திருப்புகழ் 305 தறையின் மானுடர்  (குன்றுதோறாடல்)
Thiruppugazh 305 thaRaiyinmAnudar  (kundRudhORAdal)
Thiruppugazh - 305 thaRaiyinmAnudar - kundRudhORAdalSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனன தானன தானன தானன
     தனன தானன தானன தானன
          தனன தானன தானன தானன தந்ததான

......... பாடல் .........

தறையின் மானுட ராசையி னால்மட
     லெழுது மாலருள் மாதர்கள் தோதக
          சரசர் மாமல ரோதியி னாலிரு ...... கொங்கையாலுந்

தளர்மி னேரிடை யாலுடை யால்நடை
     யழகி னால்மொழி யால்விழி யால்மருள்
          சவலை நாயடி யேன்மிக வாடிம ...... யங்கலாமோ

பறவை யானமெய்ஞ் ஞானிகள் மோனிக
     ளணுகொ ணாவகை நீடுமி ராசிய
          பவன பூரக வேகிக மாகிய ...... விந்துநாதம்

பகரொ ணாதது சேரவொ ணாதது
     நினையொ ணாதது வானத யாபர
          பதிய தானச மாதிம னோலயம் ...... வந்துதாராய்

சிறைவி டாதநி சாசரர் சேனைகள்
     மடிய நீலக லாபம தேறிய
          திறல்வி நோதச மேளத யாபர ...... அம்புராசித்

திரைகள் போலலை மோதிய சீதள
     குடக காவிரி நீளலை சூடிய
          திரிசி ராமலை மேலுறை வீரகு ...... றிஞ்சிவாழும்

மறவர் நாயக ஆதிவி நாயக
     ரிளைய நாயக காவிரி நாயக
          வடிவி னாயக ஆனைத னாயக ......எங்கள்மானின்

மகிழு நாயக தேவர்கள் நாயக
     கவுரி நாயக னார்குரு நாயக
          வடிவ தாமலை யாவையு மேவிய ...... தம்பிரானே.

......... சொல் விளக்கம் .........

தறையின் மானுடர் ஆசையினால் மடல் எழுது(ம்) மால்அருள்
மாதர்கள்
... இந்தப் பூமியில் மக்கள் காம ஆசையால் மடல்* எழுதக்
கூடிய அளவுக்கு (அவர்களுக்கு) மயக்கத்தைத் தருகின்ற
விலைமாதர்கள்,

தோதக சரசர் மா மலர் ஓதியினால் இரு கொங்கையாலும் ...
வஞ்சனையுடன் காம லீலை செய்பவர்கள், நல்ல பூக்கள் கொண்டு
விளங்கும் கூந்தலாலும், இரண்டு மார்புகளாலும்,

தளர் மின் நேர் இடையால் உடையால் நடை அழகினால்
மொழியால் விழியால்
... தளர்ச்சியைக் காட்டும், மின்னலுக்கு ஒப்பான,
இடையாலும், உடுத்துள்ள ஆடையாலும், நடை அழகினாலும், பேசும்
இனிய பேச்சினாலும், கண்களாலும்,

மருள் சவலை நாய் அடியேன் மிக வாடி மயங்கலாமோ ...
மயக்கம் கொள்ளும் சவலைப் பிள்ளையைப்போல, நாயினும் கீழான
அடியேன், மிகவும் வாடி மயக்கம் கொள்ளலாமோ?

பறவையான மெய் ஞானிகள் மோனிகள் ... (ஓரிடத்தில் தங்காது)
பறவைபோல எங்கும் திரிந்து உலாவும் உண்மையான ஞானிகளும்,
மெளன நிலை கண்டவர்களும்,

அணுக ஒணா வகை நீடும் இராசிய(ம்) ... அணுகுதற்குக்
கூடாததாய் விலகி விளங்கும் இரகசியம்,

பவன பூரக(ம்) ஏகிகமாகிய விந்து நாதம் ... காற்றை (மூச்சை)
பூரகமாக** அடக்குவதால் (பிராணாயாமத்தால்) ஒன்றுபடக் கூடிய
சிவசக்தி தத்துவ ஒலியாய் விளங்குவதும்,

பகர ஒணாதது சேர ஒணாதது நினை ஒணாததுவான ...
சொல்ல முடியாததும், அடைய முடியாததும், நினைக்கவும்
முடியாததுமான

தயாபர பதியது ஆன சமாதி மனோலயம் வந்து தாராய் ...
கருணைப் பரம் பொருளாய், மூலப் பொருளான மனதை ஒடுக்கும்
சமாதி நிலைப் பேற்றை நீ வந்து (எனக்குத்) தந்து அருள வேண்டும்.

சிறை விடாத நிசாசரர் சேனைகள் மடிய நீல கலாபம்
அது ஏறிய
... (தேவர்களுடைய) சிறையை விடாத அசுரர்களின்
படைகள் இறக்கும்படியாக, நீல நிறங் கொண்ட மயிலின் மேல்
ஏறி வரும்

திறல் விநோத சமேள தயாபர ... வல்லமை கொண்ட விநோதனே,
கருணை கலந்த மூர்த்தியே,

அம்புராசி திரைகள் போல் அலை மோதிய சீதள குடக
காவிரி நீள் அலை சூடிய
... கடலின் பெரிய அலைகளைப்போல்
அலைமோதி வரும் குளிர்ந்த நீருடன், குடகு நாட்டிலிருந்து வரும்
காவிரி ஆற்றின் பெரிய அலைகளைக் கொண்ட

திரிசிரா மலை மேல் உறை வீர ... திரிசிரா மலையில் வீற்றிருக்கும்
வீரனே,

குறிஞ்சி வாழும் மறவர் நாயக ஆதி விநாயகர் இளைய
நாயக காவிரி நாயக
... மலை நிலத்தில் வாழும் வேடர்களின்
நாயகனே, ஆதி கணபதிக்குத் தம்பியாகிய நாயகனே, காவிரிக்கு
நாயகனே,

வடிவின் நாயக ஆனை தன் நாயக எங்கள் மானின்
மகிழு(ம்) நாயக தேவர்கள் நாயக
... அழகுக்கு ஒரு நாயகனே,
தேவயானைக்கு நாயகனே, எங்கள் மான் போன்ற வள்ளி
நாயகியிடத்தே மகிழும் நாயகனே, அமரர்கள் நாயகனே,

கவுரி நாயகனார் குரு நாயக ... பார்வதியின் நாயகனான
சிவபெருமானுக்கு குரு மூர்த்தியே,

வடிவதாம் மலை யாவையு(ம்) மேவிய தம்பிரானே. ... அழகிய
மலைகள் எல்லாவற்றிலும் வீற்றிருந்து அருளும் தம்பிரானே.


* மடல் எழுதுதல்:

தலைவன் தலைவியின் அழகை வர்ணித்து ஓர் ஏட்டில்
மடலாக எழுதி அவளது ஊருக்குச் சென்று நாற்சந்தியில் ஒன்றும் பேசாமல்
ஒருவரது வசைக்கும் கூசாமல் படத்தில் எழுதிய உருவத்தைப் பார்த்தவாறு
பகலும் இரவுமாக நிற்பான். அவனது உறுதிகண்டு தலைவியின் வீட்டார்
தலைவனுக்கு அவளை மணம் செய்து வைப்பர். முருகன் வள்ளியை ஊரறிய
மடல் எழுதி மணம் செய்துகொண்ட காட்சி கந்த புராணத்தில் வருகிறது.


** இங்கு சிவயோக முறைகள் விளக்கப்பட்டுள்ளன. அதன் சுருக்கம் வருமாறு:

நாம் உள்ளுக்கு இழுக்கும் காற்றுக்குப் 'பூரகம்' என்றும், வெளிவிடும் காற்றுக்கு
'ரேசகம்' என்றும் பெயர். உள்ளே நிறுத்திவைக்கப்படும் காற்றுக்கு 'கும்பகம்' என்று
பெயர். உட் கொள்ளும் பிராணவாயு உடலில் குறிப்பிட்ட 'ஆதாரங்கள்' (நிலைகள்,
சக்கரங்கள்) மூலமாகப் படிப்படியாகப் பரவி, மேல் நோக்கிச் சென்று, தலையில் 'பிரம
கபால'த்தில் உள்ள 'ஸஹஸ்ராரம்' (பிந்து சக்கரம்) என்ற சக்கரத்துக்குச் செல்லும்.
இந்த ஐக்கியம் ஏற்படும்போது, அமுத சக்தி பிறந்து, ஆறு ஆதாரங்களுக்கும்
ஊட்டப்பட்டு, மீண்டும் அதே வழியில் 'மூலாதார'த்தை வந்து அடையும். இந்த
ஆதாரங்களை ஒழுங்கு படுத்தும் வகையில் மூன்று 'மண்டல'ங்களும் (அக்கினி,
ஆதித்த, சந்திர மண்டலங்கள்), பத்து 'நாடி'களும் (இடைகலை, பிங்கலை,
சுழுமுனை முதலியன) உள்ளன.

'இடைகலை' பத்து நாடிகளுள் ஒன்று. இடது நாசியால் விடும் சுவாசம்.

'பிங்கலை' பத்து நாடிகளுள் ஒன்று. வலது நாசி வழியால் விடும் சுவாசம்.

'சுழு முனை' இடைகலைக்கும் பிங்கலைக்கும் இடையில் உள்ளது.

'சுழு முனை' ஆதாரம் ஆறிலும் ஊடுருவி நிற்பது. 'இடைகலை'யும், 'பிங்கலை'யும்
ஒன்றுக்கொன்று பின்னி நிற்பன.

சுவாச நடப்பை 'ப்ராணாயாமம்' என்ற யோக வன்மையால் கட்டுப்படுத்தினால்
மன அமைதி ஏற்படும்.


ஆதாரங்களின் பெயர்களும், உடலில் இருக்கும் இடம், உரிய ஐம்பூதங்கள், அனுட்டிக்கும்போது மலர் வடிவங்களின் அமைப்பு, அக்ஷரக் குறிப்பு ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆதாரங்களுக்கு உரிய தலங்கள், கடவுளர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
ஆதாரம்

மூலாதாரம்


சுவாதிஷ்டானம்மணிபூரகம்அநாகதம்விசுத்திஆக்ஞா


பிந்து சக்கரம்
(துவாதசாந்தம்,
ஸஹஸ்ராரம்,
பிரமரந்திரம்)
இடம்

குதம்


கொப்பூழ்மேல்வயிறுஇருதயம்கண்டம்புருவத்தின் நடு


கபாலத்தின்
மேலே


பூதம்

மண்


அக்கினிநீர்காற்றுஆகாயம்மனம்


வடிவம்

4 இதழ் கமலம்
முக்கோணம்

6 இதழ் கமலம்
லிங்கபீடம்
நாற் சதுரம்

10 இதழ் கமலம்
பெட்டிப்பாம்பு
நடு வட்டம்

12 இதழ் கமலம்
முக்கோணம்
கமல வட்டம்

16 இதழ் கமலம்
ஆறு கோணம்
நடு வட்டம்

3 இதழ் கமலம்


1008
இதழ் கமலம்


அக்ஷரம்

ஓம்


ந(கரம்)ம(கரம்)சி(கரம்)வ(கரம்)ய(கரம்)


தலம்

திருவாரூர்


திருவானைக்காதிரு(வ)
அண்ணாமலை


சிதம்பரம்திருக்காளத்திகாசி
(வாரணாசி)

திருக்கயிலை
கடவுள்

விநாயகர்


பிரமன்திருமால்ருத்திரன்மகேசுரன்சதாசிவன்


சிவ . சக்தி
ஐக்கியம்  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.563  pg 1.564  pg 1.565  pg 1.566 
 WIKI_urai Song number: 235 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 305 - thaRaiyin mAnudar (kundRudhORAdal)

thaRaiyin mAnuda rAsaiyi nAlmadal
     ezhudhu mAlaruL mAdhargaL thOdhaga
          sarasar mAmala rOdhiyi nAliru ...... kongaiyAlun

thaLarmi nEr idaiyAl udaiyAl nadai
     azhaginAl mozhiyAl vizhiyAl maruL
          savalai nAy adiyEn miga vAdi ...... mayangalAmO

paRavai Anamey gnAnikaL mOnikaL
     aNugoNA vagai needumi rAsiya
          pavana pUraga vEgika mAgiya ...... vindhunAdham

pagaro NAdhadhu sEravo NAdhadhu
     ninaiyo NAdhadhu vAna dhayApara
          pathiya dhAna samAdhi manOlayam ...... vandhuthArAy

siRai vidAdha nisAcharar sEnaigaL
     madiya neela kalApama dhERiya
          thiRal vinOdha samELa dhayApara ...... amburAsith

thiraigal pOlalai mOdhiya seethaLa
     kudaga kAviri neeLalai sUdiya
          thirisi rAmalai mEluRai veera ...... kuRinjivAzhum

maRavar nAyaka Adhi vinAyagar
     iLaiya nAyaka kAviri nAyaka
          vadi vinAyaga Anaitha nAyaka ...... engaLmAnin

magizhu nAyaka dhEvargaL nAyaka
     gavuri nAyaka nArguru nAyaka
          vadiva dhAmalai yAvaiyu mEviya ...... thambirAnE.

......... Meaning .........

thaRaiyin mAnuda rAsaiyi nAlmadal ezhudhu mAlaruL mAdhargaL: In this world, these whores are capable of provoking so much passion in men that, out of lust, they even resort to doodling on palm leaves*;

thOdhaga sarasar mAmala rOdhiyi nAliru kongaiyAlun: these women are treacherous in their teasing love-play; they display their beautiful hair adorned with pretty flowers and their bosom;

thaLarmi nEr idaiyAl udaiyAl nadai azhaginAl mozhiyAl vizhiyAl: their slender waists like the flashes of lightning; their delicate clothings; their gaits with a lilt; their sweet talk and beautiful eyes;

maruL savalai nAy adiyEn miga vAdi mayangalAmO: - all these have left me, the lowly dog, dazed like a little baby; should I be so inebriated?

paRavai Anamey gnAnikaL mOnikaL: Those nomadic sages who move around from place to place like birds and those who have realised through silence

aNugoNA vagai needumi rAsiya: are incapable of approaching this mystery that is conspicuously detached

pavana pUraga vEgika mAgiya vindhunAdham: and that which manifests in the sound of Siva-Sakthi union achievable by holding the inhaled air (pUragam)** through breath-control methods (PrANAyAmam);

pagaro NAdhadhu sEravo NAdhadhu ninaiyo NAdhadhu vAna: that which is undescribable, unattainable and unimaginable;

dhayApara pathiya dhAna samAdhi manOlayam vandhuthArAy: that which is full of compassion, primordial and capable of holding my mind in a state of samAdhi (which is at the peak of the kundalini zones, namely sahasrAra)***; kindly come and deliver that bliss to me!

siRai vidAdha nisAcharar sEnaigaL madiya neela kalApama dhERiya thiRal vinOdha samELa dhayApara: You mounted the blue peacock and fought with the demons who were holding the celestials in prison and killed their entire armies, Oh Wonderful, Powerful and Compassionate One!

amburAsith thiraigal pOlalai mOdhiya seethaLa kudaga kAviri: This cool river KAvEri coming from the Coorg (Kudagu) region has large waves thumping like the sea waves;

neeLalai sUdiya thirisi rAmalai mEluRai veera: You are the valorous One residing in ThirisirAmalai lashed by those waves!

kuRinjivAzhum maRavar nAyaka Adhi vinAyagar iLaiya nAyaka kAviri nAyaka: You are the leader of all hunters living in mountainous regions (kuRinji); You are the younger brother of the primordial Lord GaNapathi; and You are the Lord of River KAvEri!

vadi vinAyaga Anaitha nAyaka engaLmAnin magizhu nAyaka dhEvargaL nAyaka: You are the Leader par excellence in handsomeness; You are the Consort of DEvayAnai; You are also the Consort of, and reveller in, our dear VaLLi, the deer-like damsel; You are the Master of all the celestials!

gavuri nAyaka nArguru nAyaka: You are the Master of Lord SivA, the Consort of Mother Gowri;

vadiva dhAmalai yAvaiyu mEviya thambirAnE.: You relish in setting up Your abode in all beautiful mountains, Oh Great One!


* madal - is a type of palm leaf used as a canvas on which Murugan drew the descriptive picture of VaLLi and went alone to VaLLimalai. There, He chose a junction of four streets and stood staring at the picture day in and day out, oblivious of other peoples' comments and jeers. Ultimately, VaLLi's people were so moved by Murugan's devotion that they decided to formally give VaLLi in marriage to Murugan - according to Kandha PurANam.


** In this song, several Siva-yOgA principles are explained:

The inhaled air is known as 'pUragam' and the exhaled air is 'rechagam'. The retained air is 'kumbagam'. The oxygen that enters the body climbs up step by step through several centres, known as 'chakrAs' and ultimately reaches 'sahasrAram' or 'bindhuchakram' on the top of the skull. At that point of union, nectar flows from that chakrA and seeps through and soaks the six centres of the body and returns to the basic chakrA, 'mUlAthAram'. Three zones (namely, the sun zone, the moon zone and the fire zone) and ten nerves ('nAdis') govern the six centres; the principal nerves are 'susumna', 'idaikala' and 'pingala'.

idakala: one of the ten 'nAdis' (nerves), when inhalation takes place through the left nostril;
pingala: one of the ten 'nAdis' (nerves), when inhalation takes place through the right nostril;
susumna: one of the ten 'nAdis' (nerves), situated between the above two 'nadis', and running through the spinal chord covering all the six centres of 'kundalini'. ('idakala' and 'pingala' are entwined around 'susumna').

If breathing is controlled through a yOgA called 'praNAyAmA', the mind becomes tranquil.


The names of the chakrA centres, the deities, the elements, the zones of the body where they are located, the shape of the chakrAs, the description of the flowers in the chakrAs, the letters of the ManthrA governing them and the temple-towns representing them are given in the following chart:

ChakrA

mUlAthAram


swAthishtAnammaNipUragamanAgathamvisudhdhiAgnyA


Bindu chakkaram
(DhwAdhasAntham,
SahasrAram,
Brahma-ranthiram)

Body Zone

Genitals


Belly-buttonUpper bellyHeartThroatBetween the
eyebrows

Over
the skullElement

Earth


FireWaterAirSkyMind


Shape

4-petal lotus
Triangle

6-petal lotus
Lingam
Square

10-petal lotus
cobra in box
central circle

12-petal lotus
Triangle
lotus circle

16-petal lotus
Hexagon
central circle

3-petal lotus


1008-petal
lotus


Letter

Om


namasivaya


Temple

ThiruvArUr


ThiruvAnaikkAThiru
aNNAmalai


ChidhambaramThirukkALaththiVaranAsi
(kAsi)

Mt. KailAshDeity

VinAyagar


BrahmAVishnuRUdhranMahEswaranSathAsivan


Siva-Sakthi
Union


தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 305 thaRaiyin mAnudar - kundRudhORAdal

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]