திருப்புகழ் 291 முகத்தை மினுக்கி  (திருத்தணிகை)
Thiruppugazh 291 mugaththaiminukki  (thiruththaNigai)
Thiruppugazh - 291 mugaththaiminukki - thiruththaNigaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனத்தன தத்தன தனதன தனதன
     தனத்தன தத்தன தனதன தனதன
          தனத்தன தத்தன தனதன தனதன ...... தனதான

......... பாடல் .........

முகத்தைமி னுக்கிக ளசடிகள் கபடிகள்
     விழித்தும ருட்டிகள் கெருவிகள் திருடிகள்
          மொழிக்குள்ம யக்கிகள் வகைதனில் நகைதனில் ...... விதமாக

முழித்தும யற்கொளு மறிவிலி நெறியிலி
     புழுக்குட லைப்பொரு ளெனமிக எணியவர்
          முயக்கம டுத்துழி தருமடி யவனிடர் ...... ஒழிவாக

மிகுத்தழ கைப்பெறு மறுமுக சரவண
     புயத்திள கிக்கமழ் நறைமலர் தொடைமிக
          விசைக்கொடு மைப்பெறு மரகத கலபியும் ...... வடிவேலும்

வெளிப்படெ னக்கினி யிரவொடு பகலற
     திருப்பதி யப்புக ழமுதியல் கவிசொலி
          விதித்தனெ ழுத்தினை தரவரு மொருபொரு ...... ளருளாயோ

புகைத்தழ லைக்கொடு திரிபுர மெரிபட
     நகைத்தவ ருக்கிட முறைபவள் வலைமகள்
          பொருப்பிலி மக்கிரி பதிபெறு மிமையவ ...... ளபிராமி

பொதுற்றுதி மித்திமி நடமிடு பகிரதி
     எழுத்தறி ருத்திரி பகவதி கவுரிகை
          பொருட்பய னுக்குரை யடுகிய சமைபவள் ...... அமுதாகச்

செகத்தைய கட்டிடு நெடியவர் கடையவள்
     அறத்தைவ ளர்த்திடு பரசிவை குலவதி
          திறத்தமி ழைத்தரு பழையவ ளருளிய ...... சிறியோனே

செருக்கும ரக்கர்கள் பொடிபட வடிவுள
     கரத்தில யிற்கொடு பொருதிமை யவர்பணி
          திருத்தணி பொற்பதி தனில்மயில் நடவிய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

முகத்தை மினுக்கிகள் அசடிகள் கபடிகள் விழித்து மருட்டிகள்
கெருவிகள் திருடிகள் மொழிக்குள் மயக்கிகள்
... முகத்தை
மினுக்குபவர்கள். முட்டாள்கள். வஞ்சகர்கள். கணகளால் விழித்துப்
பார்த்து மருட்டுபவர்கள். கர்வம் கொண்டவர்கள். திருடிகள். பேச்சால்
மயக்குபவர்கள்.

வகை தனில் நகை தனில் விதமாக முழித்து மயல்
கொ(ள்)ளும் அறிவிலி நெறியிலி புழுக் குடலைப் பொருள்
என மிக எ(ண்)ணியவர் முயக்கம் அடுத்து உழிதரும் அடியவன்
இடர் ஒழிவாக
... உபாயத்திலும் சிரிப்பிலும் ஒரு வகையாக
செய்வதறியாமல் திகைத்து, மோகம் கொண்ட அறிவில்லாதவன் நான்.
ஒழுக்கம் இல்லாதவன். புழுக்கள் உள்ள குடலை (உடலை) ஒரு
பொருட்டாக மிகவும் நினைத்து அந்தப் பொது மகளிரைத்
தழுவுவதற்காக அடுத்து, திரிகின்ற அடியேனுடைய துன்பங்கள் நீங்க,

மிகுத்த அழகைப் பெறும் அறுமுக சரவண புயத்து இளகிக்
கமழ் நறை மலர் தொடை மிக விசைக் கொடுமைப் பெறு
மரகத கலபியும் வடிவேலும் வெளிப்பட எனக்கு
... மிகுந்த
அழகைப் பெற்ற ஆறுமுகனே, சரவணனே, உனது திருப்புயங்களில்
நெகிழ்வுற்று மணம் வீசும் தேன் நிறைந்த பூ மாலையும், மிக
வேகமாகச் செல்லும் உக்ரமான பச்சை நிற மயிலும், கூரிய வேலும்
வெளிப்பட்டு என் முன்னே தோன்ற,

இனி இரவொடு பகல் அற திருப் பதியப் புகழ் அமுது இயல்
கவி சொ(ல்)லி விதித் தன் எழுத்து இனை தர வரும் ஒரு
பொருள் அருளாயோ
... இரவு, பகல் என்னும் வேற்றுமை அற்று சுத்த
அருள் நிலை உற, லக்ஷ்மிகரம் அழுத்தமாகப் பொருந்த, உனது
திருப்புகழை அமுது பொருந்தும் பாடல்களாகப் பாடி, பிரமன் எழுதிய
எழுத்து மெலிந்து அழிந்திட, மேம்பட்டு விளங்கும் ஒப்பற்ற பொருளை
உபதேசித்து அருள்வாயாக.

புகைத்த அழலைக் கொ(ண்)டு திரி புரம் எரி பட
நகைத்தவருக்கு இடம் உறைபவள் வலை மகள் பொருப்பில்
இமக் கிரி பதி பெறும் இமையவள் அபிராமி
... புகை தரும்
நெருப்பினால் முப்புரங்கள் எரிபட்டு அழியும்படி சிரித்தவருடைய
இடது பாகத்தில் வீற்றிருப்பவள், வலைஞர் மகளாக* (மீனவப்
பெண்ணாகத்) தோன்றியவள், மலைகளுள் சிறந்த இமயமலை
அரசன் பெற்ற இமயவல்லி, அபிராமி,

பொது உற்று திமித்திமி நடம் இடு(ம்) பகிரதி எழுத்து அறி
ருத்திரி பகவதி கவுரி கை பொருள் பயனுக்கு உரை அடுகிய
சமைபவள் அமுதாக செகத்தை அகட்டு இடு நெடியவர்
கடையவள்
... அம்பலத்தில் திமித்திமி என நடனம் செய்யும் தேவி,
இலக்கணங்கள் அறிந்துள்ள ருத்திரன் தேவி, பகவதி, கெளரி,
ஒழுங்காக சொல்லும் பொருளும் போலச் சிவத்தோடு கலந்திட்டு
நிற்பவள், அமுதுருண்டை போல பூமியை வயிற்றில் அடக்கிய
நெடியோனாகிய திருமாலுக்குத் தங்கை,

அறத்தை வளர்த்திடு பர சிவை குலவதி திறத் தமிழைத்
தரு பழையவள் அருளிய சிறியோனே
... (காஞ்சியில் காமாட்சி
தேவியாக முப்பத்திரண்டு)** அறங்களையும் வளர்த்த பர சிவை,
குலச்சிறப்பமைந்தவள், (இயல், இசை, நாடகம் என்ற) முன்று
வகையான தமிழைத் தந்த முன்னைப் பழம் பொருளான உமை
அருளிய குழந்தையே,

செருக்கும் அரக்கர்கள் பொடி பட வடிவுளகரத்தில் அயில்
கொடு பொருது இமையவர் பணி திருத்தணி பொன் பதி
தனில் மயில் நடவிய பெருமாளே.
... கர்வம் கொண்ட அசுரர்கள்
பொடிபட்டு விழ, அழகிய கையில் வேல் கொண்டு சண்டை செய்து,
தேவர்கள் பணிந்து போற்றும் திருத்தணிகையாகிய அழகிய தலத்தில்
மயில் மீது நடனமிடும் பெருமாளே.


* மறைப் பொருளைத் தேவிக்கு உபதேசித்த போது, தேவியார் கவனக்
குறைவாக இருப்பதைக் கண்ட சிவபெருமான் நீ மீன் பிடிக்கும் வலைஞருக்கு
மகளாகுக. அப்போது உன்னை மணப்பேன் எனச் சபித்தார். மீனவள் வலைஞரால்
வளர்க்கப்பட்டு வந்தாள். சிவன் தேவிக்கு உபதேசித்த போது முருகனையும்,
கணபதியையும் உள்ளே விட்ட காரணத்தால் நந்தி தேவரும் சுறா மீனாக
ஆகுமாறு சபிக்கப்பட்டார். இந்தச் சுறாமீன் வலையில் அகப்படாது பல
இடர்களைச் செய்ததால் வலைஞர் அரசன் மீனைப் பிடிப்பவர்களுக்குத் தன்
பெண்ணை மணம் செய்விப்பேன் என அறிவித்தான். சிவபெருமான் வலைஞன்
போல வந்து மீனைப் பிடித்துத் தேவியை மணந்தார்.


** பெரிய புராணத்தில் கூறிய முப்பத்திரண்டு அறங்கள் பின்வருமாறு:

சாலை அமைத்தல், ஓதுவார்க்கு உணவு, அறுசமயத்தாருக்கும் உணவு,
பசுவுக்குத் தீனி, சிறைச் சோறு, ஐயம், தின்பண்டம் நல்கல், அநாதைகளுக்கு
உணவு, மகப்பெறுவித்தல், மகவு வளர்த்தல், சிசுக்களுக்குப் பால் நல்கல்,
அநாதைப் பிணம் சுடுதல், அநாதைகளுக்கு உடை, சுண்ணாம்பு பூசல்,
நோய்க்கு மருந்து, வண்ணார் தொழில், நாவிதத் தொழில், கண்ணாடி
அணிவித்தல், காதோலை போடுதல், கண் மருந்து, தலைக்கு எண்ணெய்,
ஒத்தடம் தருதல், பிறர் துயர் காத்தல், தண்ணீர்ப் பந்தல், மடம் கட்டுதல்,
தடாகம் அமைத்தல், சோலை வளர்த்தல், தோல் பதனிடல், மிருகங்களுக்கு
உணவு, ஏர் உழுதல், உயிர் காத்தல், கன்னிகாதானம்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.731  pg 1.732  pg 1.733  pg 1.734  pg 1.735  pg 1.736 
 WIKI_urai Song number: 303 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 291 - mugaththai minukki (thiruththaNigai)

mukaththaimi nukkika LasadikaL kapadikaL
     vizhiththuma ruttikaL keruvikaL thirudikaL
          mozhikkuLma yakkikaL vakaithanil nakaithanil ...... vithamAka

muzhiththuma yaRkoLu maRivili neRiyili
     puzhukkuda laipporu Lenamika eNiyavar
          muyakkama duththuzhi tharumadi yavanidar ...... ozhivAka

mikuththazha kaippeRu maRumuka saravaNa
     puyaththiLa kikkamazh naRaimalar thodaimika
          visaikkodu maippeRu marakatha kalapiyum ...... vadivElum

veLippade nakkini yiravodu pakalaRa
     thiruppathi yappuka zhamuthiyal kavisoli
          vithiththane zhuththinai tharavaru moruporu ...... LaruLAyO

pukaiththazha laikkodu thiripura meripada
     nakaiththava rukkida muRaipavaL valaimakaL
          poruppili makkiri pathipeRu mimaiyava ...... LapirAmi

pothutRuthi miththimi nadamidu pakirathi
     ezhuththaRi ruththiri pakavathi kavurikai
          porutpaya nukkurai yadukiya samaipavaL ...... amuthAkac

chekaththaiya kattidu nediyavar kadaiyavaL
     aRaththaiva Larththidu parasivai kulavathi
          thiRaththami zhaiththaru pazhaiyava LaruLiya ...... siRiyOnE

serukkuma rakkarkaL podipada vadivuLa
     karaththila yiRkodu poruthimai yavarpaNi
          thiruththaNi poRpathi thanilmayil nadaviya ...... perumALE.

......... Meaning .........

mukaththai minukkikaL asadikaL kapadikaL vizhiththu maruttikaL keruvikaL thirudikaL mozhikkuL mayakkikaL: These women apply too much showy make-up on their face. They are utter fools. They are treacherous. They intimidate people with bewitching eyes. They are very haughty. They resort to thievery. They lure people with their speech.

vakai thanil nakai thanil vithamAka muzhiththu mayal ko(L)Lum aRivili neRiyili puzhuk kudalaip poruL ena mika e(N)Niyavar muyakkam aduththu uzhitharum adiyavan idar ozhivAka: Caught in a dizzy spell after falling a victim to their tricks and speech, I have become obsessed with passion. I am a stupid person, lacking discipline. Contemplating on their body, that consists of worm-filled intestines, as if it is something significant, I have been yearning to hug them closely; in order that my miseries arising from such roaming about are removed,

mikuththa azhakaip peRum aRumuka saravaNa puyaththu iLakik kamazh naRai malar thodai mika visaik kodumaip peRu marakatha kalapiyum vadivElum veLippada enakku: Oh Lord with six exquisitely beautiful faces, Oh SaravaNA, kindly grant me the vision of the fragrant flower-garland filled with honey that heaves on Your hallowed shoulders, along with the fierce and green peacock that is able to fly at an immense speed and Your sharp spear

ini iravodu pakal aRa thirup pathiyap pukazh amuthu iyal kavi so(l)li vithith than ezhuththu inai thara varum oru poruL aruLAyO: so that Your pure grace prevails at all times, without the distinction of day or night, and the influence of Goddess Lakshmi is firmly implanted; for this, kindly preach to me the supreme and unique principle that enables me to sing Your glory (Thiruppugazh) in nectar-filled songs and that gradually erases the letters of destiny scribed By Lord Brahma!

pukaiththa azhalaik ko(N)du thiri puram eri pada nakaiththavarukku idam uRaipavaL valai makaL poruppil imak kiri pathi peRum imaiyavaL apirAmi: With smoke and flames, the Thiripuram was completely burnt down by His mere smile; She is concorporate on the left side of that Lord SivA; She came to the earth as the daughter of the fishermen*; She is Imayavalli, the daughter of HimavAn, King of the greatest of all mountains; She is exquisitely beautiful;

pothu utRu thimiththimi nadam idu(m) pakirathi ezhuththu aRi ruththiri pakavathi kavuri kai poruL payanukku urai adukiya samaipavaL amuthAka sekaththai akattu idu nediyavar kadaiyavaL: She is the Goddess who dances on the stage to the meter "thimiththimi"; She knows all aspects of grammar and is the consort of Rudran; She is Bhagavathi; She is Gowri; She stands merged with Lord SivA as a word and its apt meaning; devouring the earth, He held it in His stomach as if it were a ball of nectar, and She is the younger sister of that tall Lord VishNu;

aRaththai vaLarththidu para sivai kulavathi thiRath thamizhaith tharu pazhaiyavaL aruLiya siRiyOnE: (As KAmAkshi DEvi,) this Supreme Consort of SivA performed (thirty-two) religious duties** (in KAncheepuram); She has the most distinguished lineage; She delivered Tamil language with three different branches (namely, literature, music and drama); She is the Primeval and ancient principle in the form of Goddess UmA; and She kindly delivered You as Her child, Oh Lord!

serukkum arakkarkaL podi pada vadivuLa karaththil ayil kodu poruthu imaiyavar paNi thiruththaNi pon pathi thanil mayil nadaviya perumALE.: Shattering the arrogant demons to pieces, You fought with the spear in Your elegant hand, and chose this beautiful place, ThiruththaNigai, that is lauded in worship by the celestials, to dance here on Your peacock, Oh Great One!


* When Lord SivA was preaching the meaning of VEdAs to PArvathi DEvi, Her attention was diverted for a moment causing SivA to curse Her into a birth in a family of fishermen. He added that He would seek Her in marriage on earth. She was born in a royal fisherman's family and was reared by them. SivA had also punished Nandi (for having let in Murugan and GaNapathi while He preached to PArvathi) by cursing Nandi to be born as a shark. This shark evaded the nets of the fishermen and created havoc at the sea. The king of the fishermen offered his daughter in marriage to one who could catch that shark in a net. Lord SivA appeared in the disguise of a fisherman, caught the shark and won the princess' hand in marriage. .. ThiruviLaiyAdal PurANam).


** Thirty-two religious duties are listed in Periya PurANam as follows:

Road-laying; Food for teachers; Food for all the six kinds of religious people; Feeding the cows; Feeding the prisoners; Alms; Distribution of eatables; Feeding the orphans; Obstetrics; Orphanage; Feeding milk to babies; Cremation of destitute corpses; Clothing the orphans; Whitewashing old houses; Offering medicines; Washing others' clothes; Barber's work; Providing glasses for visually-impaired; Piercing ears and providing studs; Eyedrops for medication; Providing hair oil and hair cream; Fomentation for relief; Protecting others from perils; Free distribution of potable water; Provision of free accommodation; Provision of bathing facility; Rearing shady groves; Providing sandals and shoes; Feeding animals; Ploughing the field; Providing security guard; and Conducting marriages.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 291 mugaththai minukki - thiruththaNigai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]