திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 204 இராவினிருள் போலும் (சுவாமிமலை) Thiruppugazh 204 irAviniruLpOlum (swAmimalai) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனாதனன தானம் தனாதனன தானம் தனாதனன தானம் ...... தனதான ......... பாடல் ......... இராவினிருள் போலும் பராவுகுழ லாலும் இராமசர மாகும் ...... விழியாலும் இராகமொழி யாலும் பொறாதமுலை யாலும் இராதஇடை யாலும் ...... இளைஞோர்நெஞ் சராவியிரு போதும் பராவிவிழ வேவந் தடாதவிலை கூறும் ...... மடவாரன் படாமலடி யேனுஞ் சுவாமியடி தேடும் அநாதிமொழி ஞானந் ...... தருவாயே குராவினிழல் மேவுங் குமாரனென நாளுங் குலாவியினி தோதன் ...... பினர்வாழ்வே குணாலமிடு சூரன் பணாமுடிக டோறுங் குடாவியிட வேலங் ...... கெறிவோனே துராலுமிகு தீமுன் பிராதவகை போலுந் தொடாமல்வினை யோடும் ...... படிநூறுஞ் சுபானமுறு ஞானந் தபோதனர்கள் சேருஞ் சுவாமிமலை வாழும் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... இராவினிருள் போலும் பராவுகுழலாலும் ... இரவின் இருட்டைப் போல் பரவி கருத்த கூந்தலினாலும், இராமசர மாகும் விழியாலும் ... ராமனுடைய அம்பைப் போன்ற கூர்மையான கண்களாலும், இராகமொழியாலும் ... இசை நிரம்பிய வார்த்தைகளாலும், பொறாதமுலையாலும் ... பாரமான மார்பகங்களாலும், இராதஇடையாலும் ... இடுப்பு இருக்கிறதோ இல்லையோ என்னும்படியான மெல்லிய இடையாலும், இளைஞோர்நெஞ்சராவி ... இளம் ஆண்களின் இதயத்தை ரம்பம் போல் அறுத்து, இரு போதும் பராவிவிழ வேவந்து ... காலையும் மாலையும் அவர்கள் தங்களைத் துதிசெய்து வீழ்த்துமாறு வந்து, அடாதவிலை கூறும் மடவார் ... தகாதபடி அதிகமாக விலையைக் கூறி பேரம்செய்யும் விலைமகளிரின் அன்பு அடாமல் அடியேனுஞ் சுவாமியடி தேடும் ... ஆசையின் பிடியில் அகப்படாமல், அடியேனும் கடவுளாகிய உனது திருவடிகளைத் தேடும் அநாதிமொழி ஞானந் தருவாயே ... ஆதியே இல்லாத ஞானமொழியை நீ எனக்குத் தந்தருள்வாயாக. குராவின் நிழல் மேவுங் குமாரனென ... (திருவிடைக்கழியிலுள்ள) குராமரத்தின் நிழலின்கீழ் அமர்ந்துள்ள குமாரக்கடவுளே என்று நாளுங் குலாவியினிது ஓது அன்பினர்வாழ்வே ... தினந்தோறும் அன்புற்று அன்போடு துதிக்கும் அடியார்களின் நிதியே, குணாலமிடு சூரன் பணாமுடிகள் தோறும் ... வீராவேசக் கூக்குரலிடும் சூரனின் பருத்த முடிகள் யாவும் குடாவியிட வேல் அங்கு எறிவோனே ... குடைந்தெடுத்து வளைத்த வேலை அவ்விடத்தில் செலுத்தியவனே, துராலும் மிகு தீமுன்பு இராதவகை போலும் ... காய்ந்த செத்தையும் மிகுத்து எரியும் நெருப்பின் முன்பு ஒன்றுமே இல்லாது வெந்து போகும் வகைபோல, தொடாமல்வினை யோடும் படிநூறும் ... தம்மை அணுகாது விலகிப்போகும்படி வினைகளைப் பொடிபடச் செய்யும் சுபானமுறு ஞானந் தபோதனர்கள் சேரும் ... நல்வழிகளையே உட்கொள்ளும் ஞானத் தவசீலர்கள் சேர்ந்துள்ள சுவாமிமலை வாழும் பெருமாளே. ... சுவாமிமலையில் வீற்றிருக்கும் பெருமாளே. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 1.489 pg 1.490 pg 1.491 pg 1.492 WIKI_urai Song number: 201 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை Sorry, no audio recordings for this song |
Song 204 - irAviniruL pOlum (SwAmimalai) irAviniruL pOlum parAvukuzha lAlum irAmasara mAkum ...... vizhiyAlum irAkamozhi yAlum poRAthamulai yAlum irAthaidai yAlum ...... iLainjOrnenj carAviyiru pOthum parAvivizha vEvan thadAthavilai kURum ...... madavAran padAmaladi yEnum suvAmiyadi thEdum anAthimozhi njAnam ...... tharuvAyE kurAvinizhal mEvum kumAranena nALum kulAviyini thOthan ...... pinarvAzhvE kuNAlamidu sUran paNAmudika dORum kudAviyida vElang ...... keRivOnE thurAlumiku theemun pirAthavakai pOlum thodAmalvinai yOdum ...... padinURum supAnamuRu njAnan thapOthanarkaL sErum suvAmimalai vAzhum ...... perumALE. ......... Meaning ......... irAviniruL pOlum parAvukuzha lAlum: With their hair black like the pitch dark night, irAmasara mAkum vizhiyAlum: their eyes sharp as the arrows of Rama, irAkamozhi yAlum poRAthamulai yAlum: their musical voice, their heavy bosoms, irAthaidai yAlum iLainjOrnenjarAvi: and their waistline so thin as if the waist does not exist for them, (those whores) torment the hearts of the youth like a rasping saw; iru pOthum parAvivizha vEvanthu: both in the morning and in the evening, these men spread around the women and fall for them; adAthavilai kURum madavAr: and they demand exorbitant price for their services. anpadAmaladi yEnum suvAmiyadi thEdum: I do not want to be victimised by lust for them. Instead, I am seeking the feet of the Lord, anAthimozhi njAnam tharuvAyE: which feet symbolise the true knowledge without origin. Kindly bless me with that knowledge. kurAvinizhal mEvum kumAranena nALum kulAviyini thOthanpinar vAzhvE: You are the Treasure of those loving devotees who praise You daily saying "Oh Kumara, You are seated under the shade of KurA Tree (at Thiruvidaikkazhi)!" kuNAlamidu sUran paNAmudika dORrum: The huge heads of the haughty and loud-mouthed demon, SUran, kudAviyida vElang keRivOnE: were pierced and shattered by the Spear wielded by You! thurAlumiku theemun pirAthavakai pOlum: Like the dry leaves placed in intense fire are completely burnt down, thodAmalvinai yOdum padinURum supAnamuRu njAnan thapOthanarkaL sErum: the karmas flee away from the wise sages, leaving them unscathed; these sages have imbibed good virtues and assemble in suvAmimalai vAzhum perumALE.: SwAmimalai, which is Your abode, Oh Great One! |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |