திருப்புகழ் 252 ஓலை இட்ட  (திருத்தணிகை)
Thiruppugazh 252 Olaiitta  (thiruththaNigai)
Thiruppugazh - 252 Olaiitta - thiruththaNigaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தான தத்தன தத்தன தத்தன
     தான தத்தன தத்தன தத்தன
          தான தத்தன தத்தன தத்தன ...... தனதான

......... பாடல் .........

ஓலை யிட்டகு ழைச்சிகள் சித்திர
     ரூப மொத்தநி றத்திகள் விற்கணை
          யோடி ணைத்தவி ழிச்சிகள் சர்க்கரை ...... யமுதோடே

ஊறி யொத்தமொ ழிச்சிகள் புட்குர
     லோடு வைத்துமி ழற்றுமி டற்றிகள்
          ஓசை பெற்றது டிக்கொளி டைச்சிகள் ...... மணம்வீசும்

மாலை யிட்டக ழுத்திகள் முத்தணி
     வார ழுத்துத னத்திகள் குத்திர
          மால்வி ளைத்தும னத்தைய ழித்திடு ...... மடமாதர்

மார்ப சைத்தும ருட்டியி ருட்டறை
     வாவெ னப்பொருள் பற்றிமு யக்கிடு
          மாத ருக்குவ ருத்தமி ருப்பது ...... தணியாதோ

வேலை வற்றிட நற்கணை தொட்டலை
     மீத டைத்துத னிப்படை விட்டுற
          வீற ரக்கன்மு டித்தலை பத்தையு ...... மலைபோலே

மீத றுத்திநி லத்தில டித்துமெய்
     வேத லக்ஷுமி யைச்சிறை விட்டருள்
          வீர அச்சுத னுக்குந லற்புத ...... மருகோனே

நீலி நிட்களி நிர்க்குணி நித்தில
     வாரி முத்துந கைக்கொடி சித்திர
          நீல ரத்தின மிக்கஅ றக்கிளி ...... புதல்வோனே

நீற திட்டுநி னைப்பவர் புத்தியில்
     நேச மெத்தஅ ளித்தருள் சற்குரு
          நீல முற்றதி ருத்தணி வெற்புறை ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

ஓலை இட்ட குழைச்சிகள் சித்திர ரூபம் ஒத்த நிறத்திகள் ...
குண்டலங்களைக் காதணியாக அணிந்தவர்கள், அழகிய உருவம்
வாய்ந்த நிறத்தை உடையவர்கள்,

வில் கணையோடு இணைத்த விழிச்சிகள் சர்க்கரை
அமுதோடே ஊறி ஒத்த மொழிச்சிகள்
... வில் போன்ற
புருவங்களும், அம்பு போன்ற கண்களும் உடையவர்கள், சர்க்கரை
அமுதுடன் ஊறின சுவையைப் போன்ற (இனிய) பேச்சினை
உடையவர்கள்,

புட் குரலோடு வைத்து மிழற்றும் இடற்றிகள் ஓசை பெற்ற
துடிக்கொள் இடைச்சிகள்
... பறவைகளின் குரலுடன் மெல்லப்
பேசும் கண்டத்தை உடையவர்கள், ஒலி செய்யும் உடுக்கை
போன்ற இடையை உடையவர்கள்,

மணம் வீசும் மாலை இட்ட கழுத்திகள் முத்து அணி வார்
அழுத்து தனத்திகள்
... வாசனை வீசுகின்ற பூ மாலை அணிந்த
கழுத்தை உடையவர்கள், முத்து மாலை அணிந்த, ரவிக்கையை
அழுத்துகின்ற, மார்பகங்களை உடையவர்கள்,

குத்திர மால் விளைத்து மனத்தை அழித்திடு(ம்) மட மாதர் ...
வஞ்சகம் நிறைந்த காம மயக்கத்தை உண்டாக்கி ஆடவர்கள்
மனதைப் பாழாக்கும் விலைமாதர்கள்.

மார்பு அசைத்து மருட்டி இருட்டு அறை வா எனப் பொருள்
பற்றி முயக்கிடு(ம்) மாதருக்கு வருத்தம் இருப்பது
தணியாதோ
... மார்பை அசைத்து மோக மயக்கத்தை உண்டு
பண்ணி, இருண்ட படுக்கை அறைக்கு வரும்படி அழைத்து, கைப்
பொருளை அபகரித்துத் தழுவிடும் விலைமாதரருக்காக நான்
வேதனைப்படுவது தவிராதோ?

வேலை வற்றிட நல் கணை தொட்டு அலை மீது அடைத்து
தனிப் படை விட்டுற
... கடல் வற்றிப் போகும்படி சிறந்த
பாணத்தைச் செலுத்தி, கடலின் மேல் அணை இட்டு ஒப்பற்ற
வானரப்படையைச் செலுத்தும்படிச் செய்து,

வீறு அரக்கன் முடித்தலை பத்தையும் மலை போலே மீது
அறுத்து நிலத்தில் அடித்து
... கர்வம் கொண்ட இராவணன் முடி
தரித்த பத்துத் தலைகளையும் மலை விழுவது போல மேலே
அறுத்து தரையில் வீழ்த்தி,

மெய் வேத லக்ஷுமியைச் சிறை விட்டு அருள் வீர
அச்சுதனுக்கு நல் அற்புத மருகோனே
... சத்திய வேத
சொரூபியான லக்ஷ்மிதேவியாகிய சீதையை சிறையினின்றும்
விடுவித்து அருளிய வீரம் பொருந்திய ராமருக்குச் சிறந்த மருகனே.

நீலி நிட்களி நிர்க்குணி நித்தில வாரி முத்து நகைக் கொடி
சித்திர நீல ரத்தின மிக்க அறக் கிளி புதல்வோனே
... கரு நிறம்
கொண்டவள், பரிசுத்தமானவள், குணம் கடந்தவள், கடலின்றும்
எடுத்த முத்து போன்ற தூயவள், ஒளி வீசும் பற்களை உடையவள்,
அழகிய நீல ரத்தின அணியைக் கொண்டவள், தருமக் கிளி ஆகிய
பார்வதியின் மகனே,

நீறு அது இட்டு நினைப்பவர் புத்தியில் நேச மெத்த அளித்து
அருள் சற்குரு
... திருநீறு அணிந்து நினைக்கின்றவர்களின் மனதில்
நிறைய அன்பை அளித்திடும் சற்குருநாதனே,

நீலம் உற்ற திருத்தணி வெற்பு உறை பெருமாளே. ...
நீலோற்பல மலர்கள் நிறைந்த திருத்தணிகை மலையில் வீற்றிருக்கும்
பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.669  pg 1.670  pg 1.671  pg 1.672  pg 1.673  pg 1.674 
 WIKI_urai Song number: 278 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 252 - Olai itta (thiruththaNigai)

Olai yittaku zhaicchikaL siththira
     rUpa moththani RaththikaL viRkaNai
          yOdi Naiththavi zhicchikaL sarkkarai ...... yamuthOdE

URi yoththamo zhicchikaL putkura
     lOdu vaiththumi zhatRumi datRikaL
          Osai petRathu dikkoLi daicchikaL ...... maNamveesum

mAlai yittaka zhuththikaL muththaNi
     vAra zhuththutha naththikaL kuththira
          mAlvi Laiththuma naththaiya zhiththidu ...... madamAthar

mArpa saiththuma ruttiyi ruttaRai
     vAve napporuL patRimu yakkidu
          mAtha rukkuva ruththami ruppathu ...... thaNiyAthO

vElai vatRida naRkaNai thottalai
     meetha daiththutha nippadai vittuRa
          veeRa rakkanmu diththalai paththaiyu ...... malaipOlE

meetha Ruththini laththila diththumey
     vEtha lakshumi yaicchiRai vittaruL
          veera acchutha nukkuna laRputha ...... marukOnE

neeli nitkaLi nirkkuNi niththila
     vAri muththuna kaikkodi siththira
          neela raththina mikkA RakkiLi ...... puthalvOnE

neeRa thittuni naippavar puththiyil
     nEsa meththA LiththaruL saRkuru
          neela mutRathi ruththaNi veRpuRai ...... perumALE.

......... Meaning .........

Olai itta kuzhaicchikaL siththira rUpam oththa niRaththikaL: They wear the swinging ear-studs; they are of a lovely form and complexion;

vil kaNaiyOdu iNaiththa vizhicchikaL sarkkarai amuthOdE URi oththa mozhicchikaL: their eyebrows are like the bows and eyes like the arrows; their speech is sweet like sugar dipped in nectar;

put kuralOdu vaiththu mizhatRum idatRikaL Osai petRa thudikkoL idaicchikaL: their voice is soft like the cooing of the birds; their waist is slender like the resonating hand-drum;

maNam veesum mAlai itta kazhuththikaL muththu aNi vAr azhuththu thanaththikaL: they wear fragrant garlands around their neck; their imposing bosom, with tightly-fitted blouse, is bedecked with pearl necklace;

kuththira mAl viLaiththu manaththai azhiththidu(m) mada mAthar: these whores provoke deceptive passion and spoil the minds of men;

mArpu asaiththu marutti iruttu aRai vA enap poruL patRi muyakkidu(m) mAtharukku varuththam iruppathu thaNiyAthO: gesticulating with their breasts, they beckon men to the bed in the dark room and hug them after looting their belongings; will my yearning for such whores never abate?

vElai vatRida nal kaNai thottu alai meethu adaiththu thanip padai vittuRa: He wielded a unique arrow to dry out the sea and built a bridge on the sea to send a matchless army of monkeys;

veeRu arakkan mudiththalai paththaiyum malai pOlE meethu aRuththu nilaththil adiththu: He severed the ten arrogant and crowned heads of the demon, RAvaNan, felling them like mountains on the ground;

mey vEtha lakshumiyaic chiRai vittu aruL veera acchuthanukku nal aRputha marukOnE: and from the prison He liberated SeethA, who was the incarnation of Goddess Lakshmi, and who remained the symbol of the Supreme Truth, the VEdAs; You are the great nephew of that valorous RamA!

neeli nitkaLi nirkkuNi niththila vAri muththu nakaik kodi siththira neela raththina mikka aRak kiLi puthalvOnE: She has a black complexion; She is unblemished; She is above all virtues; She is pure like the pearl obtained from the sea; Her teeth are sparklingly bright; She wears a beautiful sapphire-blue ornament; She is a parrot full of charities; and You are the son of that PArvathi!

neeRu athu ittu ninaipvar puththiyil nEsa meththa aLiththu aruL saRkuru: You are the great Master showering plenty of love in the hearts of those devotees who wear the holy ash and think of You!

neelam utRa thiruththaNi veRpu uRai perumALE.: You reside on the mountain of ThiruththaNigai where blue lily flowers abound, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 252 Olai itta - thiruththaNigai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]