திருப்புகழ் 306 வஞ்சக லோப மூடர்  (குன்றுதோறாடல்)
Thiruppugazh 306 vanjagalObamUdar  (kundRudhORAdal)
Thiruppugazh - 306 vanjagalObamUdar - kundRudhORAdalSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தந்தன தான தான தந்தன தான தான
     தந்தன தான தான ...... தனதான

......... பாடல் .........

வஞ்சக லோப மூடர் தம்பொரு ளூர்கள் தேடி
     மஞ்சரி கோவை தூது ...... பலபாவின்

வண்புகழ் பாரி காரி யென்றிசை வாது கூறி
     வந்தியர் போல வீணி ...... லழியாதே

செஞ்சர ணாத கீத கிண்கிணி நீப மாலை
     திண்டிறல் வேல்ம யூர ...... முகமாறும்

செந்தமிழ் நாளு மோதி உய்ந்திட ஞான மூறு
     செங்கனி வாயி லோர்சொ ...... லருள்வாயே

பஞ்சவ னீடு கூனு மொன்றிடு தாப மோடு
     பஞ்சற வாது கூறு ...... சமண்மூகர்

பண்பறு பீலி யோடு வெங்கழு வேற வோது
     பண்டித ஞான நீறு ...... தருவோனே

குஞ்சரம் யாளி மேவு பைம்புன மீது லாவு
     குன்றவர் சாதி கூடி ...... வெறியாடிக்

கும்பிட நாடி வாழ்வு தந்தவ ரோடு வீறு
     குன்றுதோ றாடல் மேவு ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

வஞ்சக லோப மூடர் ... வஞ்சகக் குணத்தையும், ஈயாத தன்மையையும்
கொண்ட மூடர்களின்

தம்பொரு ளூர்கள் தேடி ... பொருளுக்காக அவர்களின் ஊர்களைத்
தேடிச் சென்று

மஞ்சரி கோவை தூது பலபாவின் ... மஞ்சரி, கோவை, தூது
முதலிய தமிழ் இலக்கியத்தின் பல பாடல்களில்

வண்புகழ் பாரி காரி யென்றிசை வாது கூறி ... பெரும்புகழ்
கொண்ட பாரியே, காரியே என அவர்களைப் புகழ்ந்து வாதித்துக் கூறி,

வந்தியர் போல வீணிலழியாதே ... வந்தித்துப் பாடுபவர்களைப்
போல் வீணுக்கு அழிந்திடாமல்,

செஞ்சரண் நாத கீத கிண்கிணி நீப மாலை ... சிவந்த
திருப்பாதங்களையும், இனிய ஓசையை உடைய கிண்கிணியையும்,
கடப்பமலர் மாலையையும்,

திண்டிறல் வேல்மயூர முகமாறும் ... உறுதியான வலிய
வேலினையும், மயிலையும், ஆறு திருமுகங்களையும்,

செந்தமிழ் நாளு மோதி உய்ந்திட ... செழுமையான தமிழ்ப்
பாட்டுக்களால் தினமும் பாடி வாழ்வுற

ஞானமூறு செங்கனி வாயிலோர்சொல் அருள்வாயே ... ஞானம்
சுரக்கும் சிவந்த கோவைக்கனி போன்ற திருவாயால் ஒரு திருமொழியை
அருளிச்செய்வாயாக.

பஞ்சவன் நீடு கூனும் ஒன்றிடு தாபமோடு ... பாண்டியனின்
மிகுந்து வளைந்த கூனையும், நீங்காத காய்ச்சலையும் நீங்கச்செய்தும்,

பஞ்சற வாது கூறு சமண்மூகர் ... கிளிப்பிள்ளை போல் கூறியதே
கூறி வாதிடும் சமணர்களாகிய ஊமைகள்

பண்பறு பீலி யோடு வெங்கழு வேற ... அழகற்ற மயிற்பீலியோடு
கொடிய கழுவில் ஏறச் செய்தும்,

ஓது பண்டித ஞான நீறு தருவோனே ... பதிகங்களைப் பாடி
அருளிய பண்டிதனே, ஞானத் திருநீற்றை தந்தருளிய
திருஞானசம்பந்தனே,

குஞ்சரம் யாளி மேவு பைம்புன மீது லாவு ... யானைகளும்,
யாளிகளும் வசிக்கும் பசுமையான தினைப்புனக் கொல்லையிலே
திரிகின்ற

குன்றவர் சாதி கூடி வெறியாடி ... வேடர் கூட்டங்கள் ஒன்று
கூடி வெறி ஆட்டம் ஆடி

கும்பிட நாடி வாழ்வு தந்தவ ரோடு ... உன்னை வணங்க, அவர்கள்
விரும்பும் உலக வாழ்வை நல்கி

வீறு குன்றுதோ றாடல் மேவு பெருமாளே. ... பெருமைமிக்குச்
சிறந்து, மலைகளில் எல்லாம் திருவிளையாடல்கள் புரியும் பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.565  pg 1.566  pg 1.567  pg 1.568 
 WIKI_urai Song number: 236 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 0306 - vanjaga lOba mUdar (kundRudhORAdal)

vanjaga lOba mUdar thamporu LUrgaL thEdi
     manjari kOvai dhUdhu ...... palapAvin

vaNpugazh pAri kAri endrisai vAdhu kURi
     vandhiyar pOla veeNil ...... azhiyAdhE

senchara NAdha geetha kiNkiNi neeba mAlai
     thiNdiRal vElma yUra ...... mugamARum

senthamizh nALu mOdhi uyndhida nyAna mURu
     sengkani vAyil Orsol ...... aruLvAyE

panjava needu kUnum ondridu thApa mOdu
     panjaRa vAdhu kURu ...... samaNmUgar

paNbaRu peeli yOdu vengkazhu vEra Odhu
     paNditha nyAna neeRu ...... tharuvOnE

kunjaram yALi mEvu paimpuna meedhu lAvu
     kundravar jAdhi kUdi ...... veRiyAdik

kumbida nAdi vAzhvu thandhava rOdu veeRu
     kundrutho RAdal mEvu ...... perumALE.

......... Meaning .........

vanjaga lOba mUdar thamporu LUrgaL thEdi: Going after the money of rich misers who are foolish and deceitful,

manjari kOvai dhUdhu palapAvin: people sing a variety of Tamil literary compositions such as Manjari, Kovai and ThUthu,

vaNpugazh pAri kAri endrisai vAdhu kURi: in a flattering way, comparing them with renowned kings, PAri and KAri (who are great givers)

vandhiyar pOla veeNil azhiyAdhE: as if they are to be worshipped! Not wasting my time in this vain sycophancy,

senchara NAdha geetha kiNkiNi neeba mAlai: (I would like to sing about) Your reddish lotus feet, the sweetly jingling anklets, Your garland of kadappa flowers,

thiNdiRal vElma yUra mugamARum: strong and powerful spear, Peacock and six holy faces,

senthamizh nALu mOdhi uyndhida: in chaste Tamil language, every day, leading to my well-being.

nyAna mURu sengkani vAyil Orsol aruLvAyE: To accomplish this, kindly bless me with a gracious word from Your reddish fruit-like mouth an oracle, that is the source of Wisdom!

panjava needu kUnum ondridu thApa mOdu: PANdiya King's hunchback and his high fever were simultaneously cured;

panjaRa vAdhu kURu samaNmUgar: the dumb SamaNa priests, who were known to be argumentative and repetitive, echoing like a parrot,

paNbaRu peeli yOdu vengkazhu vEra Odhu: went to the gallows, in disgrace, with their peacock feathers intact (after losing their debate);

paNditha nyAna neeRu tharuvOnE: You came as the wise man, ThirugnAna Sambandhar singing the hymns, and distributed the holy ash of True Knowledge to all!

kunjaram yALi mEvu paimpuna meedhu lAvu: In this greenish millet field, where many elephants and yALis (lion-elephants) roam about,

kundravar jAdhi kUdi veRiyAdi: the hunter tribes assemble and dance in frenzied ecstasy;

kumbida nAdi vAzhvu thandhava rOdu veeRu: and then they worship You seeking a blissful life. You grant their boons, standing tall in their esteem!

kundrutho RAdal mEvu perumALE.: You play around in all mountains with relish, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 306 vanjaga lOba mUdar - kundRudhORAdal

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]