திருப்புகழ் 258 கனத்த அற  (திருத்தணிகை)
Thiruppugazh 258 ganaththaaRa  (thiruththaNigai)
Thiruppugazh - 258 ganaththaaRa - thiruththaNigaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனத்தனத் தனத்தனத் தனத்தனத் தனத்தனத்
     தனத்தனத் தனத்தனத் ...... தனதான

......... பாடல் .........

கனத்தறப் பணைத்தபொற் கழைப்புயத் தனக்கிரிக்
     கனத்தையொத் துமொய்த்தமைக் ...... குழலார்தங்

கறுத்தமைக் கயற்கணிற் கருத்துவைத் தொருத்தநிற்
     கழற்பதத் தடுத்திடற் ...... கறியாதே

இனப்பிணிக் கணத்தினுக் கிருப்பெனத் துருத்தியொத்
     திசைத்தசைத் தசுக்கிலத் ...... தசைதோலால்

எடுத்தபொய்க் கடத்தினைப் பொறுக்குமிப் பிறப்பறுத்
     தெனக்குநித் தமுத்தியைத் ...... தரவேணும்

பனைக்கரச் சினத்திபத் தனைத்துரத் தரக்கனைப்
     பயத்தினிற் பயப்படப் ...... பொரும்வேலா

பருப்பதச் செருக்கறத் துகைக்குமுட் பதத்தினைப்
     படைத்தகுக் குடக்கொடிக் ...... குமரேசா

தினைப்புனப் பருப்பதத் தினிற்குடிக் குறத்தியைச்
     செருக்குறத் திருப்புயத் ...... தணைவோனே

திருப்புரப் புறத்தியற் றிருத்தகுத் துநித்திலத்
     திருத்திசைத் திருத்தணிப் பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

கனத்த அறப் பணைத்த பொன் கழைப் புயத் தனக் கிரி ...
திண்ணியதாய் மிகப் பருமையுடைய அழகிய மூங்கில் போன்ற
மென்மையான தோள்களிலும், மலைகள் போன்ற மார்பகங்களிலும்,

கனத்தை ஒத்து மொய்த்த மைக் குழலார் தம் ... மேகத்தை ஒத்து
அடர்ந்த கரு நிறம் கொண்ட கூந்தலை உடைய (விலை) மாதர்களின்

கறுத்த மைக் க(ண்)ணில் கருத்து வைத்து ... கறுத்த மை
தீட்டிய கயல்மீன் போன்ற கண்களிலும் (எனது)
எண்ணங்களை வைத்து,

ஒருத்த நின் கழல் பதத்து அடுத்திடற்கு அறியாதே ... ஒப்பற்ற
உனது கழல் அணிந்த திருவடிகளைச் சேர்வதற்கு அறியாமல்,

இனப் பிணிக் கணத்தினுக்கு இருப்பு எனத் துருத்தி ஒத்து
இசைத்து
... தொகுதியான நோய்களின் கூட்டத்துக்கு இருப்பிடம்
என்று சொல்லும்படி, உலை ஊது கருவி போல் ஒலி செய்து
(மேலும் மேலும் பெருமூச்சு விட்டு),

அசைத்து அ(ச்) சுக்கிலம் தசை தோலால் எடுத்த பொய்க்
கடத்தினைப் பொறுக்கும்
... கட்டுண்ணும் அந்த இந்திரியங்கள்,
ஊன், தோல் இவைகளால் எடுக்கப்பட்ட நிலையில்லாத உடம்பைச்
சுமக்கின்ற

இப் பிறப்பு அறுத்து எனக்கு நித்த முத்தியைத் தரவேணும் ...
இந்தப் பிறப்பை ஒழித்து, எனக்கு அழியாத முத்தியைத் தந்தருள
வேண்டும்.

பனைக் கரச் சினத்து இபத்தனைத் துரத்து அரக்கனைப்
பயத்தினில் பயப்படப் பொரும் வேலா
... பனை மரம் போன்ற
துதிக்கையையும் கோபமும் கொண்ட வெள்ளை யானையாகிய
ஐராவதத்தை உடைய இந்திரனைத் துரத்தி ஓட்டிய சூரனை,
(சமுத்திரமாகிய) கடல் நீரில் பயப்படும்படி ஓட்டிச் சண்டை
செய்த வேலனே,

பருப்பதச் செருக்கு அறத் துகைக்கும் முள் பதத்தினைப்
படைத்த குக்குடக் கொடிக் குமரேசா
... மலைகளின் கர்வம்
அடங்கி ஒழியும்படி மிதித்துச் சவட்டும் முள் போன்ற நுனிகள்
உடைய கால்களைக் கொண்ட கோழியைக் கொடியாகக்
கொண்ட குமரேசனே,

தினைப் புனப் பருப்பதத்தினில் குடிக் குறத்தியைச் செருக்கு
உறத் திருப் புயத்து அணைவோனே
... தினைப் புனம் உள்ள
(வள்ளி) மலையில் குடிகொண்டிருந்த குறப்பெண்ணாகிய வள்ளியை
மகிழ்ச்சியுடன் அழகிய புயங்களில் அணைபவனே,

திருப் புரப் புறத்து இயல் திருத் தகுத் து நித்தல ... அழகிய
ஊரின் வெளிப்புறப் பகுதிகளில் (உள்ள வயல்களில்) லக்ஷ்மிகரம்
பொருந்திய, பரிசுத்தமான முத்துக்கள் விளங்கும்

திருத் திசைத் திருத்தணிப் பெருமாளே. ... புண்ணிய
திசையாகிய (தமிழ்நாட்டுக்கு) வடக்கில் உள்ள திருத்தணிகையில்
வீற்றிருக்கும் பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.611  pg 1.612  pg 1.613  pg 1.614 
 WIKI_urai Song number: 254 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 258 - ganaththa aRa (thiruththaNigai)

kanaththaRap paNaiththapoR kazhaippuyath thanakkirik
     kanaththaiyoth thumoyththamaik ...... kuzhalArthang

kaRuththamaik kayaRkaNiR karuththuvaith thoruththaniR
     kazhaRpathath thaduththidaR ...... kaRiyAthE

inappiNik kaNaththinuk kiruppenath thuruththiyoth
     thisaiththasaith thachukkilath ...... thasaithOlAl

eduththapoyk kadaththinaip poRukkumip piRappaRuth
     thenakkunith thamuththiyaith ...... tharavENum

panaikkarac chinaththipath thanaiththurath tharakkanaip
     payaththiniR payappadap ...... porumvElA

paruppathac cherukkaRath thukaikkumut pathaththinaip
     padaiththakuk kudakkodik ...... kumarEsA

thinaippunap paruppathath thiniRkudik kuRaththiyaic
     cherukkuRath thiruppuyath ...... thaNaivOnE

thiruppurap puRaththiyat Riruththakuth thuniththilath
     thiruththisaith thiruththaNip perumALE.

......... Meaning .........

kanaththa aRap paNaiththa pon kazhaip puyath thanak kiri: On their solid and robust shoulders that are soft like the bamboo, on their mountain-like bosom,

kanaththai oththu moyththa maik kuzhalAr tham kaRuththa maik ka(N)Nil karuththu vaiththu: on their cloud-like dense and black hair and on the kayal-fish-like dark painted eyes of these whores, I have let my thoughts dwell

oruththa nin kazhal pathaththu aduththidaRku aRiyAthE: without knowing the ways of attaining Your matchless and hallowed feet that wear the anklets;

inap piNik kaNaththinukku iruppu enath thuruththi oththu isaiththu: this body is the seat of a whole host of diseases and is blown like the bellows in the furnace (by repeated sighs);

asaiththu a(c)chukkilam thasai thOlAl eduththa poyk kadaththinai: and bound by the sensory organs, flesh and skin, all of which are wrapped within this unreal pot;

poRukkum ip piRappu aRuththu enakku niththa muththiyaith tharavENum: kindly sever this birth in which I am forced to bear the burden of that pot and grant me the immortal state of bliss!

panaik karac chinaththu ipaththanaith thuraththu arakkanaip payaththinil payappadap porum vElA: He has as a vehicle the angry, white elephant, AirAvadham, whose trunk is huge like a palm tree; that IndrA was chased by the demon SUran who was scared off by You into the sea when You fought him with Your spear, Oh Lord!

paruppathac cherukku aRath thukaikkum muL pathaththinaip padaiththa kukkudak kodik kumarEsA: The Rooster on Your staff has sharp nails in its paws that could trample the mountains wiping out their arrogance, Oh Lord KumarA!

thinaip punap paruppathaththinil kudik kuRaththiyaic cherukku uRath thirup puyaththu aNaivOnE: You proudly embrace, with Your hallowed shoulders, VaLLi, the damsel of the KuRavAs, residing in the millet-field of VaLLimalai!

thirup purap puRaththu iyal thiruth thakuth thu niththala: In the outer fields of this beautiful town, pure pearls abound, signifying the presence of the Goddess of Wealth, Lakshmi;

thiruth thisaith thiruththaNip perumALE.: this holy place, located in the auspicious northern side (of Tamil NAdu), is ThiruththaNigai, which is Your abode, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 258 ganaththa aRa - thiruththaNigai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]