் திருப்பதிகங்களை அருளிச் செய்த இளம்பூரணனே, ஆறுதிருப்பதியில் வளர் பெருமாளே. ... ஆறு படை வீட்டுத்** திருத்தலங்களில் வளர்கின்ற பெருமாளே. |
* முருகனுக்கு பிரமன் மாமன் மகனாதலால் மைத்துனன் உறவு. எனவே சரஸ்வதி சகோதரி உறவு. |
** ஆறு திருப்பதிகள் (படை வீடுகள்): திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், திருவாவினன்குடி, திருவேரகம், குன்றுதோறாடல், பழமுதிர்ச்சோலை என்பன. இத்தலங்கள் திருமுருகாற்றுப்படையில் கூறப்பட்ட முருகவேளின் ஆறு படை வீடுகள். ஆற்றுப்படை வீடு என்பது ஆறுபடை வீடு என மருவி நின்றது. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 1.1119 pg 1.1120 pg 1.1121 pg 1.1122 WIKI_urai Song number: 450 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
'குருஜி' ராகவன் அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள் 'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
திரு அருண் சந்தானம் (அட்லாண்டா) Thiru Arun Santhanam (Atlanta) பாடகர் பக்கத்திற்கு to singer's page |
Song 308 - eenamiguththuLa piRavi (AaRu thiruppadhi) eena miguththuLa piRavi ...... aNugAdhE yAnum unakkadimai yena ...... vagaiyAga nyAna aruLthanai aruLi ...... vinai theera nANam agatriya karuNai ...... purivAyE dhAna thavaththinin migudhi ...... peRuvOnE sAradhi uththami thuNaiva ...... murugOnE Ana thiruppadhigam aruL ...... iLaiyOnE ARu thiruppadhiyil vaLar ...... perumALE. ......... Meaning ......... eena miguththuLa piRavi aNugAdhE: I do not want yet another birth which is so base and mean. yAnum unakkadimai yena vagaiyAga: I want the honour of being in the category of Your slaves serving You alone. nyAna aruLthanai aruLi vinai theera: Please teach me the righteous and true knowledge so that my bondage will be removed. nANam agatriya karuNai purivAyE: You must show me the same unabashed compassion (as You showed to VaLLi)* and take me into Your fold. dhAna thavaththinin migudhi peRuvOnE: From the alms given and penances performed by Your devotees, You take the cream! sAradhi uththami thuNaiva murugOnE: You are the brother of Saraswathi**, the virtuous one! Ana thiruppadhigam aruL iLaiyOnE: All the great Saivaite Hymns (ThEvAram) were composed by You as ThirugnAna SambandhAr! ARu thiruppadhiyil vaLar perumALE.: You have Your abodes at six*** major fortresses, Oh Great One! |
* VaLLi conquered her arrogance by getting rid of egoism and possessiveness. Murugan therefore sought her in an unabashed and compassionate way of His own accord. |
** BrahmA is the first cousin of Murugan who is the nephew of Vishnu. Saraswathi, BrahmA's consort, thus becomes the sister of Murugan. |
*** Six shrines (fortresses-padaiveedu) of Murugan are as follows: ThirupparangkundRam, ThiruchchendhUr, ThiruvAvinankudi (Pazhani), ThiruvEragam (SwAmimalai), kundRudhORAdal (several mounts) and PazhamuthirsOlai. (as described in ThirumurugAtRuppadai, an ancient literature of the Sangam Age). |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |