திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 229 மகர கேதனத்தன் (சுவாமிமலை) Thiruppugazh 229 magarakEdhanaththan (swAmimalai) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனன தான தத்த தனன தான தத்த தனன தான தத்த ...... தனதான ......... பாடல் ......... மகர கேத னத்த னுருவி லானெ டுத்து மதுர நாணி யிட்டு ...... நெறிசேர்வார் மலைய வேவ ளைத்த சிலையி னூடொ ளித்த வலிய சாய கக்கண் ...... மடமாதர் இகழ வாச முற்ற தலையெ லாம்வெ ளுத்து இளமை போயொ ளித்து ...... விடுமாறு இடைவி டாதெ டுத்த பிறவி வேர றுத்து னினிய தாள ளிப்ப ...... தொருநாளே அகில மேழு மெட்டு வரையின் மீது முட்ட அதிர வேந டத்து ...... மயில்வீரா அசுரர் சேனை கெட்டு முறிய வான வர்க்கு அடைய வாழ்வ ளிக்கு ...... மிளையோனே மிகநி லாவெ றித்த அமுத வேணி நிற்க விழைசு வாமி வெற்பி ...... லுறைவோனே விரைய ஞான வித்தை யருள்செய் தாதை கற்க வினவ வோது வித்த ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... மகர கேதனத்தன் உருவு இலான் எடுத்து மதுர நாணி இட்டு ... மீன் கொடியை உடையவனும், உருவம் இல்லாதவனுமாகிய மன்மதன் கையில் எடுத்து, இனிமை தரும் (கரும்பு வில்லில்) நாணை இட்டு, நெறி சேர்வார் மலையவே வளைத்த சிலையின் ஊடு ஒளித்த ... நல்ல நெறியில் இருப்பவர்களும் மயங்கித் திகைக்கும்படி வளைத்த வில்லின் உள்ளே மறைத்து வைத்த வலிய சாயகக் கண் மட மாதர் இகழ ... வலிய அம்பாகிய கண்ணை உடைய அழகிய (விலை) மாதர்கள் இகழும்படி, வாசம் உற்ற தலை எ(ல்)லாம் வெளுத்து ... (ஒரு காலத்தில்) மணம் இருந்த தலையின் கருமயிர் முழுமையும் வெளுத்து, இளமை போய் ஒளித்து விடுமாறு ... இளமை என்பது கடந்துபோய் எங்கோ மறைந்து புதைந்துவிடும்படி, இடை விடாது எடுத்த பிறவி வேர் அறுத்து ... இடைவிடாமல் இதுவரை நான் எடுத்த பிறவி என்பதின் வேரை அறுத்து, உன் இனிய தாள் அளிப்பது ஒரு நாளே ... உனது இனிமையான திருவடியை நீ தந்து அருளும் ஒரு நாள் கிட்டுமோ? அகிலம் ஏழும் எட்டு வரையின் மீது முட்ட அதிரவே நடத்தும் மயில் வீரா ... ஏழு உலகங்கள் மீதும், அஷ்ட கிரிகளின் மீதும் முட்டும்படியாக அதிரவே செலுத்துகின்ற மயில் வீரனே, அசுரர் சேனை கெட்டு முறிய வானவர்க்கு அடைய வாழ்வு அளிக்கும் இளையோனே ... அசுரர்களின் சேனைகள் கெட்டு முறிய, தேவர்களுக்கு முழு வாழ்வை அளித்த இளையவனே, மிக நிலா எறித்த அமுத வேணி நிற்க விழை சுவாமி வெற்பில் உறைவோனே ... மிகவும் நிலவொளியை வீசுகின்ற அமுத சடையராகிய சிவபெருமான் உன்முன் நின்று கேட்க விரும்புகின்ற சுவாமி மலையில் (உபதேச கோலத்தில்) வீற்றிருப்பவனே, விரைய ஞான வித்தை அருள் செய் தாதை கற்க வினவ ஓதுவித்த பெருமாளே. ... விரைவில் ஞான மூலப் பொருளை (அடியார்களுக்கு) அருள் செய்கின்ற தந்தையாகிய சிவபெருமான், தான் அதனை அறிய வேண்டிக் கற்க, அவர் கேட்க அப்பொருளை அவருக்கு உபதேசித்த பெருமாளே. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 1.541 pg 1.542 pg 1.543 pg 1.544 WIKI_urai Song number: 226 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
'குருஜி' ராகவன் அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள் 'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
Song 229 - magara kEdhanaththan (SwAmimalai) makara kEtha naththa nuruvi lAne duththu mathura nANi yittu ...... neRisErvAr malaiya vEva Laiththa silaiyi nUdo Liththa valiya sAya kakkaN ...... madamAthar ikazha vAsa mutRa thalaiye lAmve Luththu iLamai pOyo Liththu ...... vidumARu idaivi dAthe duththa piRavi vEra Ruththun iniya thALa Lippa ...... thorunALE akila mEzhu mettu varaiyin meethu mutta athira vEna daththu ...... mayilveerA asurar sEnai kettu muRiya vAna varkku adaiya vAzhva Likku ...... miLaiyOnE mikani lAve Riththa amutha vENi niRka vizhaisu vAmi veRpi ...... luRaivOnE viraiya njAna viththai yaruLsey thAthai kaRka vinava vOthu viththa ...... perumALE. ......... Meaning ......... makara kEthanaththan uruvu ilAn eduththu mathura nANi ittu: He holds the staff of a fish; He is without a shape or form; that Manmathan (God of Love) takes in His hand, the sweet bow of sugarcane and pulls the string; neRi sErvAr malaiyavE vaLaiththa silaiyin Udu oLiththa: hidden behind the arched bow are the whores who are capable of ensnaring and tormenting even the virtuous ones; valiya sAyakak kaN mada mAthar ikazha: to the jeering of those pretty women who have powerful arrow-like eyes, vAsam utRa thalai e(l)lAm veLuththu: my (erstwhile) dark and fragrant hair has become totally white; iLamai pOy oLiththu vidumARu: my bygone youth has been buried somewhere; idai vidAthu eduththa piRavi vEr aRuththu: to sever the root of birth which I have taken without break, un iniya thAL aLippathu oru nALE: will You kindly grant me Your sweet hallowed feet one of these days? akilam Ezhum ettu varaiyin meethu mutta athiravE nadaththum mayil veerA: Oh valorous One! You drive Your peacock so powerfully that it hits the seven worlds and the eight mountains, sending shock waves! asurar sEnai kettu muRiya vAnavarkku adaiya vAzhvu aLikkum iLaiyOnE: Oh Young One, You destroy the armies of the demons, restoring fully the life of the celestials! mika nilA eRiththa amutha vENi niRka vizhai suvAmi veRpil uRaivOnE: You reside in SwAmimalai (in the posture of a Master) before Lord SivA, Whose matted nectar-sweet hair bears the moon radiating brilliant light, and Who stood before You ardently; viraiya njAna viththai aruL sey thAthai kaRka vinava Othuviththa perumALE.: Lord SivA Who enables His devotees to quickly learn the fundamental principle of True Knowledge was Himself eager to be taught, and You imparted that knowledge to Him, Oh Great One! |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |