திருப்புகழ் 261 கிறி மொழி  (திருத்தணிகை)
Thiruppugazh 261 giRimozhi  (thiruththaNigai)
Thiruppugazh - 261 giRimozhi - thiruththaNigaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதனத் தனதனத் தனதனத் தனதனத்
     தனதனத் தனதனத் ...... தனதான

......... பாடல் .........

கிறிமொழிக் கிருதரைப் பொறிவழிச் செறிஞரைக்
     கெடுபிறப் பறவிழிக் ...... கிறபார்வைக்

கெடுமடக் குருடரைத் திருடரைச் சமயதர்க்
     கிகள்தமைச் செறிதலுற் ...... றறிவேதும்

அறிதலற் றயர்தலுற் றவிழ்தலற் றருகலுற்
     றறவுநெக் கழிகருக் ...... கடலூடே

அமிழ்தலற் றெழுதலுற் றுணர்நலத் துயர்தலுற்
     றடியிணைக் கணுகிடப் ...... பெறுவேனோ

பொறியுடைச் செழியன்வெப் பொழிதரப் பறிதலைப்
     பொறியிலச் சமணரத் ...... தனைபேரும்

பொடிபடச் சிவமணப் பொடிபரப் பியதிருப்
     புகலியிற் கவுணியப் ...... புலவோனே

தறிவளைத் துறநகைப் பொறியெழப் புரமெரித்
     தவர்திருப் புதல்வநற் ...... சுனைமேவுந்

தனிமணக் குவளைநித் தமுமலர்த் தருசெருத்
     தணியினிற் சரவணப் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

கிறி மொழிக் கிருதரைப் பொறி வழிச் செறிஞரை ...
பொய்ம்மொழி பேசும் செருக்கு உள்ளவர்களை, ஐம்புலன்களின்
வழியே செல்லுபவர்களை,

கெடு பிறப்பு அற விழிக்கிற பார்வைக் கெடு மடக் குருடரைத்
திருடரை
... கெட்ட இப்பிறப்பு (நற் பிறப்பு) ஆகாமல் அழியும்படி
விழிக்கின்ற விழியை உடைய கெட்டவர்களை, அறிவில்லாத
குருடர்களை, திருடர்களை,

சமய தர்க்கிகள் தமைச் செறிதல் உற்று அறிவு ஏதும் அறிதல்
அற்று அயர்தல் உற்று அவிழ்தல் அற்று
... சமயவாதிகளை (நான்)
நெருங்குதலுற்று, அறிவு சற்றும் அறிதல் இல்லாமல், தளர்ச்சி
உற்று, (மனம் பக்தியால்) நெகிழ்தல் இல்லாமல்,

அருகல் உற்று அறவு(ம்) நெக்கு அழி கருக் கடல் ஊடே
அமிழ்தல் அற்று
... குறைபாடு அடைந்து மிகவும் கெட்டு அழிவு தரும்
பிறவிக் கடலுள்ளே அமிழ்ந்து போதல் நீங்கி,

எழுதல் உற்று உணர் நலத்து உயர்தல் உற்று அடியிணைக்கு
அணுகிடப் பெறுவேனோ
... முன்னுக்கு வந்து, நல்லுணர்வு பெறும்
நலமான வழியில் மேம்பாடு அடைந்து, உன் திருவடியிணையை
அணுகப் பெறுவேனோ?

பொறி உடைச் செழியன் வெப்பு ஒழிதரப் பறி தலைப் பொறி
இலச் சமணர் அத்தனை பேரும் பொடி பட
... அறிவுள்ள (கூன்)
பாண்டியனுடைய வெப்ப நோய் நீங்கவும், மயிர் பறிபடும் தலையராகிய
அறிவிலிகளாகிய சமணர்கள் அத்தனை பேரும் அழியவும்,

சிவ மணப் பொடி பரப்பிய திருப் புகலியில் கவுணியப்
புலவோனே
... சிவ மணத் திருநீற்றை (மதுரையில்) பரப்பினவரும்,
புகலியில் (சீகாழியில்*) உதித்த கவுணியர் குலப் புலவருமாகிய
திருஞான சம்பந்தரே,

தறி வளைத்து உற நகைப் பொறி எழப் புரம் எரித்தவர் திருப்
புதல்வ
... அழிவு உண்டாகும்படி புன்சிரிப்புப் பொறியை எழுப்பி,
திரி புரங்களை எரித்த சிவபெருமானுடைய நல்ல மகனே,

நல் சுனை மேவும் தனி மணக் குவளை நித்தமும் மலர் தரு ...
சிறந்த சுனையில் உள்ள ஒப்பற்ற நறு மணம் வீசும் குவளை நாள்தோறும்
பூவைத் தருகின்ற

செருத்தணியினில்** சரவணப் பெருமாளே. ... திருத்தணிகையில்
(வீற்றிருக்கும்) சரவணப் பெருமாளே.


* 'புகலி' சீகாழிக்கு உரிய பெயர்களில் ஒன்று.

சீகாழிக்கு உரிய பெயர்கள்:

சீகாழி - காளி என்னும் நாகம் பூஜித்த தலம்,

பிரமபுரம் - பிரமன் பூஜித்த தலம்,

வேணுபுரம் - கஜமுக அசுரனுக்குப் பயந்த வேணு என்னும் இந்திரன்
                  பூஜித்த தலம்,

தோணிபுரம் - பிரளய காலத்தில் தோணி போல மிதந்த காரணத்தால்
                  இப் பெயர் வந்தது,

பூந்தராய் - பூவும் தாரையும் பூஜித்த தலம்,

சிரபுரம் - அமிர்தம் வழங்கப்பட்டபோது திருமாலால் சிரம் தறிக்கப்பட்ட ராகு
                  கேதுக்கள் தலையைத் திரும்பப் பெற பூஜித்த தலம்,

புறவம் - புறாவான பிரஜாபதி என்னும் முனிவர் தம் உடல் மாமிசத்தைக்
                  கொடுத்து அரசனைக் காத்துப் பேறு பெற்ற தலம்,

சண்பை - சண்பை முனி எனப்பட்ட துர்வாசர் பூஜித்த தலம்,

கொச்சை - பராசர முனிவர் மற்ற ரிஷிகளின் சாபத்தால் துர்க்கந்தம் உடலில்
                  பெற்று, அது நீங்கப் பூசித்த தலம்,

வெங்குரு - பிரகஸ்பதி பூஜித்த தலம்,

கழுமலம் - ஆன்மாக்களின் மலம் கழுவப்படுகின்ற தலம்,

முதுநகர் - ,

புகலி -
            ... என்பன.


** செரு = போர். போர் முடிந்தும் கோபம் தணியாத முருகன் திருத்தணியில்
தங்கியதும் கோபம் தணிந்தது. முதலில் செருத்தணி என்றிருந்த பெயர்
திருத்தணியாக மாறியது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.681  pg 1.682  pg 1.683  pg 1.684 
 WIKI_urai Song number: 283 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 261 - giRi mozhi (thiruththaNigai)

kiRimozhik kirutharaip poRivazhic cheRinjaraik
     kedupiRap paRavizhik ...... kiRapArvaik

kedumadak kurudaraith thirudaraic chamayathark
     kikaLthamaic cheRithalut ...... RaRivEthum

aRithalat Rayarthalut Ravizhthalat Rarukalut
     RaRavunek kazhikaruk ...... kadalUdE

amizhthalat Rezhuthalut RuNarnalath thuyarthalut
     RadiyiNaik kaNukidap ...... peRuvEnO

poRiyudaic chezhiyanvep pozhitharap paRithalaip
     poRiyilac chamaNarath ...... thanaipErum

podipadac chivamaNap podiparap piyathirup
     pukaliyiR kavuNiyap ...... pulavOnE

thaRivaLaith thuRanakaip poRiyezhap puramerith
     thavarthirup puthalvanaR ...... chunaimEvun

thanimaNak kuvaLainith thamumalarth tharuseruth
     thaNiyiniR saravaNap ...... perumALE.

......... Meaning .........

kiRi mozhik kirutharaip poRi vazhic cheRinjarai: Those arrogant people who are compulsive liars, those who heed to their five sensory organs,

kedu piRappu aRa vizhikkiRa pArvaik kedu madak kurudaraith thirudarai: those evil ones with gazing eyes that destroy their ruined life altogether, without any hope of redemption; those blind fools bereft of any intellect, those thieves,

samaya tharkkikaL thamaic cheRithal utRu aRivu Ethum aRithal atRu ayarthal utRu avizhthal atRu: and those religious zealots were the ones I have been approaching; without learning anything to enhance my knowledge, becoming exhausted, and without my rigid heart melting through devotion,

arukal utRu aRavum nekku azhi karuk kadal UdE amizhthal atRu: I have become blemished, totally drowning in the sea of birth that destroys me; lest I end up in such a manner,

ezhuthal utRu uNar nalaththu uyarthal utRu adiyiNaikku aNukidap peRuvEnO: will I be able to rise, coming up in life, leading myself in the righteous path with a good feeling and attain Your hallowed feet?

poRi udaic chezhiyan veppu ozhitharap paRi thalaip poRi ilac chamaNar aththanai pErum podi pada: To cure the high fever of the intelligent king PANdiyan (with a hunch-back) and to destroy the entire foolish clan of ChamaNas, who had the custom of plucking the hair of one another,

siva maNap podi parappiya thirup pukaliyil kavuNiyap pulavOnE: You distributed the fragrant holy ash of SivA (in Madhurai) coming as Poet ThirugnAna Sambandhar in the lineage of kavuNiyars of Pukali (SeegAzhi*)!

thaRi vaLaiththu uRa nakaip poRi ezhap puram eriththavar thirup puthalva: He raised fiery sparks merely from His smile that destroyed Thiripuram completely; and You are the good son of that Lord SivA!

nal sunai mEvum thani maNak kuvaLai niththamum malar tharu: In its famous fountain, a fragrant blue lily blossoms every day

seruththaNiyinil saravaNap perumALE.: in this place SeruththaNi** (ThiruththaNigai), which is Your abode, Oh SaravaNA, the Great One!


* 'Pukali' is one of the names of SeekAzhi.

The various names of SeekAzhi are as follows:

1. VENupuram: The shrine where Indra named VENu worshipped to overcome his fear of a demon, GajamugA.
2. Thiruppukali: It is the place of refuge for the celestials who were terrified by the demon SUran.
3. Venguru: It is the shrine where Brahaspathi (Jupiter) worshipped.
4. PUntharAy: It is the shrine where Earth and ThArai worshipped.
5. Sirapuram: When the nectar was distributed by Lord VishNu to the celestials, Rahu and KEthu stealthily came as
     DEvAs and were beheaded by VishNu; at this shrine, they worshipped and got their heads back.
6. PuRavam: At this shrine a sage PrajApathi came in the disguise of a pigeon and offered his flesh as a sacrifice
     to save the king.
7. SaNpai: Sage DurvAsA, known as Sanpaimuni, worshipped at this shrine.
8. SeekAzhi: A serpent named KALi worshipped at this shrine.
9. Kochchai: Sage ParAsara was cursed by other sages and developed a stench all over his body which was removed
     after his worship at this shrine.
10. Kazhumalam: This is a shrine where all the sins of souls are washed away.
11. Piramapuram: This is a shrine where Lord Brahma offered worship.
12. ThONipuram: This shrine had the distinction of floating like a boat during the devastating flood at the end
     of the aeons.


** seru = war. Even after the war was over, Murugan remained enraged and later calmed down in ThiruththaNigai. ThaNi means calming down. The town was originally called seruththaNi before changing its name to ThiruththaNigai.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 261 giRi mozhi - thiruththaNigai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]