திருப்புகழ் 248 எலுப்பு நாடிகள்  (திருத்தணிகை)
Thiruppugazh 248 eluppunAdigaL  (thiruththaNigai)
Thiruppugazh - 248 eluppunAdigaL - thiruththaNigaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனத்த தானன தத்தன தத்தன
     தனத்த தானன தத்தன தத்தன
          தனத்த தானன தத்தன தத்தன ...... தனதான

......... பாடல் .........

எலுப்பு நாடிக ளப்பொடி ரத்தமொ
     டழுக்கு மூளைகள் மச்சொடு கொட்புழு
          விருக்கும் வீடதி லெத்தனை தத்துவ ...... சதிகாரர்

இறப்பர் சூதக வர்ச்சுத ரப்பதி
     யுழப்பர் பூமித ரிப்பர்பி றப்புட
          னிருப்பர் வீடுகள் கட்டிய லட்டுறு ...... சமுசாரம்

கெலிப்பர் மால்வலை பட்டுறு துட்டர்கள்
     அழிப்பர் மாதவ முற்றுநி னைக்கிலர்
          கெடுப்பர் யாரையு மித்திர குத்தரர் ...... கொலைகாரர்

கிருத்தர் கோளகர் பெற்றுதி ரிக்கள
     வரிப்பர் சூடக ரெத்தனை வெப்பிணி
          கெலிக்கும் வீடதை நத்தியெ டுத்திவ ...... ணுழல்வேனோ

ஒலிப்பல் பேரிகை யுக்ரவ மர்க்கள
     மெதிர்த்த சூரரை வெட்டியி ருட்கிரி
          யுடைத்து வானவர் சித்தர்து தித்திட ...... விடும்வேலா

உலுத்த ராவண னைச்சிர மிற்றிட
     வதைத்து மாபலி யைச்சிறை வைத்தவன்
          உலக்கை ராவிந டுக்கடல் விட்டவன் ...... மருகோனே

வலிக்க வேதனை குட்டிந டித்தொரு
     செகத்தை யீனவள் பச்சைநி றத்தியை
          மணத்த தாதைப ரப்ரம ருக்கருள் ...... குருநாதா

வனத்தில் வாழும யிற்குல மொத்திடு
     குறத்தி யாரைம யக்கிய ணைத்துள
          மகிழ்ச்சி யோடுதி ருத்தணி பற்றிய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

எலுப்பு நாடிகள் அப்பொடு இரத்தமொடு ... எலும்பு, நாடிகள்,
நீருடனும், ரத்தத்துடனும்,

அழுக்கு மூளைகள் மச்சொடு கொட்புழு ... அழுக்குகள்,
மூளைகள், தகுதியின்றி உள்ளிருக்கும் புழுக்கள்,

இருக்கும் வீடு ... இவையாவும் நிறைந்திருக்கும் வீடு இந்த உடல்.

அதிலெத்தனை தத்துவ சதிகாரர் ... அத்தகைய வீட்டில் எத்தனை
குணத்து மோசக்காரர்கள்,

இறப்பர் சூதகவர்ச் சுதரப்பதி யுழப்பர் ... அக்கிரமக்காரர்கள்,
சூதான உள்ளத்து மக்கள், தம் வறட்டுப் பேச்சால் ஊரையே
ஏமாற்றுபவர்கள்,

பூமிதரிப்பர் பிறப்புடனிருப்பர் ... பூமியில் தோன்றி, பிறந்த
பிறப்புடன் முன்னேற்றம் இன்றி இருப்பவர்கள்,

வீடுகள் கட்டி அலட்டுறு சமுசாரம் கெலிப்பர் ... வீடுகள்
பலவற்றைக் கட்டி மிகவும் அலட்டிக்கொண்டு வாழ்க்கையில் வெற்றி
பெற்றதைப் பேசித் திரிபவர்,

மால்வலை பட்டுறு துட்டர்கள் ... மோகவலையில் விழுந்து கிடக்கும்
துஷ்டர்கள்,

அழிப்பர் மாதவ முற்றுநி னைக்கிலர் ... பெரிய தவநிலையைப்பற்றி
சற்றேனும் நினைத்துப் பார்க்காமல் அழிப்பவர்கள்,

கெடுப்பர் யாரையு மித்திர குத்தரர் ... யாவரையும் கெடுப்பவர்கள்,
நண்பர்களுக்கும் வஞ்சனை செய்பவர்கள்,

கொலைகாரர் கிருத்தர் கோளகர் ... கொலைகாரர்கள், செருக்கு
மிகுந்தவர்கள், கோள் சொல்பவர்கள்

பெற்றுதி ரிக்களவரிப்பர் ... முதலியோருடன் சேர்ந்து திரிந்து
திருட்டுத்தொழிலில் ஈடுபடுபவர்கள்,

சூடக ரெத்தனை வெப்பிணி ... கோப நெஞ்சினர் ஆகியோரையும்,
எத்தனை வியாதிகள் உண்டோ அத்தனையையும்,

கெலிக்கும் வீடதை நத்தியெடுத்து ... வெற்றி பெற உழலும்
இத்தகைய உடலாகிய வீட்டை நான் ஆசைப்பட்டு எடுத்து

இவணுழல்வேனோ ... இந்த உலகில் அலைந்து திரிவேனோ?

ஒலிப்பல் பேரிகை யுக்ர அமர்க்களம் ... ஒலிக்கின்ற பல முரசு
வாத்தியங்கள் முழங்கும் கடுமையான போர்க்களத்தில்

எதிர்த்த சூரரை வெட்டியி ருட்கிரி யுடைத்து ... எதிர்த்துவந்த
அசுர வீரர்களை வெட்டி அழித்து, மாயை சூழ்ந்த கிரெளஞ்சமலையைப்
பிளந்து எறிந்து,

வானவர் சித்தர்துதித்திட விடும்வேலா ... தேவர்களும் சித்தர்களும்
வணங்கும்படியாகச் செலுத்திய வேலை உடையவனே,

உலுத்த ராவணனைச்சிரம் இற்றிட வதைத்து ... காமாந்தகனான
ராவணனைச் சிரம் அற்று விழ அவனை வதைத்தவனும்,

மாபலியைச்சிறை வைத்தவன் ... (தன் பாதத்தை அவன் தலைமேல்
வைத்து) மகாபலியைப் பாதாளத்தில் தள்ளிச் சிறை வைத்தவனும்,

உலக்கை ராவி நடுக்கடல் விட்டவன் மருகோனே ... இரும்பு
உலக்கையைப் பொடிப்பொடியாக்கி நடுக்கடலில் கரைத்தவனும்* ஆகிய
திருமாலின் மருகனே,

வலிக்க வேதனை குட்டி ... வலி உண்டாகும்படியாக வேதப் பிரமனை
சிரங்களில் குட்டினவனே,

நடித்து ஒரு செகத்தை யீனவள் பச்சைநிறத்தியை ... நடனம்
செய்து ஒப்பற்ற உலகத்தை ஈன்ற தாயான பச்சை நிறப் பார்வதியை

மணத்த தாதைப ரப்ரம ருக்கருள் குருநாதா ... மணந்த
தந்தையாகிய பரப்பிரம்மப் பொருளான சிவபிரானுக்கு உபதேசித்து
அருளிய குருநாதனே,

வனத்தில் வாழுமயிற்குலம் ஒத்திடு ... காட்டிலே வாழும்
மயிலினம் போன்ற அழகியான

குறத்தியாரைம யக்கிய ணைத்து ... குறத்தியாகிய வள்ளிதேவியை
மயக்கி அணைத்து,

உள மகிழ்ச்சி யோடுதிருத்தணி பற்றிய பெருமாளே. ...
மனமகிழ்ச்சியுடன் திருத்தணித்தலத்தில் பற்றுடன் வீற்றிருக்கும்
பெருமாளே.


* யாதவர்கள் தங்களுள் சாம்பன் என்பவனுக்கு கர்ப்பிணி வேஷமிட்டு, துர்வாச
முனிவரை இவளுக்குப் பிறப்பது ஆணோ பெண்ணோ எனக் கேட்க, கோபமடைந்த
துர்வாசர் ஓர் இரும்பு உலக்கை பிறக்கும், அதுவே யாதவர் குலத்தை அழிக்கும் என்று
சபித்தார். இதை அறிந்த கண்ணன், பிறந்த உலக்கையைப் பொடியாக்கி நடுக்கடலில்
கரைக்கச் செய்தான். பின்னர் உலக்கைப் பொடி கரையிலே வந்து கோரைப்புல்லாக
முளைக்க, யாதவர் தம்முள் கலகம் மூண்டதும் அப்புல்லைப் பிடுங்கி ஒருவரை
மற்றவர் குத்தி இறந்தனர். இரும்புத் துண்டு ஒன்று மீனின் வயிற்றில் வளர,
அம்மீனைப் பிடித்த ஒரு வேடன் வயிற்றிலிருந்த துண்டைத் தன் அம்புநுனியில்
வைத்தான். கண்ணனின் இறுதி நாளன்று தூக்கி வைத்திருந்த கண்ணனின்
பாதத்தைப் பறவையென எண்ணி வேடன் அந்த அம்பை எய்தான். யாதவகுலத்தில்
கடைசியாக எஞ்சிய கண்ணனும் பரமபதம் அடைந்தான்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.643  pg 1.644  pg 1.645  pg 1.646 
 WIKI_urai Song number: 268 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 248 - eluppu nAdigaL (thiruththaNigai)

eluppu nAdika Lappodi raththamo
     dazhukku mULaikaL maccodu kodpuzhu
          virukkum veedathi leththanai thaththuva ...... sathikArar

iRappar cUthaka varccutha rappathi
     yuzhappar pUmitha ripparpi Rappuda
          niruppar veedukaL kattiya lattuRu ...... samusAram

kelippar mAlvalai pattuRu thuttarkaL
     azhippar mAdhava mutRuni naikkilar
          keduppar yAraiyu miththira kuththarar ...... kolaikArar

kiruththar kOLakar petRuthi rikkaLa
     varippar cUdaka reththanai veppiNi
          kelikkum veedathai naththiye duththiva ...... NuzhalvEnO

olippal pErikai yukrava markkaLa
     methirththa cUrarai vettiyi rutkiri
          yudaiththu vAnavar siththarthu thiththida ...... vidumvElA

uluththa rAvaNa naiccira mitRida
     vathaiththu mApali yaicciRai vaiththavan
          ulakkai rAvina dukkadal vittavan ...... marukOnE

valikka vEthanai kuttina diththoru
     sekaththai yeenavaL paccaini Raththiyai
          maNaththa thAthaipa raprama rukkaruL ...... gurunAthA

vanaththil vAzhuma yiRkula moththidu
     kuRaththi yAraima yakkiya NaiththuLa
          makizhcci yOduthi ruththaNi patRiya ...... perumALE.

......... Meaning .........

eluppu nAdika Lappodi raththamodu: The bones, the veins, water, blood,

azhukku mULaikaL maccodu kodpuzhu: filthy substances, brains and worthless worms

irukkum veedu: are contained in this house, that is called the body.

athil eththanai thaththuva sathikArar: In this house, how many flouters of ethical principles live?!

iRappar cUthaka varccutha rappathi yuzhappar: Immoral and scheming ones, treacherous people, those who deceive the entire town with their tall talks,

pUmitha ripparpi Rappuda niruppar: those who never progress even a bit since their birth,

veedukaL kattiya lattuRu samusAram kelippar: people who fuss around building several houses proclaiming their success boastfully,

mAlvalai pattuRu thuttarkaL: those wicked ones caught in the web of lust,

azhippar mAdhava mutRuni naikkilar: those sinners totally oblivious of the value of penance,

keduppar yAraiyu miththira kuththarar: those who corrupt everyone and are capable of ditching even their own friends,

kolaikArar kiruththar kOLakar petRuthirik kaLavarippar: those thieves who roam about in the company of murderers, arrogant ones and tale bearers,

cUdaka reththanai veppiNi: and those hot-headed ones occupy this house; how many diseases ail this body?!

kelikkum veedathai naththiye duththu ivaNuzhalvEnO: Why should I willingly enter such a house that strives to conquer (all those people and diseases) and roam around miserably in this world?

olippal pErikai yukrava markkaLa: To the loud beating of several drums in the background of the fierce battlefield,

methirththa cUrarai vetti: many demons advanced menacingly, and they were all destroyed;

yirutkiriyudaiththu: the dark delusive mount Krouncha was shattered;

vAnavar siththarthu thiththida vidumvElA: and the celestials and sidhdhAs (achievers through penance) venerated You when You wielded the Spear!

uluththa rAvaNa naiccira mitRida vathaiththu: He knocked down the heads of lustful RAvaNA and killed him;

mApali yaicciRai vaiththavan: He sent Mahabali to the prison in the nether world (by placing His foot on his head);

ulakkai rAvinadukkadal vittavan: He scraped the steel pestle into powder and mixed it in mid-sea*;

marukOnE: He is Lord Vishnu, and You are His nephew!

valikka vEthanai kutti: The heads of BrahmA, the authority on VEdAs, were smacked with Your knuckles!

nadiththoru sekaththai yeenavaL paccaini Raththiyai: She is the dancing Goddess; She delivered the entire universe; She has a green complexion;

maNaththa thAthaipa raprama rukkaruL gurunAthA: that PArvathi is wedded to our Father, Lord SivA, the Supreme Lord; and You preached to that SivA, Oh Great Master!

vanaththil vAzhuma yiRkula moththidu: She bears resemblance to the peacock family, living in the forest of VaLLimalai;

kuRaththi yAraima yakkiya Naiththu: She is the damsel of the KuravAs; You hugged that VaLLi after enticing her;

uLamakizhcci yOduthi ruththaNi patRiya perumALE.: and with immense happiness, You sought ThiruththaNigai as Your abode, Oh Great One!


* Once, a few boys of Krishna's yAdhava clan dressed up a boy Samban, as a pregnant woman. They teased Sage Durvasar asking him if the child would be a boy or a girl. Enraged Durvasar cursed that a steel pestle would be born which would annihilate the entire yAdhava clan. When Krishna heard about the curse after the steel pestle was born, He scraped it into fine powder and poured it in mid-sea. Particles of the powder reached the shore and grew into wild weeds. Later, a riot broke out among the yAdhavas who fought plucking the weeds and killed each other. One speck of the steel powder was swallowed by a fish that was caught by a hunter. When the hunter cut open the fish and found a sharp steel piece, he fixed it on the tip of his arrow. That is the arrow that killed Krishna when He was reclining on a branch with His foot up as the hunter mistook Krishna's foot for a bird.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 248 eluppu nAdigaL - thiruththaNigai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]