பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/681

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை அரிய ராதிபர் மலரய னிமையவர் நிலைபெ றாதிடர் படவுடன் முடுகியெ அசுரர் துாள்பட அயில்தொடு மறுமுக இளையோனே. அரிய கானக முறைகுற மகளிட கணவ னாகிய அறிவுள விதரண அமரர் நாயக சரவண பவதிற லுடையோனே; தரும நீதியர் மறையுளர் பொறையுளர் சரிவு றாநிலை பெறுதவ முடையவர் தளர்வி லாமண முடையவ ரறிவினர் பரராஜர். சகல லோகமு முடையவர் நினைபவர் பரவு தாமரை மலரடி யினிதுற தணிகை மாமலை மணிமுடி யழகியல் பெருமாளே.(34) 283. திருவடி பெற தனதனத் தனதனத் தனதனத் தனதனத் தனதனத் தனதனத் தனதான கிறிமொழிக் கிருதரைப் பொறிவழிச் செறிஞரைக் கெடுபிறப் பறவிழிக் கிறபார்வைக் கெடுமடக் குருடரைத் திருடரைச் சமயதர்க் கிகள்தமைச் செறிதலுற் றறிவேதும், அறிதலற் றயர்தலுற் றவிழ்தலற் றருகலுற் றறவுநெக் கழிகருக் கடலூடே அமிழ்தலற்றெழுதலுற் றுணர்நலத் துயர்தலுற் றடியினைக் கணுகிடப் பெறுவேனோ,