பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/643

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை 268. அலைச்சல் அற தனத்த தானன தத்தன தத்தன தனத்த தானன தத்தன தத்தன தனத்த தானன தத்தன தத்தன தனதான எலுப்பு நாடிக ளப்பொ டிரத்தமொ டழுக்கு முளைகள் மச்சொடு கொட்புழு விருக்கும் வீடதி லெத்தனை தத்துவ சதிகாரர். இறப்பர் சூதக வர்ச்சூத ரப்பதி யுழப்பர் பூமித ரிப்பர்பி றப்புட ருப்பர் வீடுகள் கட்டிய லட்டுறு சமுசாரம், கெலிப்பர் மால்வலை பட்டுறு துட்டர்கள் அழிப்பர் மாதவ முற்று நினைக்கிலர் கெடுப்பர் யாரையு மித்திர குத்திரர் கொலைகாரர். ’கிருத்தர் கோளகர் பெற்றுதி ரிக்கள வரிப்பர் சூடக ரெத்தனை வெப்பிணி கெலிக்கும் வீடதை நத்தியெடுத்திவ னுழல்வேனோ, ஒலிப்பல் பேரிகை யுக்ரவ மர்க்கள மெதிர்த்த சூரரை வெட்டிfயி ருட்கிரி யுடைத்து விானவர் சித்தர்து தித்திட விடும்வேலா. உலுத்த ராவன னைச்சிர மிற்றிட வதைத்து #மாபலி யைச்சிறை வைத்தவன் Sஉலக்கை ராவிந டுக்கடல் விட்டவன் மருகோனே: ’கிருத்தர் - செருக்குள்ளவர். tஇருள் கிரி - இருள் மாயை செய்த கிரவுஞ்ச கிரி. "அன்ன தோர் வரை அகமெலாம் ஆயிரங் கதிரின், மன்னன் ஏகுறா இருள் நிலம் போன்றுவை கியதே" - கந்தபுராணம் தாரகன் வதை - 89, 4மாவலியைச் சிறை வைத்தது: திருமால் காசிபரிடத்து வாமனராய் அவதரித்து அசுர சக்ரவர்த்தி மாபலியிடம் மூன்றடி மண் யாசித்தார். இது விஷ்ணுவின் மாயை என்று (171-ம் பக்கம் பார்க்க)