பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/544

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவேரகம்) திருப்புகழ் உரை 71 இகழும்படியாக (ஒரு காலத்தில் மணம் இருந்த தலை முழுமையும் வெளுத்து (அல்லது இகழ்தற்கிடம் நிறைய ஏற்பட்டுத் தலையெலாம் வெளுத்து), இளமை என்பது போய் ஒளித்து இடைவிடாமல் நான் எடுத்து வந்த பிறவி என்பதின் வேரை அறுத்து உன்னுடைய இனிய திருவடியைத் தருவதான ஒரு நாள் (எனக்குக் கிடைக்குமா?) உலகங்கள் ஏழின் மீதும், அஷ்டகிரிகளின் மீதும் முட்டும் படியாக (அல்லது முழுவதும்) அதிரும்படியாகவே செலுத்துகின்ற மயில் வீரனே! அசுரர்களுடைய சேனை கெட்டு முறிய (வைத்துத் தேவர்களுக்கு முழுவாழ்வை அளித்த இளையோனே! மிகவும் நிலவொளியை வீசுகின்ற அமுதச் சடையார் (சிவபிரான்) நின்று கேட்க, விரும்புகின்ற சுவாமி மலையில் வீற்றிருந்து (உபதேசித்தவனே) விரைவில், ஞான மூலப்பொருளை (பிரணவப் பொருளை) (அடியார்க்கு அருள் செய்கின்ற பிதா (சிவபிரான்) அறிய வேண்டிக் கேட்க, அதை அவருக்கு உபதேசித்த பெருமாளே (விரைவில் ஒதுவித்த பெருமாளே!) (இனிய தாள் அளிப்ப தொகு நாளே!) 227 கடுமையாய் விரைந்தெழுந்த கரிய விடத்தை உண்ட (விடம் போன்ற இரண்டு கண்களாகிய வேலினால் உள்ளம், மயங்கித் தாமரையின் மணமுள மொட்டுப் போன்ற முலைமேல் - முழுகுகின்ற காதலை மறந்து பரம ஞான ஒளி மிகுந்து (உனது) முகங்கள் ஆறினையும் மிகவும் விரும்பிச் சோர்வு இன்றி, நன்னாடு போற்றி", "முருகன் சங்கத் திருப்பவன் நம் முக்கட் கடவுள் நிற்பவன்" எனத் திருவுாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் போற்றுகின்றது. S சிவபிரான் ஒரு (rணநேரம்) தியானத்திருக்க முருகவேள் அவருக்குப் பிரணவப் பொருளைத் திருத்தணிகையில் உபதேசித் தனரென்றும் அதனால் தணிகைக்கு "கூடிணிகாசலம்" எனப் பெயர் போந்ததென்றும் தணிகைப் புராணம் கூறும்